தீபாவளிக்கு முன் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்!

Mahalakshmi Rajyog Before Diwali 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் செவ்வாய், தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த கடக ராசிக்கு மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் நுழையவுள்ளார். இதனால் கடக ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது.

Mahalakshmi Rajyog 2026 These Zodiac Signs Will See Financial Growth Before Diwali 2026

அதுவும் இந்த யோகமானது நவம்பர் 01 ஆம் தேதி உருவாகவுள்ளது. இந்த யோகம் நிதி நன்மைகள், வணிகம் மற்றும் தொழில் முன்னேற்றம் போன்றவற்றை தரும். முக்கியமாக இந்த யோகமானது தீபாவளிக்கு முன் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது கடக ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள், நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு தங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

மேஷம்

மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். ஆயினும், அவசரப்பட்டு எந்த ஒரு நிதி முடிவுகளையும் எடுக்க வேண்டாம். முதலீடுகளை செய்யும் முன் முழுமையாக அதுகுறித்து தெரிந்து கொண்டு, பின் முடிவெடுக்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை மேம்படும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழிலதிபர்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்பால் நல்ல பலனை பெறக்கூடும். வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகளை கட்டுப்படுத்தினால் சேமிப்பு அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசியின் 6 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். தொழிலில் புதிய திட்டங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக, இக்காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டால், நல்ல உயரத்தை அடையலாம். முக்கியமாக கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, October 27, 2026, 23:18 [IST]
Desktop Bottom Promotion