உங்க வீட்டில் பணம் தங்கமாட்டீங்குதா? அப்ப பணம் வெக்குற இடத்துல இந்த பொருட்களை வெக்காதீங்க..

Vastu Tips For Locker In Tamil: வீட்டில் பணம், நகை மற்றும் முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க பயன்படுத்துவது தான் லாக்கர். இந்த லாக்கர் பணம் வைக்கும் இடம் என்பதால், அது வீட்டின் செல்வம் மற்றும் செழிப்புடன் தொடர்புடைய ஒரு புனிதமான இடமாக கருதப்படுகிறது. வாஸ்துப்படி, வீட்டில் வைக்கும் லாக்கரை சரியான திசையில் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் தான் பணம் அதிகம் சேரும்.

Vastu Tips 5 Things You Should Not Keep In Your Locker

அதுமட்டுமின்றி, அந்த லாக்கரில் வைக்கப்படும் பொருட்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஏனெனில் சில பொருட்களை லாக்கரில் வைக்கும் போது, அது எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, செல்வம் சேர தடையாக இருக்கலாம். மேலும் பணம் வைக்கும் லாக்கரை எப்போதும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்திருப்பது மிகவும் அவசியம். இப்போது வாஸ்துப்படி பணம் வைக்கும் லாக்கரில் எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பது குறித்து காண்போம்.

1. கடன் பத்திரங்கள்

என்ன தான் கடன் பத்திரங்கள் முக்கியமானதாக இருந்தாலும், அவற்றை பணம் மற்றும் நகை வைக்கும் இடத்தில் வைப்பது நல்லதல்ல. அப்படி வைத்தால், அது பணம் சேர்வதில் இடையூறை ஏற்படுத்துவதோடு, கடனை அதிகரிக்க செய்யும். எனவே இப்படியான பத்திரங்களை தனியாக ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

2. சொத்து தொடர்பான ஆவணங்கள்

தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க பொருட்களை சொத்து தொடர்பான ஆவணங்கள், சட்ட அறிவிப்புகள், தகராறு தொடர்பான காகிதங்கள் அல்லது மோதல்கள் சார்ந்த கோப்புகளுடன் சேர்த்து வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது மன அழுத்தத்தையும், கருத்து வேறுபாடுகளையும், மோதல்களையும் அதிகரிக்கும். என்ன தான் இப்படியான ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டியவையாக இருந்தாலும், அவற்றை தனியே ஒரு இடத்தில் வையுங்கள். பணம் வைக்கும் லாக்கரானது அமைதியான சூழலை கொண்டிருக்க வேண்டுமே தவிர, பதற்றமான சூழலை கொண்டிருக்கக்கூடாது.

3. காலியான நகைப்பெட்டி

நகைப்பெட்டி காலியாக இருப்பது சாதாரணமான ஒன்றாக தோன்றலாம். ஆனால் அது ஏதோ ஒன்றின் இருப்பைக் குறிப்பதற்குப் பதிலாக, இல்லாமையையே உணர்த்துகின்றன. எனவே நகைப்பெட்டியில் நகை இல்லாவிட்டால், அதை லாக்கரில் இருந்து எடுத்துவிடுங்கள். அதேப் போல் பணம் வைக்கும் லாக்கரை அல்லது பையை காலியாக வைத்திருக்காதீர்கள். பண இருப்பை குறிக்க ஒரு ரூபாயாவது வையுங்கள்.

4. இறந்தவர்களின் போட்டோக்கள்

இறந்தவர்களின் போட்டோக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். ஆனால் அவற்றை பணம் வைக்கும் இடத்தில் வைக்கக்கூடாது. வாஸ்துப்படி, செல்வ ஆற்றலையும், நினைவுகளுக்குரிய ஆற்றலையும் ஒன்றாக ஒரே இடத்தில் வைக்கக்கூடாது. இப்படியான போட்டோக்களை ஆல்பத்திலோ அல்லது ஒரு மரியாதைக்குரிய இடத்திலோ வைக்க வேண்டும். முக்கியமாக இந்த போட்டோக்களை பண பெட்டிகளுக்கு அடியிலோ அல்லது இடையிலோ மறைத்து வைக்காதீர்கள்.

5. துருப்பிடித்த சாவிகள்

பழைய துருப்பிடித்த சாவிகளை பலர் எதனுடையது என்று தெரியாத போது, பலரும் அவற்றை லாக்கரில் வைப்பார்கள். ஆனால் வாஸ்துப்படி, இப்படிப்பட்ட பொருட்கள் மறக்கப்பட்ட விஷயங்களை குறிக்கின்றன. ஒரு சாவி பயனுள்ளதாக இருந்தால், அவற்றை சுத்தம் செய்து எளிதில் வைத்து எடுக்கும்படியான இடத்தில் வைத்து பயன்படுத்துங்கள். ஒருவேளை சாவி எதனுடையது என்று தெரியாவிட்டால், அதை அப்புறப்படுத்திவிடுங்கள். லாக்கர் என்பது தேவையற்ற அல்லது பயனற்ற பொருட்களை வைக்கும் இடமாக இருக்கக்கூடாது. அது லட்சுமி தேவி குடியிருக்கும் இடம் என்பதால், அதை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொண்டு, மரியாதையுடன் நடத்த வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, October 27, 2026, 20:50 [IST]
Desktop Bottom Promotion