Latest Updates
-
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி கதம்ப பொரியல் செய்யுங்க - டாப்பா இருக்கும் -
Skin Care: வயதான அறிகுறியை சிறப்பாக குறைக்கும் சிறந்த உணவுகள் - அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
தீபாவளிக்கு 1/4 கிலோ கடலை மாவு இருந்தா போதும்.. 2 கிலோ மைசூர் பாக் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க.. -
November 2026 Horoscope: நவம்பர் மாதத்தில் நஷ்டங்களை சந்திக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
நரைமுடியை மறைக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஹேர் டைகளை ட்ரை பண்ணுங்க.. -
வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க - இல்லனா மிஷின் வீணாகிரும் -
குரு பெயர்ச்சி 2026: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது-ன்னு தெரியுமா? -
மதுரை ஸ்டைல் உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இந்தியாவில் வெடிக்கும் நிலையில் உள்ள ஒரே எரிமலை எது? அது எந்த ஊரில் இருக்கிறது தெரியுமா? -
இளைஞர்களுக்கும் திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுமா? அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? விளக்கும் டாக்டர்!
பாத்ரூம்மில் இந்த 5 பொருட்களை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தைப் பாருங்க..
Vastu Tips In Tamil: வீட்டின் ஒவ்வொரு பகுதியும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருப்பது குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும் மன அமைதிக்கும் முக்கியமானது. அந்த வகையில் குளியலறையின் தூய்மைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாஸ்துப்படி, வீட்டில் குளியலையானது சரியான திசையில் இருக்க வேண்டும் மற்றும் அங்கு வைக்கப்படும் பொருட்களும் வீட்டின் ஆற்றல் ஓட்டத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகின்றன.

ஏனெனில் குளியலறை என்பது நீரும் ஆற்றலும் வெளியேறும் இடம் என்று நம்பப்படுகிறது. இதனால்தான், குளியலறை சரியான இடத்தில் இல்லாவிட்டாலோ அல்லது சரியாக வடிவமைக்கப்படாவிட்டாலோ, அது குடும்பத்தின் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
சொந்த வீடாக இருந்தால், வாஸ்து பார்த்து குளியலறையை அமைக்கலாம். அதுவே வாடகை வீடாக இருந்தால், அங்கு குளியலறை தவறான திசையில் இருந்தால், அப்போது குளியலறையில் ஒருசில பொருட்களை வைப்பதன் மூலம் குளியலறையின் ஆற்றலை மேம்படுத்தலாம். இப்போது குளியலறையில் வாஸ்து குறைபாடு இருந்தால், அதை சரிசெய்ய எந்த பொருட்களை குளியலறையில் வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
1. ஒரு பௌல் கல் உப்பு
வாஸ்துப்படி, கல் உப்பு ஒரு சிறந்த சுத்திகரிப்பானாக கருதப்படுகிறது. இந்த கல் உப்பை கண்ணாடி பௌலில் எடுத்து, அதை குளியலறையில் யாரும் தொட முடியாத ஒரு மூலையில் வையுங்கள். இந்த உப்பை வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அப்போது பழைய உப்பை கழிப்பறையில் கொட்டிவிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம், அது குளியலறையில் உள்ள எதிர்மறை ஆற்றலை அகற்ற உதவுகிறது.
2. பசுமையான தாவரங்கள்
குளியலறை நீர் சக்தியை கொண்டவை. வாஸ்துப்படி, செடிகளை குளியலறையில் வளர்ப்பது நீர் ஆற்றலை சமநிலைப்படுத்த உதவுகிறது. அதுவும் இங்கு மணி பிளான்ட், பாம்பு செடி போன்றவற்றை வைத்து வளர்க்கலாம். ஏனெனில் இந்த வகை செடிகள் ஈரப்பதமான மற்றும் குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் நன்றாக வளரும். மேலும் இந்த வகை செடிகள் காற்றை தூய்மையாக்குகின்றன.
3. கதவில் ஒரு சிறிய கண்ணாடி
வீட்டில் குளியலறை தவறான திசையில் இருந்தால், குளியலறை கதவில் ஒரு கண்ணாடியை வையுங்கள். இப்படி வைப்பதன் மூலம், அந்த ஆற்றல் குளியலறைக்குள் நுழைந்து வெளியேறுவதற்கு முன்பே, அதை மீண்டும் வீட்டிற்குள் திருப்பி அனுப்பிவிட முடியும். முக்கியமாக அந்தக் கண்ணாடி, நுழைவாயிலிலோ அல்லது உங்கள் படுக்கையையோ பார்த்திராதவாறு இருப்பதை மட்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
4. நீலம் அல்லது வெள்ளை நிற பொருட்கள்
குளியலறை என்பது நீர் நிறைந்த இடம் என்பதால், அங்குள்ள பொருட்களானது நீருடன் தொடர்புடைய நிறங்களாக இருக்க வேண்டும். அதுவும் வெள்ளை நிறம் தூய்மையை குறிக்கிறது. எனவே குளியலறையில் உள்ள வாளிகள், குவளைகள் அல்லது நீல நிற தரை விரிப்புகள் போன்றவற்றை பயன்படுத்துங்கள். எக்காரணம் கொண்டும் குளியலறையில் சிவப்பு அல்லது கருப்பு நிறங்களை பயன்படுத்தாரீர்கள். ஏனெனில் இந்த நிறங்கள் நெருப்பையும், இருளையும் குறிக்கின்றன. இந்த நிற பொருட்களை பயன்படுத்தும் போது, அது வீட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
5. நல்ல மணம்
வாஸ்துப்படி, குளியலறை எப்போதும் துர்நாற்றத்துடன் இருப்பது பிரச்சனையாகும். ஏனெனில் துர்நாற்றமானது ஒருவித ஆற்றலை குறிக்கிறது மற்றும் இது உணர்வையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே இதைத் தவிர்க்க குளியலறையில் எலுமிச்சை, சந்தனம் அல்லது லாவெண்டர் மணம் கொண்ட பிரஷ்னர்களை பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் குளியலறையை நறுமணமாக வைத்திருக்க, உலர்ந்த பூக்கள் அல்லது இயற்கை ஊதுபத்திகள் கொண்ட ஒரு கிண்ணத்தை வைத்திருக்கலாம். நறுமணம் வீசும் ஒரு குளியலறை, ஆற்றல் இலகுவாகவும் இயங்குவதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
