Latest Updates
-
இளைஞர்களுக்கும் திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுமா? அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? விளக்கும் டாக்டர்! -
சப்பாத்தி, பூரிக்கு பக்கவா இருக்கும் முகலாய ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க -
மகம் நட்சத்திரம் செல்லும் குரு: அடுத்த 2 1/2 மாதம் இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது -
'பறவைகளின் ராஜா' என்று அழைக்கப்படும் பறவை எது? ஏன் அப்படி அழைக்கப்படுகிறது தெரியுமா? -
4 தக்காளியும், 5 ஸ்பூன் உளுத்தம் பருப்பும் இருந்தா.. இந்த சட்னியை ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
அக்டோபர் 28, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
தீபாவளிக்கு முன் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்! -
சூரியன் ஸ்வாதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஸ்கூலுக்கு ஒருவாட்டி இப்படி குஸ்கா செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
மீந்து போன சாதத்தை வைச்சு இந்த மாதிரி டிபன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
இந்தியாவில் வெடிக்கும் நிலையில் உள்ள ஒரே எரிமலை எது? அது எந்த ஊரில் இருக்கிறது தெரியுமா?
உலகில் பல காலநிலை மாற்றங்களுக்கும், பேரழிவுகளுக்கும் காரணமாக இருப்பது எரிமலைகள்தான். கடந்த காலங்களில் பல பேரழிவுகள் எரிமலை வெடிப்புகளால் நிகழ்ந்துள்ளது. தற்போது உலகில் கிட்டதட்ட 1500 எரிமலைகள் உள்ளன. ஆனால் நமக்கு நினைவு தெரிந்தது முதல் இந்தியாவில் எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்ததாக சம்பவமும் நடைபெறவில்லை. ஆனால் இந்தியாவிலும் எரிமலைகள் உள்ளன. அதுவும் ஒன்றல்ல ரெண்டல்ல 7 எரிமலைகள் உள்ளன. அதில் ஒரு எரிமலை இப்போதும் செயல்பாட்டில் உள்ளது. அது எந்த எரிமலை? எந்த ஊரில் உள்ளது? அதனால் ஆபத்தா? என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் செயல்பாட்டில் உள்ள ஒரே எரிமலை
இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அதன் தூய்மையான கடற்கரைகளுக்குப் பெயர் பெற்றவை. அதே சமயம், தெற்காசியாவிலேயே உள்ள ஒரே செயல்படும் எரிமலையும் இங்குதான் அமைந்துள்ளது. 'பேரன் தீவு' (Barren Island) என்று அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ள இந்த எரிமலை, கடந்த ஆண்டு பலமுறை முறை சிறிய அளவில் வெடித்தது. போர்ட் பிளேரிலிருந்து கடல் வழியாக சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தத் தீவில் மனித நடமாட்டம் அறவே இல்லை. இது பர்மீய மற்றும் இந்திய டெக்டோனிக் தட்டுகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.
Barren Island எங்கே அமைந்துள்ளது?
Barren Island அந்தமான் கடலில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான ஸ்ரீ விஜய புரத்திற்கு வடகிழக்கே சுமார் 138 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது தெற்காசியாவிலேயே உள்ள ஒரே செயல்படும் எரிமலை என்பதால் மிகவும் பிரபலமானதாக உள்ளது. சுமார் 3 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவு, பெரும்பாலும் சாம்பல் மற்றும் எரிமலைக் கூம்புகளால் சூழப்பட்டுள்ளது.
கடைசியாக எப்போது வெடித்தது?
அந்தமான் மற்றும் நிக்கோபார் நிர்வாகத்தின் தரவுகளின்படி, பேரன் தீவில் முதல் எரிமலை வெடிப்பு 1787-ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அதன்பின், 1991, 2005, 2017 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் சிறிய அளவிலான எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. 1991-இல் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு, அந்தத் தீவின் வனவிலங்குகள் மற்றும் சுற்றுசூழல் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தீவில் கடுமையான சூழல் காரணமாக, அங்கு அதிக எண்ணிக்கையிலான விலங்குகள் வாழ்வதில்லை. இருப்பினும், சில வகை ஆடுகள், கொறித்துண்ணிகள் மற்றும் புறாக்கள் அங்கு காணப்படுகின்றன.
Barren Island-ல் உள்ள வனவிலங்குகள்
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கப்பல் விபத்தொன்றின் விளைவாகவே இந்தத் தீவில் ஆடுகள் உயிர் பிழைத்திருக்கலாம் என்றும், எரிமலையின் சரிவுகளில் இருந்த நன்னீர் ஊற்றுகளே அவை உயிர்வாழ உதவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இந்த தீவுக்கு பயணிகள் செல்லலாமா?
இந்த தீவுக்கு பயணிகள் தாராளமாக பயணிக்கலாம். ஆனால் இதில் மிக முக்கியமான கட்டுப்பாடு ஒன்று உள்ளது. இந்தத் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் பயணம் செய்யலாம், ஆனால் தீவின் நிலப்பகுதிக்குள் கால் வைப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், அதே சமயம் அங்குள்ளதனித்துவமான சுற்றுசூழலைப் பாதுகாப்பதற்காகவும், தீவில் இறங்குவதற்கு அதிகாரிகள் கடுமையான தடையை அமல்படுத்தியுள்ளனர். இந்த கடுமையான கட்டுப்பாடு, உள்ளூர் சூழல் மண்டலத்தைப் பாதுகாப்பதோடு, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென ஏற்படக்கூடிய எரிமலை வெடிப்புகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.



Click it and Unblock the Notifications

