இந்திய வரலாற்றில் 49 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த ஒரே அரசர் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா?

இந்திய வரலாறு பல சக்திவாய்ந்த ஆட்சியாளர்களைக் கண்டுள்ளது. அவர்களில் சிலர் சிறந்த போர்வீரர்களாகவும், சிலர் நம்ப முடியாத அளவிற்கு திறமையான கவிஞர்களாகவும், சிலர் தொலைநோக்குப் பார்வையாளர்களாகவும் இருந்தனர். இன்னும் சிலர் என்றும் மறக்க முடியாத ஆளுமைகளாகத் திகழ்ந்தனர். ஆனால், இந்திய வரலாற்றில் இருந்த ஆயிரக்கணக்கான அரசர்களில் ஒருவர் மட்டும் ஒரு தனித்துவமான காரணத்திற்காக மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கிறது. அவர் மற்ற அனைவரையும் விட நீண்ட காலம் ஆட்சி செய்தார். அவர் கிட்டதட்ட அரை நூற்றாண்டு காலம் வலிமையான ஆட்சியை அளித்தார் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

Who Was the Longest Ruling King in Indian History

இந்த பேரரசர் தனது இடைவிடாத படையெடுப்புகள், அசைக்க முடியாத மன உறுதி மற்றும் தனித்துவமான நிர்வாக முறைக்கு பெயர் பெற்றவராக இருந்தார். நீண்ட கால ஆட்சி பொதுவாக ஒரு நிலைத்தன்மையை வழங்கினாலும், காலப்போக்கில் மெல்ல மெல்ல வெளிப்படும் சிக்கல்களையும் அது உருவாக்கக்கூடும். அவரது ஆட்சியில் பல சாதனைகள் இருந்தாலும், அவரது ஆட்சியில் பல சிக்கல்களும் இருந்தன. அந்த அரசர் யார்? அவரது ஆட்சியில் இருந்த சிக்கல்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

49 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒளரங்கசீப்

இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் என்ற பெருமைக்குரியவர் முகாலய அரசரான ஔரங்கசீப் ஆவார். அவர் கிட்டத்தட்ட 49 ஆண்டுகள் முகலாய அரியணையில் அமர்ந்திருந்தார். அவரது ஆட்சிக்காலம் இந்தியாவின் பெரும் நிலப்பரப்பின் நிர்வாகத்தை மறுவடிவமைக்கவும், இதற்கு முன் கண்டிராத அளவிற்கு எல்லைகளை விரிவுபடுத்தவும், இன்றும் சர்ச்சைகளைத் தூண்டும் வகையில் கலாச்சாரத்தில் தாக்கத்தை கொண்டுவரவும் இந்த காலம் போதுமானதாக இருந்த்து. அவரது ஆட்சி என்பது வெறும் கால அளவைப் பற்றியது மட்டுமல்ல. அதில் பல்வேறு மாற்றங்களும் சிக்கல்களும், சர்ச்சைகளும் இந்திய வரலாற்றின் அடுத்த கட்டத்தை வடிவமைத்த விளைவுகளைக் கொண்டிருந்தது

முகலாயப் பேரரசை பெருமளவில் விரிவுபடுத்தினார்

ஔரங்கசீப்பின் கீழ், முகலாயப் பேரரசு கடந்த கால முகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் இல்லாத அளவிற்கு விரிவடைந்தது. அவரது ஆட்சிக்காலத்தில் அவருடைய இராணுவம் இடைவிடாமல் தொடர்ந்து படையெடுப்புகளில் ஈடுபட்டது. தக்காணத்தில் ஒரு படையெடுப்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. அது அவரது மிகப்பெரிய இராணுவத்திற்க்கு சோர்வூட்டுவதாகவும், முகலாய அரசுக்கு அதிக செலவை ஏற்படுத்துவதாகவும், ஒளரங்கசீப்பின் மன உறுதியை சோதிப்பதாகவும் இருந்தது. அவரது ஆட்சிக்காலத்தில் எல்லைகள் விரிவடைந்தாலும் தொலைதூரப் பிரதேசங்களைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. எந்தவொரு தகவலையும் தெரியப்படுத்த வாரக்கணக்கில் ஆனது, கிளர்ச்சிகள் தொடர்ந்து எழுந்து கொண்டிருந்தன. அவரது ஆட்சிக்காலத்தில் பேரரசு மிகப்பெரியதாக வளர்ந்தது, ஆனால் அதில் பல சிக்கல்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

கடுமையான சட்டங்கள்

ஔரங்கசீப் ஒழுக்கத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்தார், அதிகாரிகளை உன்னிப்பாகக் கண்காணித்தார், மேலும் அனைத்து அதிகாரத்தையும் தனது கைகளில் வைத்திருந்தார். அவர் நிர்வாகத்தின் மீது உறுதியான பிடியை வைத்திருந்தார், மேலும் தனது அதிகாரிகள் எந்தவித காரணமும் இல்லாமல் தனது வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால், ஒரு நபரை பெரிதும் சார்ந்திருக்கும் ஒரு அமைப்பு, அந்த நபர் மறைந்தவுடன் பலவீனமாகிவிடும். அதுதான் முகலாய அரசின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது.

மதரீதியான நம்பிக்கைகள்

ஔரங்கசீப் இந்திய வரலாற்றில் அவரது வலுவான மத நம்பிக்கைகளுக்காக நினைவுகூரப்படுகிறார். அவர் இஸ்லாமியச் சட்டத்தை தீவிரமாகப் பின்பற்றினார், மேலும் மக்களின் கலாச்சார வாழ்க்கை, பண்டிகைகள் மற்றும் அன்றாடப் பழக்கவழக்கங்களைப் பாதிக்கும் முடிவுகளை எடுத்தார். அவர் ஒழுங்கையும் ஒற்றுமையையும் உருவாக்க முயன்றதாகச் சிலர் நம்பினர். ஆனால் சிலர், அவரது கொள்கைகள், கடந்த முகலாய ஆட்சியாளர்களின் ஆட்சியில் நெகிழ்வுத்தன்மையுடன் வாழ்ந்த சமூகங்களுக்கு இடையே இடைவெளியை உருவாக்கியதாக உணர்ந்தனர். ஔரங்கசீப்பின் இந்த முடிவுகள் அவரது ஆட்சிக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தின, மேலும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்றும் அவை விவாதப் பொருளாகவே இருக்கின்றன.

Story first published: Thursday, October 29, 2026, 10:55 [IST]
Desktop Bottom Promotion