வர நவம்பர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா?

November 2026 Numerology Predictions: எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நநபரின் குணங்கள் மற்றும் எதிர்காலத்தை கணிக்கலாம். எப்படி ஒருவரது பிறந்த நேரத்தைப் பொறுத்து ராசி உள்ளதோ, அதேப் போல் ஒருவரது பிறந்த தேதியைப் பொறுத்து விதி எண் உள்ளது. இந்த விதி எண் எப்படி கணக்கிடப்படுகிறது என்றால், பிறந்த தேதியின் கூட்டுத் தொகையின் ஒற்றை இலக்க எண் ஆகும். அதாவது ஒருவரது பிறந்த தேதி 24 என்றால், 2+4=6 ஆகும்.

November 2026 Numerology Predictions People Born On These Dates Will Be Lucky

எண் கணிதத்தின் படி, வருகிற நவம்பர் மாதமானது சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும். குறிப்பாக பணப் பிரச்சனைகள் குறையும், உறவுகளில் உள்ள சிக்கல்கள் மற்றும் தவறான புரில்கள் தீரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கலாம். இப்போது நவம்பர் மாதத்தில் அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

எண் 1

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதத்தில் பணியிடத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. வாழ்வில் முன்னேற விரும்பினால், அனுபவசாலிகளின் ஆலோசனையை கேளுங்கள். இப்படி கேட்பதனால் சரியான முடிவை எடுப்பீர்கள்.

எண் 2

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதம் உறவுகளைப் பொறுத்தவரை முக்கியமானதாக இருக்கும். யாருடனாவது சண்டையாக இருந்தால், இம்மாதத்தில் அந்த சண்டையை பேசி தீர்ப்பீர்கள். இருந்தாலும், இம்மாதத்தில் நிதி ரீதியாக உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். செலவுகளை திட்டமிட்டு செய்தால், பணத்தை சேமிக்கலாம்.

எண் 4

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதத்தில் வாழ்வில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கலாம். நீண்ட காலமாக தொந்தரவு செய்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருந்தாலும், இம்மாதத்தில் எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்பும், அதன் நன்மை, தீமைகளை சிந்தித்து பாருங்கள். சிந்திக்காமல் எந்த ரிஸ்க் எடுப்பதையும் தவிர்த்திடுங்கள்.

எண் 6

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நவம்பர் மாதத்தில் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவார்கள். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். இதுவரை வேலையில் தடைகளை சந்தித்து வந்தால், இம்மாதத்தில் அந்த வேலை வெற்றிகரமாக முடிவடையும். பணப் பிரச்சனைகளில் இருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும். இருப்பினும், பணத்தை செலவழிக்கும் போது பட்ஜெட்டை கவனித்து செய்யுங்கள்.

எண் 7

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். திடீரென்று நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இருந்தாலும் எந்த ஒரு பணம் தொடர்பான முடிவையும் அவசரப்பட்டு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, October 29, 2026, 16:07 [IST]
Desktop Bottom Promotion