Latest Updates
-
உங்க வீட்டில் பணம் தங்கமாட்டீங்குதா? அப்ப பணம் வெக்குற இடத்துல இந்த பொருட்களை வெக்காதீங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அனைவரின் மீதும் உண்மையான அக்கறை காட்டும் அன்பானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க சருமத்தில் அசிங்கமா தோல் உரியுதா? அப்ப இந்த நேச்சுரல் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
பூச்சி மற்றும் வண்டுகள் அரிசியை நெருங்கவே கூடாதா? அப்ப இந்த பொருட்களில் ஒன்றை அரிசியில் போட்டு வையுங்க -
அக்டோபர் 30-ல் அஸ்தமிக்கும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்... -
கோடிகளில் விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காளான் வகைகள் - இந்த காளான்களில் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
கொழுப்பு குறைய, வயிற்றுப்புண் ஆற சுண்டக்காயை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. கசப்பும் தெரியாது.. ருசியானதும் கூட.. -
3 தக்காளி, 5 சின்ன வெங்காயம் இருந்தா இந்த கொங்கு ஸ்டைல் வெள்ளை குருமாவை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும் -
விடாப்பிடியான வயிற்றுக் கொழுப்பை குறைக்கணுமா? அப்ப இந்த பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க.. -
தென்னிந்தியாவையும், வட இந்தியாவையும் ஆண்ட முதல் இந்திய அரசர் யார் தெரியுமா? நீங்க நினைக்கிற அரசர் இல்ல
Hair Care: இந்திய ராணிகள் முடியை ஆரோக்கியமாக பராமரிக்க பின்பற்றிய எளிய வழிகள் என்னென்ன தெரியுமா?
Hair Care: நாம் எவ்வளவு அழகான ஆடை அணிந்திருந்தாலும் நம்முடைய முடி அழகாக இல்லையென்றால் ஒட்டுமொத்த முயற்சியும் வீணாகிவிடும். தற்போதைய காலகட்டத்தில் முடியை பராமரிக்க கூந்தல் சீரமைப்பு சிகிச்சைகள், சீரம்கள் மற்றும் சலூன் ப்ளோ-ட்ரைகள் போன்ற பல வழிகள் உள்ளன. அப்படி பல சிகிச்சைகளை எடுத்துக் கொண்டாலும் நாம் நினைத்த அளவிற்கு கூந்தலை பராமரிக்க முடிவதில்லை. ஆனால் கடந்த காலத்தில் நம் அரசர்களும், ராணிகளும் சிறப்பான கூந்தல் அலங்காரத்தைக் கொண்டிருந்தனர்.

கடந்த கால இந்திய ராணிகள், தாவரங்கள் மற்றும் இயற்கையிலிருந்து பெறப்பட்ட மூலிகைகளைக் கொண்ட, ஹேர் பேக்குகளையேப் பயன்படுத்தினர். அவை மெதுவான தீர்வுகளுடன் சிறந்த பலன்களை அளித்தன. அரச குடும்பப் பழக்கவழக்கங்களால் ஈர்க்கப்பட்டு, இன்றும் பயன்படுத்தக்கூடிய சில பழங்கால ஹேர் பேக் செய்முறைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வெந்தயம் மற்றும் தயிர்
ஊறவைத்து அரைத்த வெந்தயத்தை, ப்ரெஷான தயிருடன் கலந்து பயன்படுத்தும்போது, அது முடி உதிர்வையும், முடியின் நுனி பிளவுபடுவதையும் தடுக்க உதவுகிறது. இது முடியின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தி, உச்சந்தலைக்கு ஈரப்பதத்தை அளிப்பதன் மூலம், கூந்தலை மென்மையான அமைப்பைப் பெற உதவுகிறது.
செம்பருத்திப் பூ மற்றும் இலைகளின் கலவை
ப்ரெஷான செம்பருத்தி பூவின் இதழ்களையும், இலைகளையும் பறித்து, தேங்காய்ப் பாலுடன் சேர்த்து அரைத்து கெட்டியான பேக் தயாரிக்கவும். இந்த பேக், முடி வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதாகவும், இளநரை ஏற்படுவதைத் தாமதப்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.
நெல்லிக்காய் மற்றும் சீயக்காய்
இது அரச குடும்பத்தில் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு முறையாகும். இதில் நெல்லிக்காய் மற்றும் சீயக்காய் ஆகியவற்றை வெதுவெதுப்பான நீர் அல்லது அரிசி கழுவிய நீருடன் கலந்து பயன்படுத்துவார்கள். இது உரோமக்கால்களை வலுப்படுத்தி, முடி உடைவதைக் குறைத்து, அதே சமயம் முடியின் இயற்கையான எண்ணெய்த்தன்மையை நீக்காமல் உச்சந்தலையைச் சுத்தப்படுத்துகிறது.
பாதாம் பால் மற்றும் முட்டை
கடந்த காலங்களில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் தலைமுடியில் முட்டையை அதிகளவில் பயன்படுத்தினர். புரதச்சத்து நிறைந்த இந்த சிகிச்சை முறை, தலைமுடியை வலுப்படுத்த உதவுகிறது. இதனுடன் பாதாம் பால் சேர்க்கப்படும்போது, அது முடி உடைவதைக் குறைத்து, ஒட்டுமொத்தமாக முடியின் அடர்த்தியை அதிகரிக்கிறது.
அரிசி கழுவிய நீர் மற்றும் பால்
புளிக்கவைத்த அரிசி நீரையும் பாலையும் கலந்து தலைமுடியில் தடவுவது, முடியின் ஒட்டுமொத்த மென்மையை அதிகரித்து, முடி சிக்கலாவதைக் குறைத்ததுடன், சேதத்தைக் கட்டுப்படுத்தி முடியின் நீளத்தைப் பாதுகாக்கவும் உதவியது.
வேம்பு மற்றும் சந்தனம்
உச்சந்தலை எரிச்சல் மற்றும் கடுமையான முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்திருந்தால், வேப்ப இலைகளை சந்தனப் பொடியுடன் கலந்து, இந்த பாக்டீரியா எதிர்ப்புப் பசையைத் தங்கள் உச்சந்தலையைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். இது கடந்த காலங்களில் பல ராஜ்ஜியங்களில் பயன்படுத்தப்பட்டது.
விளக்கெண்ணெய் மற்றும் வெங்காயச் சாறு
இந்தக் கலவை ஒருவிதமான கடுமையான வாசனையைக் கொண்டிருந்தாலும், இது முடியை அடர்த்தியாக வளரச் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. இன்றும் இது பயன்பாட்டில் உள்ளது. இது உச்சந்தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, முடி வேர்களை வலுப்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications

