Latest Updates
-
வெயிலால் கருமையான முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப செம்பருத்தி பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
வர நவம்பர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவா? -
மணமணக்கும்.. செட்டிநாடு வெங்காய ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசி அள்ளும்.. -
1 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
World Stroke Day 2026: உயர் இரத்த அழுத்தம் பக்கவாத அபாயத்தை அதிகரிப்பது எப்படி? விளக்கும் டாக்டர்! -
இந்திய வரலாற்றில் 49 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த ஒரே அரசர் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா? -
வரப்போகும் குரு பெயர்ச்சிக்கு பின் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. -
ஹோட்டல் ஸ்டைல் சின்ன வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
அக்டோபர் 29, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள தோல்விகள் துரத்தப்போகுதாம்
Hair Care: கருகருவென நீளமான முடி வேணுமா? அப்ப முட்டையை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க
Hair Care: முட்டைகள் நமது காலை உணவு, இரவு உணவு, மற்றும் ஸ்னாக்ஸ் என அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சிறந்த உணவாக மட்டும் இல்லாமல் நமது முடியின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் இருக்கும் புரதங்கள், வைட்டமின் ஏ, ஈ, டி, பயோட்டின் மற்றும் சில அத்தியாவசிய தாதுக்களும் நிறைந்திருக்கிறது. இது உரோமக்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி முடியை வலுவடைய செய்து, ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றன.

எப்போதும் எந்த ஒரு ஆரோக்கியமான உணவு பொருளையும் சாப்பிடுவது மிக முக்கியம் என்றாலும், இப்படி நேரடியாக பயன்படுத்துவது கூடுதலான ஒரு பலனை நமக்கு கிடைக்க செய்யும். அவற்றை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நாம் இங்கு பார்க்கலாம்.
முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் மாஸ்க்
தேவையான பொருட்கள்:
- முட்டைகள் - 1 அல்லது 2
- ஆலிவ் எண்ணெய் - 2 டீ ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
- முட்டையை நன்கு நுரை வரும் வரை அடித்து, அதனுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின் ஈரமான முடியில் அடித்து வைத்த முட்டை கலவையை உச்சந்தலை முதல் நுனி வரை தடவவும். நன்கு வேர்க்கால்களில் படும்படி தடவவும்.
- அரை மணி நேரம் அப்படியே விட்டு விடவும். பின் குளிர்ந்த நீரில் தலையை அலசி, எப்போதும் பயன்படுத்தும் ஷாம்பு உபயோகித்து அலசி கொள்ளவும்.
- இதை வாரத்திற்கு ஒரு முறை செய்வது சிறந்த பலன் கொடுக்கும்.
- முடிக்கு ஈரப்பதத்தை அளித்து அதை வலுப்படுத்த, ஆலிவ் எண்ணெயில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளும் உதவுகின்றன.
- இதனுடன் புரத சத்து நிறைந்த முட்டையை சேர்க்கும் போது, உச்சந்தலை மற்றும் முடிக்கு தேவையான ஊட்ட சத்துக்களை வழங்கி, முடியின் வளர்ச்சியை ஊக்குவித்து, முடி உதிர்வதை குறைக்கிறது.
முட்டை மற்றும் தேன் மாஸ்க்
தேவையான பொருட்கள்:
- முட்டை - 1
- தேன் - 1 டீ ஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
- முட்டையை நன்கு நுரை வரும் வரை அடித்து கொள்ளவும். பின் அதனுடன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இதை தலையின் வேர் முதல் நுனி வரை சமமாக தடவி, அரை மணி நேரத்திற்கு அப்படியே விடவும். பின் குளிர்ந்த நீரில் நன்கு அலசி, ஷாம்பு பயன்படுத்தி கொள்ளலாம்.
- பளபளப்பான மற்றும் ஈரப்பதமான கூந்தலை பெற வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தவும்.
- தேன் ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டியாக செய்யப்பட்டு, முடிக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது. அதே சமயம் ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதால் முடிக்கு கூடுதல் பளபளப்பை தருகிறது.
- இது வறண்ட கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி, முடியின் நுனியில் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கவும் உதவுகிறது.
முட்டை மற்றும் வாழைப்பழ மாஸ்க்
தேவையான பொருட்கள்:
- நன்றாக பழுத்த வாழைப்பழம் - 1
- முட்டை - 1
- ஆலிவ் எண்ணெய் - 2 டீ ஸ்பூன்
- தேன் - 1 டீ ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
- வாழைப்பழத்தை தோல் உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும். பின் அதனுடன் முட்டை, ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- ஈரமான முடியில் எல்லாப் பக்கங்களிலும் படும்படி நன்கு தடவவும். பின் அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்து குளிர்ந்த நீரில் அலசி, ஷாம்பு உபயோகிக்கவும்.
- முடியின் வலிமை அதிகரிக்க வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தவும்.
- பொட்டாசியம் மற்றும் இயற்கை எண்ணெய்கள் வாழைப்பழத்தில் நிறைந்து இருப்பதால், முடியை மென்மையாக்கி வலுப்படுத்த உதவுகின்றன.
- இந்த மாஸ்க் முடியின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, முடி உடைவதை குறைப்பதோடு வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
முட்டை மற்றும் கற்றாழை ஹேர் மாஸ்க்
தேவையான பொருட்கள்:
- முட்டை - 1
- கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
- ஒரு மிக்ஸி ஜாரில் முட்டை மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். இதை உச்சந்தலை, முடியின் வேர் முதல் நுனி வரை தடவவும்.
- பின் அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விட்டு, குளிர்ந்த நீரால் அலசி, ஷாம்பு போட்டு குளித்து கொள்ளவும். முடி வளர்ச்சியை அதிகரிக்க வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து இதை பயன்படுத்தவும்.
- உச்சந்தலையில் ஏற்படக் கூடிய எரிச்சல் மற்றும் பொடுகை குறைப்பதில் கற்றாழையில் இயற்கையாகவே உள்ள இதமளிக்கும் பண்புகள் முக்கிய பங்கு வகின்றன.
- முட்டையில் உள்ள அத்தியாவசிய சத்துக்களோடு இது சேரும் போது, முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.
முட்டை மற்றும் வெந்தய மாஸ்க்
தேவையான பொருட்கள்:
முட்டை - 1
வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன் (இரவு முழுவதும் ஊறவைத்து, அரைத்து விழுதாக்கியது)
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
- வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும். அதனுடன் முட்டை மற்றும்ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இதை உச்சந்தலையிலும் முடியிலும், முடியின் வேர் முதல் நுனி வரை தடவவும். பின் அதை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை அப்படியே விடவும்.
- குளிர்ந்த நீரால் நன்கு அலசி, ஷாம்பு போட்டு குளிக்கவும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்த வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து பயன்படுத்தவும்.
- வெந்தயத்தில் இருக்கும் நிகோடினிக் என்னும் அமிலமும், புரதங்களும் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. இவை மயிர்க்கால்களை வலுப்படுத்தி, முடி உதிர்வைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகின்றன.
- இந்த மாஸ்க் உச்சந்தலைக்கு ஊட்டமளித்து, முடி உதிர்வை குறைப்பதோடு முடியின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
முக்கிய குறிப்புகள்:
- எப்போதும் தலைக்கு குளிக்கும் போது குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான நீரை பயன்படுத்த வேண்டும்.
- அதிலும் முட்டை ஹேர் மாஸ்க்குகளை பயன்படுத்தும் போது, சூடான தண்ணீரை பயன்படுத்தினால் முட்டையின் மூலப்பொருட்கள் வேதிமாற்றம் அடைந்தால் தலையில் இருந்து அகற்றுவது கடினமாகி துர்நாற்றம் வீசக் கூடும்.
- உங்களுக்கு முட்டையினால் ஒவ்வாமை ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ள, எந்தவொரு மாஸ்க்கை பயன்படுத்துவதற்கு முன்பும் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டியது அவசியம்.
- எந்த மாஸ்க்காக இருந்தாலும் அவற்றை தொடர்ந்து பயன்படுத்த வேண்டியது அவசியம். இந்த மாஸ்க்குகளைத் தவறாமல் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், சமச்சீரான உணவுகளை உட்கொள்வது, முடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
- நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், முட்டை மாஸ்க்குகள் முடி ஆரோக்கியத்திற்கு கணிசமாகப் பயனளிக்கும் என்றாலும், அவை உடலுக்கு தேவைப்படும் முறையான ஊட்டச்சத்து, மன அழுத்த மேலாண்மை மற்றும் மென்மையான முடி பராமரிப்பு போன்றவையும் இவற்றில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கின்றன.



Click it and Unblock the Notifications

