Latest Updates
-
'பறவைகளின் ராஜா' என்று அழைக்கப்படும் பறவை எது? ஏன் அப்படி அழைக்கப்படுகிறது தெரியுமா? -
4 தக்காளியும், 5 ஸ்பூன் உளுத்தம் பருப்பும் இருந்தா.. இந்த சட்னியை ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
அக்டோபர் 28, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
தீபாவளிக்கு முன் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்! -
சூரியன் ஸ்வாதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஸ்கூலுக்கு ஒருவாட்டி இப்படி குஸ்கா செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
மீந்து போன சாதத்தை வைச்சு இந்த மாதிரி டிபன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
Hair Care: இந்திய ராணிகள் முடியை ஆரோக்கியமாக பராமரிக்க பின்பற்றிய எளிய வழிகள் என்னென்ன தெரியுமா? -
உங்க வீட்டில் பணம் தங்கமாட்டீங்குதா? அப்ப பணம் வெக்குற இடத்துல இந்த பொருட்களை வெக்காதீங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அனைவரின் மீதும் உண்மையான அக்கறை காட்டும் அன்பானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
மகம் நட்சத்திரம் செல்லும் குரு: அடுத்த 2 1/2 மாதம் இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது
Jupiter Transit In Magha Nakshatra On 31 October 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மிகவும் முக்கியமான மற்றும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதுமட்டுமின்றி குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தை மாற்றுவார். அப்படி குரு பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அந்த வகையில் தற்போது குரு பகவான் கடக ராசியில் பயணித்து வருகிறார். பொதுவாக குரு வருடத்திற்கு ஒருமுறை தான் ராசியை மாற்றுவார். இருப்பினும் இந்த ஆண்டு அதிசாரமாக, அதாவது வேகமாக நகர்கிறார். இப்படி அதிசார நிலையில் குரு இருக்கும் போது வருடத்திற்கு 2 முறை ராசியை மாற்றுவார். அப்படி தான் அக்டோபர் 31 ஆம் தேதி அதிசார குரு பெயர்ச்சி நிகழவுள்ளது.
அப்போது குரு பகவான் சிம்ம ராசிக்குள் நுழைவதோடு, மகம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். மகம் நட்சத்திரத்திற்குள் குரு பகவான் நுழைவதால் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. இந்த மகம் நட்சத்திரத்தில் குரு பகவான் 2027 ஜனவரி 25 ஆம் தேதி வரை இருப்பார். இப்போது குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காணக்கூடும். நீண்ட காலமாக குடும்பத்தில் நடந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். தாயாரின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. தாயுடனான உறவு வலுவடையும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். நீண்ட காலமாக சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் தீர்ந்து, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இருப்பினும் வாழ்வில் நடக்கும் திடீர் நிகழ்வுகள் குறித்து சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிம்மம்
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல நன்மைகளைத் தரப்போகிறது. அதுவும் இந்த ராசியில் கேதுவும் இருப்பதால், இதுவரை வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பணியிடத்தில் உங்களின் சிறப்பான செயல்திறனை வெளிக்காட்டி உங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவீர்கள். நடிப்பு, ஊடகம், அரசியல், சமூக சேவை போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். இருந்தாலும், ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்த வேண்டும்.
துலாம்
குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீண்ட காலமாக வாழ்வில் உள்ள பிரச்சனைகள் தீரும். வேலைகளில் உள்ள தடைகள் நீங்கும். பணிபுரிபவர்களுக்கு பதவு உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



