Latest Updates
-
குரு பெயர்ச்சி 2026: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது-ன்னு தெரியுமா? -
மதுரை ஸ்டைல் உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இந்தியாவில் வெடிக்கும் நிலையில் உள்ள ஒரே எரிமலை எது? அது எந்த ஊரில் இருக்கிறது தெரியுமா? -
இளைஞர்களுக்கும் திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுமா? அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? விளக்கும் டாக்டர்! -
சப்பாத்தி, பூரிக்கு பக்கவா இருக்கும் முகலாய ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க -
மகம் நட்சத்திரம் செல்லும் குரு: அடுத்த 2 1/2 மாதம் இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது -
'பறவைகளின் ராஜா' என்று அழைக்கப்படும் பறவை எது? ஏன் அப்படி அழைக்கப்படுகிறது தெரியுமா? -
4 தக்காளியும், 5 ஸ்பூன் உளுத்தம் பருப்பும் இருந்தா.. இந்த சட்னியை ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
அக்டோபர் 28, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
தீபாவளிக்கு முன் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்!
வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க - இல்லனா மிஷின் வீணாகிரும்
வாஷிங் மிஷின் பெண்களின் மிகவும் கடினமான வேலையான துணி துவைக்கும் வேலையை எளிதாக செய்வதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டதாகும். வாஷிங் மெஷின் அன்றாட வீட்டு வேலைகளை மிகவும் எளிதாக்குகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக துவைத்த பிறகும் அழுக்கு நீங்காமல் இருப்பது அல்லது துணிகளில் ஒருவிதமான துர்நாற்றம் வீசுவது போன்ற சிக்கல்களைப் பலர் எதிர்கொள்கின்றனர்.

வாஷிங் மிஷின் பழுதாகிவிட்டதால்தான் இந்த சிக்கல்கள் ஏற்படுகிறது என்று நினைப்பது தவறு. துவைக்கும்போது நாம் சில தவறுகளைச் செய்வதாலேயே இவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவை என்னென்ன தவறுகள் மற்றும் அவற்றை எப்படி தவிர்ப்பது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அதிக துணிகளை மிஷினில் போடுவது
முதலில் இயந்திரத்தின் கொள்ளளவை விட அதிகமான துணிகளை உள்ளே திணிப்பதைத் தவிர்க்க வேண்டும். வாஷிங் மிஷினின் டிரம்முக்குள் அளவுக்கு அதிகமாகத் துணிகளை நிரப்பினால், அவை தாராளமாகச் சுழல முடியாது. இதனால், தண்ணீரும், வாஷிங் பவுடரும் அனைத்துத் துணிகளிலும் சமமாகச் சென்றடையாது. இதன் விளைவாக அழுக்கு முழுமையாக நீங்காமல் போகலாம். எனவே, இயந்திரத்தின் கொள்ளளவுக்கு ஏற்ப, அதன் எடை வரம்பிற்கு உட்பட்டு மட்டுமே துணிகளை உள்ளே போட வேண்டும்.
சரியான அளவு சோப்பை பயன்படுத்த வேண்டும்
வாஷிங் மிஷினில் துணிகள் சரியாகச் சுழல்வதற்குப் போதுமான இடம் தேவை. மேலும், பலர் துவைக்கும் பவுடர் அல்லது திரவ சோப்பு ஆகியவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதிக நுரை இருப்பதால் துணிகள் கூடுதல் சுத்தமாகிவிடாது. அதிகப்படியான சோப்பு துணியின் இழைகளில் ஒட்டிக்கொண்டு, துணி காய்ந்த பிறகு வெள்ளை நிற அடையாளங்களை உண்டாக்கும். இவ்வாறு எஞ்சியிருக்கும் சோப்பு, சிலருக்குத் தோலில் எரிச்சலையோ அல்லது ஒவ்வாமையையோ ஏற்படுத்தலாம். அதே சமயம், குறைவான அளவு சோப்பைப் பயன்படுத்தினால் அழுக்கு முழுமையாக நீங்காது. எனவே துணிகளின் எண்ணிக்கை, தயாரிப்பு நிறுவனத்தின் அறிவுறுத்தல்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சரியான அளவில் சோப்பைப் பயன்படுத்த வேண்டும்.
சரியான வாஷிங் முறையை தேர்ந்தெடுக்க வேண்டும்
உங்கள் துணி வகைக்கு ஏற்றவாறு சரியான துவைக்கும் முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஜீன்ஸ் மற்றும் போர்வைகள் போன்ற கனமான துணிகளை, மென்மையான பட்டுத் துணிகளுடன் சேர்த்து ஒரே முறையில் துவைப்பது சரியானதல்ல. காட்டன் துணிகள், மென்மையான துணிகள் அல்லது கனமான துணிகள் என ஒவ்வொன்றிற்கும் சரியான துவைக்கும் முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது துணிகளின் தரத்தைப் பாதுகாப்பதோடு, அழுக்கையும் முறையாக நீக்கும். துவைத்த துணிகளை நீண்ட நேரம் இயந்திரத்திற்குள்ளேயே ஈரமான நிலையில் விட்டுவிடுவது மற்றொரு பொதுவான தவறாகும். இவ்வாறு துணிகளில் ஈரப்பதம் நீண்ட நேரம் இருப்பது கிருமிகள் மற்றும் பூஞ்சைகள் வளர்வதற்கு ஏதுவான சூழலை உருவாக்கி, துணிகளில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். துணி துவைத்து முடிந்தவுடன் உடனடியாக மிஷினை விட்டு எடுத்துவிடுவது நல்லது.
மிஷினை உலர்வாக வைக்க வேண்டும்
துணி துவைத்து முடித்த பிறகு, அதிலுள்ள ஈரப்பதத்தைக் குறைக்க, அதன் கதவையும், சோப்பு பயன்படுத்தும் இடத்தையும் சிறிது நேரம் திறந்து வைக்க வேண்டும். மேலும், இயந்திரத்தின் உட்பகுதியைத் தொடர்ந்து சுத்தம் செய்வது அவசியம். நீண்ட காலம் பயன்படுத்தும்போது, சோப்புகளின் மிச்சம், துணிகளிலிருந்து வரும் நார் மற்றும் நீரில் உள்ள தாதுக்கள் போன்றவை இயந்திரத்திற்குள் படிந்துவிடக்கூடும். இவை நாளடைவில் துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம். எனவே குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு 'டப் கிளீன்' வசதியைப் பயன்படுத்த வேண்டும்.
வடிகட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும்
வாஷிங் மிஷினின் வடிகட்டி மற்றும் வடிகால் குழாயை முறையாகப் பராமரிக்க வேண்டும். நாணயங்கள், நூல்கள், துணி இழைகள் மற்றும் சிறிய பொருட்கள் வடிகட்டியில் சிக்கிக்கொண்டு, நீர் வெளியேறுவதைத் தடுக்கலாம். இது துணியை துவைக்கும் செயல்முறையையும் பாதிக்கக்கூடும். எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில், வடிகட்டியைச் சரிபார்த்துச் சுத்தம் செய்ய வேண்டும். வடிகட்டியை அகற்றுவதற்கு முன்பு, இயந்திரத்தை அணைத்துவிட்டு, பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றியும் துணியில் தொடர்ந்து அழுக்கு இருந்தாலோ அல்லது துர்நற்றம் வீசினாலோ தொழில்முறை உதவியாளரின் உதவியை நாடலாம்.



Click it and Unblock the Notifications

