Latest Updates
-
மகம் நட்சத்திரம் செல்லும் குரு: அடுத்த 2 1/2 மாதம் இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது -
'பறவைகளின் ராஜா' என்று அழைக்கப்படும் பறவை எது? ஏன் அப்படி அழைக்கப்படுகிறது தெரியுமா? -
4 தக்காளியும், 5 ஸ்பூன் உளுத்தம் பருப்பும் இருந்தா.. இந்த சட்னியை ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
அக்டோபர் 28, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
தீபாவளிக்கு முன் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்! -
சூரியன் ஸ்வாதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஸ்கூலுக்கு ஒருவாட்டி இப்படி குஸ்கா செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
மீந்து போன சாதத்தை வைச்சு இந்த மாதிரி டிபன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
Hair Care: இந்திய ராணிகள் முடியை ஆரோக்கியமாக பராமரிக்க பின்பற்றிய எளிய வழிகள் என்னென்ன தெரியுமா? -
உங்க வீட்டில் பணம் தங்கமாட்டீங்குதா? அப்ப பணம் வெக்குற இடத்துல இந்த பொருட்களை வெக்காதீங்க..
சப்பாத்தி, பூரிக்கு பக்கவா இருக்கும் முகலாய ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க
Mughlai Vegetable Kurma Recipe in Tamil: இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டிருக்கிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் கொஞ்சம் காய்கறிகள் இருந்தால், சுவையான முகலாய ஸ்டைல் வெஜ் மசாலாவை செய்து கொடுங்கள். இந்த வெஜ் மசாலா இதுவரை நீங்கள் சாப்பிடாத சுவையில் இருக்கும்.

முகலாய ரெசிபிக்கள் என்றாலே அது அசைவமாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. சில அட்டகாமசமான வெஜ் ரெசிபிக்களும் உள்ளன, அதிலொன்றுதான் இந்த முகலாய வெஜ் மசாலா. இந்த கிரேவி சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி தோசை, புரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் சூப்பராக இருக்கும். இது நார்த் இந்திய ஹோட்டல்களில் மிகவும் பிரபலமான ஒரு சைடிஷாகும்.
உங்களுக்கு முகாலய வெஜ் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முகாலய வெஜ் மசாலா எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 6 கப் கலவை காய்கறிகள் (காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, பீன்ஸ்
மற்றும் கேரட்)
- 15 முந்திரிப் பருப்புகள்
- 1 ஸ்பூன் உலர் திராட்சை
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் சீரகம்
- ½ கப் நறுக்கிய வெங்காயம்
- 1 கப் அரைத்த தக்காளி
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
- 2 ஸ்பூன் கசூரி மேத்தி
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- ¼ கப் கிரீம்
- அலங்கரிக்க 3 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- முந்திரி மற்றும் திராட்சையைச் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் 15-30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- ஊறவைத்த முந்திரி மற்றும் திராட்சையைச் சிறிது தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதைத் தனியே எடுத்து வைக்கவும்.
- நறுக்கிய காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் ¼ கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் மென்மையாகும் வரை வேகவைக்கவும். காய்கறிகள் குழைந்து விடக்கூடாது.
- ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் சீரகத்தைச் சேர்க்கவும்.
- சீரகம் பொரிந்து பழுப்பு நிறமாக மாறும்போது, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்க்கவும்.
- வெங்காயம் பழுப்பு நிறமாக மாறியதும், இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து, வாசனை வரும் வரை வதக்கவும்.
- அதன்பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- மிதமான தீயில் வைத்து மசாலா கருகாமல் சில நொடிகள் வதக்கவும்.
- பின்னர் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சை விழுதைச் சேர்க்கவும்.
- அதன்பின் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து, மிதமான தீயில் 4-5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- பின்னர் வேகவைத்த காய்கறிகளைச் சேர்த்து நன்கு கிளறவும். அதன்பின் கிரீம் சேர்த்து மெதுவாகக் கலந்து, அடுப்பை அணைத்துவிடவும்.
- இறுதியாக கசூரி மேத்தி, கரம் மசாலா மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
- அவ்வளவுதான் சுவையான முகாலய வெஜ் மசாலா ரெடி. இதை ரொட்டி, நான் அல்லது புலாவ் உடன் சூடாகப் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
