நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு பிரச்சனையே வாழ்க்கையா இருக்கப்போகுது!

Mars Transit In Leo On 12 November 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாகவும், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் செவ்வாய், தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த செவ்வாய் நவம்பர் 12 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைவுள்ளார்.

Mars Transit In Leo On 12 November 2026 These Zodiac Signs Will Face Problems In Life

இந்த சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். ஜோதிடத்தில் சூரியனும், செவ்வாயும் நட்பு கிரகங்களாவர். இதனால் இந்த செவ்வாய் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு சவாலாகவும், சாதகமற்றதாகவும் இருக்கும். இப்போது நவம்பர் 12 ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாயால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

கன்னி

கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு முதலீடுகளையும் அவசரப்பட்டு செய்வதைத் தவிர்க்க வேண்டும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்கள் இக்காலத்தில் எந்த ஒரு முடிவுகளையும் கவனமாக எடுக்க வேண்டும். திருமணமானவர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையில் மூன்றாம் நபரின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். இல்லாவிட்டால் வேறுபாடுகள் அதிகரித்துவிடும். தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்த்திடுங்கள்.

பரிகாரம்: செவ்வாயால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தவிர்க்க அனுமன் சாலிசாவை பாராயணம் செய்யுங்கள்.

மகரம்

மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தை புறக்கணிக்காதீர்கள். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உறவுகளில் விரிசல் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் இன்னும் பொறுமையாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும்.

பரிகாரம்: செவ்வாயால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தவிர்க்க கோதுமை, வெல்லம், சிவப்பு நிற ஆடைகளை தானம் செய்யுங்கள்.

மீனம்

மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களை நம்புவதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். தவறான நட்புகளில் இருந்து விலகி இருங்கள். கவனம் மேம்பட யோகா, தியானம் போன்றவற்றை செய்யுங்கள். சிலருக்கு செரிமான பிரச்சனைகள் அல்லது இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

பரிகாரம்: செவ்வாயால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தவிர்க்க செவ்வாய் பகவானுக்கு உரிய மந்திரங்களை பாராயணம் செய்யுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion