Latest Updates
-
பூச்சி மற்றும் வண்டுகள் அரிசியை நெருங்கவே கூடாதா? அப்ப இந்த பொருட்களில் ஒன்றை அரிசியில் போட்டு வையுங்க -
அக்டோபர் 30-ல் அஸ்தமிக்கும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்... -
கோடிகளில் விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காளான் வகைகள் - இந்த காளான்களில் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
கொழுப்பு குறைய, வயிற்றுப்புண் ஆற சுண்டக்காயை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. கசப்பும் தெரியாது.. ருசியானதும் கூட.. -
3 தக்காளி, 5 சின்ன வெங்காயம் இருந்தா இந்த கொங்கு ஸ்டைல் வெள்ளை குருமாவை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும் -
விடாப்பிடியான வயிற்றுக் கொழுப்பை குறைக்கணுமா? அப்ப இந்த பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க.. -
தென்னிந்தியாவையும், வட இந்தியாவையும் ஆண்ட முதல் இந்திய அரசர் யார் தெரியுமா? நீங்க நினைக்கிற அரசர் இல்ல -
நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா? -
கோவை ஸ்பெஷல் தக்காளி தண்ணி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கவலைகளும், பிரச்சினைகளும் அதிகரிக்குமாம்
உங்க சருமத்தில் அசிங்கமா தோல் உரியுதா? அப்ப இந்த நேச்சுரல் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க..
Winter Skin Care Tips In Tamil: குளிர்காலம் வந்தாலே பலரும் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் சரும வறட்சி. அதுவும் இக்காலத்தில் குளிர்ச்சியான காற்றினால் சரும வறட்சியுடன், சருமத்தில் செதில் செதிலாக தோல் உரியத் தொடங்கி, முதுமைத் தோற்றத்தைத் தரும். இப்படி ஏற்படும் சரும வறட்சியைத் தடுக்க பலரும் மாய்ஸ்சுரைசர்களை வாங்கி பயன்படுத்துவோம்.

ஆனால் இப்படி உரியும் தோலானது சருமத்தின் இறந்த செல்களாகும். சருமத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால், சருமம் பொலிவிழந்து காணப்படும். எனவே இந்த இறந்த செல்களை நீக்க ஸ்க்ரப்களை பயன்படுத்த வேண்டும். அதுவும் குளிர்காலத்திற்கு ஏற்றவாறான ஸ்க்ரப்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டியது அவசியம்.
ஏனெனில் கெமிக்கல் அதிகம் நிறைந்த ஸ்க்ரப்களை பயன்படுத்தினால், சருமத்தில் இயற்கையாகவே உள்ள எண்ணெய்கள் வெளியேற்றப்பட்டு, சரும வறட்சி இன்னும் தீவிரமாகிவிடும். எனவே இந்நிலையில் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டு ஸ்க்ரப்களை தயாரித்து பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள இறந்த செல்களும் நீங்கும், சருமம் வறட்சியின்றி ஈரப்பதத்துடனும், பொலிவோடும் மின்னும். இப்போது சில குளிர்கால ஸ்க்ரப்களைக் காண்போம்.
1. சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப்
* இந்த ஸ்க்ரப்பிற்கு 1/2 கப் பொடித்த சர்க்கரையுடன், 1/4 கப் உருக்கிய தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் முகம், கை கால்களை நீரில் நனைத்துவிட்டு, தயாரித்து வைத்துள்ளதை சருமத்தில் தடவி 1 நிமிடம் மசாஜ் செய்ய வெண்டும்.
* பின்பு 5 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி, மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த ஸ்க்ரப்பை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால், சருமம் மென்மையாக இருக்கும்.
2. ஓட்ஸ், தேன் மற்றும் தயிர் ஸ்க்ரப்
* இந்த ஸ்க்ரப்பிற்கு 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸை அரைத்து பொடி செய்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு சருமத்தை நீரில் நனைத்துக் கொண்டு, தயாரித்து வைத்துள்ளதை தடவி 30 நொடிகள் மென்மையாக தேய்த்து, 1-2 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஸ்க்ரப்பை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம்.
3. காபி மற்றும் ஆலிவ் ஆயில் ஸ்க்ரப்
* இந்த ஸ்க்ரப்பிகு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் காபித் தூள், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை உடலின் முகம், கை, கால்களில் தடவி 1 நிமிடம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பிறகு 5 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் சருமத்தை தேய்த்து கழுவ வேண்டும்.
4. உப்பு மற்றும் பாதாம் எண்ணெய் ஸ்க்ரப்
* முழங்கை, முழங்கால், குதிகால் போன்ற பகுதிகளில் உள்ள சருமம் கடினமாகவும், அதிக வறட்சியுடனும் இருக்கும். இப்படிப்பட்ட பகுதிகளில் உள்ள இறந்த செல்களை நீக்க, ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முழங்கை, முழங்கால், குதிகால் போன்ற பகுதிகளில் தடவி 1 நிமிடம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இரவு நேரத்தில் இந்த ஸ்க்ரப்பை குதிகால்களில் பயன்படுத்தினால், கால்களில் சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள்.
5. கடலை மாவு, பால், தேன் ஸ்க்ரப்
* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு சருமத்தை ஈரப்பதமாக்கி, தயாரித்து வைத்துள்ளதை சருமத்தில் தடவி சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

