தஞ்சாவூர் தவலை அடை ரெசிபி - இந்த மாதிரி டிபன் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஆசையா நிறைய சாப்பிடுவாங்க

Posted By:

Thavalai Dosai Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது மாலை நேர உணவாக உற்பத்தி இட்லி, தோசைதான். சொல்லப்போனால் நம்மால் இட்லி, தோசை இல்லாமல் வாழவே முடியாது என்கிற நிலைக்கு நாம் வந்து விட்டோம். ஆனால் வாரம் முழுக்க இவற்றையே சாப்பிட முடியாதல்லவா? இட்லி, தோசை போரடிக்கும் நேரத்தில் இடியாப்பம், பணியாரம் போன்றவற்றை செய்வோம்.

Thavalai Dosai Recipe How to Make at Home in Tamil

பிற டிபன்களில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் அவற்றை செய்ய அதிக நேரம் தேவைப்படும். எனவே குறைவான நேரத்தில் சுவையாக செய்யக்கூடிய ஒரு டிபனை நாம் கண்டறிய வேண்டும். அப்படியொரு டிபன்தான் தவலை தோசை. இந்த தஞ்சாவூர் ஸ்பெஷல் டிபனை மிகவும் எளிதாக செய்து விடலாம்.

உங்களுக்கு தஞ்சாவூர் தவலை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தஞ்சாவூர் தவலை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- உளுத்தம் பருப்பு - ½ கப்
- பாசிப் பருப்பு - ¼ கப்
- இட்லி அரிசி / புழுங்கல் அரிசி - 2 கப்
- துவரம் பருப்பு - 1 கப்
- கடலை பருப்பு - 1 கப்
- காய்ந்த மிளகாய் - 5
- பச்சை மிளகாய் - 4
- இஞ்சி - ஒரு இன்ச் அளவு
- பெருங்காயத் தூள் - ½ டீ ஸ்பூன்
- மிளகு - ½ டீ ஸ்பூன்
- சீரகம் - ½ டீ ஸ்பூன்
- சமையல் எண்ணெய் - தேவையான அளவு (தோசை ஊற்ற)
- உப்பு - தேவையான அளவு

செய்முறை:

- அரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.

- தண்ணீர் ஊற்றி இரண்டு அல்லது மூன்று முறை நன்கு கழுவி, நீரை வடித்துவிடவும். பின் அரிசி மற்றும் பருப்பு வகைகளை சுத்தமான தண்ணீர் குறைவாக சேர்த்து கொள்ளவும்.

- அதனுடன் காய்ந்த மிளகாயை காம்பு நீக்கி சேர்க்கவும். சீரகத்தையும் சேர்த்து குறைந்தது 3-5 மணி நேரம் ஊற வைக்கவும்.

- நன்றாக ஊறியதும் தண்ணீரை முழுமையாக மற்றொரு பாத்திரத்தில் வடித்து வைக்கவும்.

- ஊறவைத்து தண்ணீர் வடித்து வைத்த கலவையை மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து கொள்ளுங்கள். பின் அதனுடன் பச்சை மிளகாய், பெருங்காயம், மற்றும் மிளகு சேர்த்து, சற்று கொரகொரப்பாக கெட்டியான மாவாக அரைத்து கொள்ளவும்.

- அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை இலைகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

- அடுப்பில் அடி கனமான இரும்பு ஆப்ப சட்டி அல்லது தோசைக்கல் அல்லது நான்-ஸ்டிக் தவாவை வைத்து சூடாக விடவும்.

- தோசை ஊற்ற தேவையான அளவு எண்ணெய் சேர்த்து பரப்பி, பின் ஒரு பெரிய கரண்டி மாவை ஊற்றி, லேசாகப் பரப்பவும்.

- பின் தோசையை சுற்றி தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, தவாவை ஒரு மூடியால் மூடிவும்.

- அடுப்பை மிதமான தீயில் வைத்து, தோசை பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வரும் வரை வேக வைக்கவும்.

- பின் தோசையை திருப்பிப் போட்டு, மறுபக்கமும் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வரும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான தவலை தோசை ரெடி!

- இதே போல் மீதமுள்ள மாவை கொண்டு தேவையான அளவு தோசை செய்து கொள்ளலாம். மீதமான மாவை பிரிட்ஜ்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்தலாம்.

- இந்த தவளை தோசைக்கு தேங்காய் சட்னி அல்லது இட்லி பொடி ஏற்ற சைடு-டிஷ்ஷாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Thursday, October 29, 2026, 20:08 [IST]
Desktop Bottom Promotion