Latest Updates
-
வர நவம்பர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவா? -
மணமணக்கும்.. செட்டிநாடு வெங்காய ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசி அள்ளும்.. -
1 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
World Stroke Day 2026: உயர் இரத்த அழுத்தம் பக்கவாத அபாயத்தை அதிகரிப்பது எப்படி? விளக்கும் டாக்டர்! -
இந்திய வரலாற்றில் 49 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த ஒரே அரசர் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா? -
வரப்போகும் குரு பெயர்ச்சிக்கு பின் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. -
ஹோட்டல் ஸ்டைல் சின்ன வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
அக்டோபர் 29, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள தோல்விகள் துரத்தப்போகுதாம் -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு பிரச்சனையே வாழ்க்கையா இருக்கப்போகுது!
வெயிலால் கருமையான முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப செம்பருத்தி பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Skin Care Tips In Tamil: கோடை வெயில் தான் சருமத்தை கருமையாக்கும் என்பதில்லை, தினமும் வெளியே செல்வதனாலும் சருமம் கருமையாகக்கூடும். குறிப்பாக முகம், கை, கழுத்து, போன்ற பகுதிகள் சூரிய ஒளியின் தாக்கத்திற்கு அதிகம் உள்ளாகும் போது, அப்பகுதிகளின் நிறம் கருமையாக மாறக்கூடும். இப்படி வெயிலால் கருமையான சருமத்தின் பொலிவை மீட்டெடுக்க பலரும் பார்லர் சென்று ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க், ப்ளீச்சிங் போன்ற சரும பராமரிப்புக்களைக் கொடுப்பார்கள். ஆனால் உங்களுக்கு பார்லர் செல்ல நேரம் இல்லாவிட்டால், கவலை வேண்டாம்.

உங்கள் வீட்டு தோட்டத்தில் செம்பருத்தி பூக்கள் இருந்தால், அந்த பூக்களுடன் ஒருசில இயற்கை பொருட்களை சேர்த்து ஃபேஸ் பேக் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம், வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கி, சருமத்தின் நிறம் மேம்படும்.
முக்கியமாக இந்த செம்பருத்தி ஃபேஸ் பேக்கை பண்டிகை காலங்களில் பயன்படுத்தினால், பொலிவிழந்து காணப்படும் முகத்தை பொலிவோடு மாற்றலாம். இப்போது வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்க உதவும் செம்பருத்தி ஃபேஸ் பேக்கை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்பதைக் காண்போம்.
செம்பருத்தி ஃபேஸ் பேக் தயாரிக்க தேவையான பொருட்கள்:
* செம்பருத்தி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* சந்தன பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* மாதுளை பவுடர் - 1/2 டேபிள் ஸ்பூன்
* ரோஸ் வாட்டர் - 2 டேபின் ஸ்பூன்
தயாரித்து பயன்படுத்தும் முறை:
* இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பதற்கு ஒரு பௌலில் செம்பருத்தி பவுடர், சந்தன பவுடர் மற்றும் மாதுளை பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை செம்பருத்தி பவுடர் இல்லாவிட்டால், செம்பருத்தி பூக்களின் இதழ்களை அரைத்து பயன்படுத்தலாம்.
* பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* அதன் பின் முகத்தை துடைத்துவிட்டு, தவறாமல் சரும வகைக்கேற்ப மாய்ஸ்சுரைசரை தடவி, அதைத் தொடர்ந்து சன் ஸ்க்ரீனையும் பயன்படுத்த வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக் எப்படி உதவுகிறது?
* செம்பருத்திப் பவுடர் பாரம்பரிய சருமப் பராமரிப்பு முறைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாகும். இது சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.
* சந்தன பவுடர் சருமத்திற்கு குளிர்ச்சியான உணர்வைத் தருவதால், சரும பராமரிப்பிற்கு ஏற்ற மிகச்சிறந்த பொருட்களுள் இதுவும் ஒன்றாகும்.
* மாதுளை பவுடரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது. அதே சமயம் ரோஸ் வாட்டர் சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்திற்கு புத்துணர்ச்சியைத் தருகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
