ஹோட்டல் ஸ்டைல் சின்ன வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க...

Posted By:

Hotel Style Chinna Vengaya Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு பெரும்பாலும் சட்னியைத் தான் செய்வீர்களா? அதுவும் எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என்று தான் செய்வீர்களா? இப்படி ஒரே சட்னியை திரும்ப திரும்ப செய்து அலுத்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை ஹோட்டல் ஸ்டைல் சட்னியை செய்யுங்கள். அதுவும் வீட்டில் சின்ன வெங்காயம் இருந்தால், ஹோட்டல் ஸ்டைல் சின்ன வெங்காய சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையோடும் இருக்கும்.

Hotel Style Chinna Vengaya Chutney How To Make Hotel Style Shallots Chutney

உங்களுக்கு இந்த ஹோட்டல் ஸ்டைல் சின்ன வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் சின்ன வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* வரமிளகாய் - 12
* பூண்டு - 10 பல்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* தக்காளி - 1 (நறுக்கியது)
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்ப்லை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புளி மற்றும் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், ஹோட்டல் ஸ்டைல் சின்ன வெங்காய சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, October 29, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion