Latest Updates
-
அக்டோபர் 30-ல் அஸ்தமிக்கும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்... -
கோடிகளில் விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காளான் வகைகள் - இந்த காளான்களில் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
கொழுப்பு குறைய, வயிற்றுப்புண் ஆற சுண்டக்காயை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. கசப்பும் தெரியாது.. ருசியானதும் கூட.. -
3 தக்காளி, 5 சின்ன வெங்காயம் இருந்தா இந்த கொங்கு ஸ்டைல் வெள்ளை குருமாவை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும் -
விடாப்பிடியான வயிற்றுக் கொழுப்பை குறைக்கணுமா? அப்ப இந்த பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க.. -
தென்னிந்தியாவையும், வட இந்தியாவையும் ஆண்ட முதல் இந்திய அரசர் யார் தெரியுமா? நீங்க நினைக்கிற அரசர் இல்ல -
நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா? -
கோவை ஸ்பெஷல் தக்காளி தண்ணி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கவலைகளும், பிரச்சினைகளும் அதிகரிக்குமாம் -
நவம்பர் 02-ல் உருவாகும் கஜகேசரி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்!
பூச்சி மற்றும் வண்டுகள் அரிசியை நெருங்கவே கூடாதா? அப்ப இந்த பொருட்களில் ஒன்றை அரிசியில் போட்டு வையுங்க
அரிசி தென்னிந்திய மக்களின் மிகவும் பிரதான உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அரிசி உணவுகள் இல்லாமல் நம்மால் ஒரு நாளை கடக்க முடியாது. நம் அனைவரின் வீட்டிலும் அரிசி வாங்கி சேமித்து வைத்திருப்போம். ஆனால் சில நாட்களிலேயே பூச்சிகள் அல்லது வண்டுகள் அரிசியைச் சேதப்படுத்துகின்றன. ஆனால் சில எளிய வழிகள் மூலம் இதை நாம் எளிதாகத் தடுக்கலாம். அதற்கு சமையலறையில் உள்ள சில எளிய பொருட்களைப் பயன்படுத்தினாலே போதும். இந்த எளிய வழிகள் மூலம், உங்கள் அரிசியை ஒரு வருடம் கூட புத்துணர்ச்சியுடனும், பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பாகவும் வைத்திருக்கலாம். அவை என்னென்ன வழிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஈரப்பதம் இல்லாமல் இருக்க வேண்டும்
முதலில், பிளாஸ்டிக் அல்லது ஸ்டீல் அரிசி கொள்கலனை நன்கு கழுவ வேண்டும். பிறகு, அதை வெயிலில் உலர்த்த வேண்டும். கொள்கலனின் உட்புறத்தில் ஈரப்பதம் ஏதும் இல்லாதவாறு, உலர்ந்த துணியால் நன்கு துடைத்துச் சுத்தம் செய்ய வேண்டும். கொள்கலனில் சிறிதளவு ஈரப்பதம் இருந்தாலும், அதில் பூச்சிகள் மிக வேகமாக உருவாகிவிடும். எனவே அரிசி கொள்கலனை எப்போதும் உலர்த்தியிருக்க வேண்டியது அவசியம்.
காய்ந்த வேப்பிலை
வேப்ப இலைகளைக் கழுவி, சூரிய ஒளியில் நன்றாக உலர்த்திக்கொள்ள வேண்டும். அரிசியைச் சேமித்து வைக்கும்போது, இந்த உலர்ந்த வேப்பிலைகளை கொள்கலனின் அடியில், இடையில் மற்றும் மேல் பகுதியில் அடுக்குகளாகப் பரப்பி வைக்க வேண்டும். வேப்ப இலையின் கசப்பான வாசனையை வெறுக்கும் பூச்சிகள், அரிசியை ஒருபோதும் நெருங்காது.
காய்ந்த மிளகாய்
காய்ந்த மிளகாயின் கார சுவையும், வாசனையும் பூச்சிகள் மற்றும் வண்டுகளை விரட்டக்கூடியது. அரிசியின் நடுப்பகுதியிலும் மேல் அடுக்கிலும், காம்புகளுடன் கூடிய காய்ந்த மிளகாய்களை வைக்க வேண்டும். மிளகாயிலிருந்து வெளிப்படும் காரமான, கடுமையான வாசனையால் வண்டுகளும் சிறு பூச்சிகளும் விரைவாக வெளியேறிவிடும்.
கிராம்பு அல்லது இலவங்கப்பட்டை
அரிசி இருக்கும் கொள்கலனில் சில இலவங்கப்பட்டை துண்டுகளையோ அல்லது கிராம்புகளையோ நேரடியாகப் போட்டு வைக்கலாம். இந்த மசாலாப் பொருட்களுக்குக் கடுமையான வாசனை இருப்பதால், பூச்சிகள் அரிசியை நெருங்காது. மேலும், அரிசி விரைவில் கெட்டுப்போகாமலும், துர்நாற்றம் வீசாமலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
கற்பூரம்
கற்பூரம் பூஜைக்கு மட்டுமல்ல அரிசியை பாதுகாக்கவும் உதவும். முதலில் கற்பூரத்தை ஒரு சிறிய பருத்தித் துணியில் முடிந்து வைக்க வேண்டும் அல்லது, துளைகள் உள்ள ஒரு சிறிய பெட்டிக்குள் கற்பூரத்தை வைத்து, அதை அரிசிக்குள் புதைத்து வைக்கலாம். கற்பூரத்தின் தீவிரமான மணம் பூச்சிகளை விரட்டிவிடும் என்பதால், அரிசியில் பூச்சிகள் அண்டாது.
காற்று புகாத கொள்கலன்
அரிசியை நிரப்பிய பிறகு, கொள்கலனின் வாய் பகுதியை ஒரு பிளாஸ்டிக் கவரை வைத்து இறுக்கமாக மூட வேண்டும். அதன் மேல் மூடியை இறுக்கமாகப் பொருத்த வேண்டும். இந்த எளிய முறை, வெளிப்புற ஈரப்பதம் கொள்கலனுக்குள் நுழைவதைத் தடுக்கிறது. இதனால், உங்கள் அரிசி பல மாதங்கள் வரை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.



Click it and Unblock the Notifications

