பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவா?

2026 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. கடந்த மாதத்தில் அதிகபட்சமாக 1 பவுன் தங்கம் 1.20 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த அதிக விலை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், தங்க நகைகளின் விலை மிகவும் அதிகரித்திருப்பது பொது மக்களுக்கு மிகப்பெரிய கவலையாகவும், சுமையாகவும் மாறியுள்ளது.

Baba Vanga s Shocking Prediction About Gold Price in 2027

2027 ஆம் ஆண்டு இன்னும் 2 மாதத்தில் வரப்போகும் சூழலில், 2027-ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 2027 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை குறித்து பாபா வங்கா கூறியதாகக் கூறப்படும் கணிப்புகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பாபா வங்காவின் கணிப்பு

2026-ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் வேளையில், 2027-இல் தங்க விலை எப்படி இருக்கும் என்பது குறித்த விவாதம் இப்போதே எழுந்துள்ளது. ஏனெனில் வரப்போகிற ஆண்டில் உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல்கேரிய நாட்டு தீர்க்கதரிசி பாபா வங்காவின் கணிப்புகள் இணையத்தில் பரவி வருகின்றன. அதன்படி, 2027-ல் ஆண்டு தங்க விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொடக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால், 2027-இல் தங்க விலை எந்த அளவுக்கு உயரக்கூடும்? மேற்கொண்டு பார்க்கலாம்.

தங்கம் விலை உயரக் காரணம்

அமெரிக்க டாலரின் பலவீனம் மற்றும் உலகளாவிய நிதிச் சந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கம் ஆகியவை தங்கத்திற்கான தேவையை தொடர்ந்து அதிகரித்துள்ளன. வட்டி விகிதங்கள் குறித்த எதிர்பார்ப்புகள், அத்துடன் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்கள் ஆகியவை, தங்கத்தின் தொடர்ச்சியான விலை உயர்வுக்குக் காரணமாக உள்ளன.

2027-ன் பொருளாதார நெருக்கடி

பாபா வங்கா 2027-ஆம் ஆண்டிற்காகக் கணித்ததாகக் கூறப்படும் விஷயங்களில், உலகளாவிய பொருளாதார சிக்கல் அல்லது "பணத் தட்டுப்பாடு" ஏற்படலாம் என்பதும் இதில் அடங்கும். இந்த சூழல் பாரம்பரிய வங்கி அமைப்புகள் மீதான நம்பிக்கையைக் குலைத்து, மக்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்யும் நிலையை நோக்கி தள்ளும். சில பொருளாதார அறிஞர்களின் கணிப்பு படி, தங்கத்தின் விலை 25% முதல் 40% வரை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பாபா வங்காவின் தங்கம் பற்றிய கணிப்பு

பாபா வங்காவின் கணிப்பு என்று இணையத்தில் பரவும் தகவல்களின்படி, 2027-ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 2.62 லட்சம் ரூபாய் முதல் 2.82 லட்சம் ரூபாய் வரை உயரக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இவை அவரது கணிப்பு மட்டுமே.எனவே, இவற்றை உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக கருதமுடியாது.

பொருளாதார அறிஞர்களின் கணிப்பு

தங்கத்தின் விலை உயர்வு குறித்த விவாதம், பாபா வங்கா கூறியதாகக் கூறப்படும் கூற்றுகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில், யுபிஎஸ் (UBS), ஜேபி மோர்கன் (JPMorgan) மற்றும் டாய்ச் வங்கி (Deutsche Bank) உள்ளிட்ட உலகளாவிய நிதி நிறுவனங்களின் ஆய்வாளர்களும் தங்கத்தின் விலை உயரும் என கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். இருப்பினும், பாபா வங்காவின் கூறப்படும் கணிப்புகளுக்குத் தெளிவான எழுத்துப்பூர்வ ஆவணப் பதிவு எதுவும் இல்லை. இருப்பினும், இந்த வருடத்தை விட 2027-ல் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Story first published: Thursday, October 29, 2026, 15:30 [IST]
Desktop Bottom Promotion