Latest Updates
-
தீபாவளிக்கு 1 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இந்த ரிப்பன் பக்கோடா செய்யுங்க.. 10 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
Diwali 2026: இந்த தீபாவளிக்கு லட்சுமி தேவியின் ஆசியை பெற உதவும் எளிய வாஸ்து டிப்ஸ்கள் - மறக்காம செய்யுங்க -
Vastu Tips: வாஸ்துப்படி கடிகாரத்தை வீட்டின் எந்த திசையில் தொங்கவிட வேண்டும் தெரியுமா? -
தஞ்சாவூர் தவலை அடை ரெசிபி - இந்த மாதிரி டிபன் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஆசையா நிறைய சாப்பிடுவாங்க -
Hair Care: கருகருவென நீளமான முடி வேணுமா? அப்ப முட்டையை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
வெயிலால் கருமையான முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப செம்பருத்தி பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
வர நவம்பர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவா? -
மணமணக்கும்.. செட்டிநாடு வெங்காய ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசி அள்ளும்.. -
1 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
முழுமுதற் கடவுளான விநாயகருக்கு எலி எப்படி வாகனமாக மாறியது தெரியுமா?
இந்து மதத்தின் முழுமுதற் கடவுளான விநாயகர் அனைத்து கடவுள்களின் மையமாகத் திகழ்கிறார். விநாயகரின் யானைத் தலையும் அமைதியான புன்னகையும் ஞானத்தையும், புதிய தொடக்கங்களையும், வாழ்க்கையின் தடைகளை நீக்கும் சக்தியையும் குறிக்கின்றன. இந்து மதத்தின் முழுமுதற் தெய்வம் ஏன் ஒரு சிறிய எலியின் மீது சவாரி செய்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?

ஒரு பிரம்மாண்டமான கடவுள் ஒரு சிறிய பிராணியைத் தனது வாகனமாக தேர்ந்தெடுத்ததற்குப் பின்னால் பல அர்த்தங்கள் உள்ளது. அதற்கான காரணம் இந்து மத புராணங்களில் ஒளிந்துள்ளது, இது கர்வம், கருணை, மாற்றம், மற்றும் அகந்தைக்கும் பணிவுக்கும் இடையிலான காலத்தால் அழியாத போட்டி ஆகியவற்றால் நிரம்பிய ஒரு கதையாகும்.
கஜமுகாசுரனின் எழுச்சி
தேவர்களும், அசுரர்களும் வாழ்ந்த புராண காலத்தில், கஜமுகாசுரன் என்ற பயங்கரமான அரக்கன் வாழ்ந்து வந்தான். அந்த அசுரன் தனது பெயருக்கேற்ப, யானையின் முகத்தையும், ஒரு வலிமைமிக்க யானைக்குரிய உடல் அமைப்பையும் கொண்டிருந்தான். மிகுந்த லட்சியமும் அகங்காரமும் கொண்ட அவன், சிவபெருமானிடமிருந்து வரம் பெறுவதற்காகக் பல ஆண்டுகள் கடுமையான தவம் புரிந்தான். சிவபெருமான் அவனுக்கு முன்னால் தோன்றியபோது, கஜமுகாசுரன் யாராலும் வெல்ல முடியாத ஒரு வரத்தைக் கேட்டான். தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், அசுரர்கள் அல்லது அரக்கர்கள் என யாராலும் தன்னைக் கொல்ல முடியாது என்ற வரத்தை அவன் சிவபெருமானிடம் கேட்டான். இதில் ஒரு நுணுக்கமான நிபந்தனையும் இருந்தது, அது என்னவெனில் யானை மீது அமர்ந்திருப்பவர் யாராலும் அவனுக்குத் தீங்கு விளைவிக்க முடியாது என்பதே அது.
இந்த வலிமைமிக்க வரத்தைப் பெற்ற பிறகு, அந்த அரக்கன் யாராலும் வெல்ல முடியாதவனாக மாறினான். அவனது ஆணவமும், தலைக்கணமும் மேலும் பெருகியது. தன்னை மூன்று உலகங்களுக்கும் அதிபதியாக அறிவித்துக்கொண்ட அவன், பூலோகத்திலும் தேவலோகத்திலும் அனைவரின் மனதிலும் அச்சத்தைப் பரப்பினான். எந்தத் தேவராலும் அவனைத் தடுக்க முடியவில்லை.
விநாயகரின் வருகை
கஜமுகாசுரனின் ஆட்சியில் மூன்று உலகமும் நடுங்கிக்கொண்டிருந்தபோது, தேவர்கள் சிவபெருமானின் புதல்வனான, யானை முகத்தைக் கொண்ட விநாயகரை உதவிக்காக நாடினர். விநாயகரின் அமைதியான தோற்றமும் பருத்த உடலமைப்பும் எதிரிகளை அடிக்கடி ஏமாற்றக்கூடும் என்றாலும், அவர் தனது ஞானத்திற்காகவும், ஆன்மீகத் தடைகளை நீக்கும் ஆற்றலுக்காகவும் புகழ்பெற்றவர்.
ஈசன் கஜமுகாசுரனை வதைக்கும் படி விநாயகருக்கு ஆணையிட்டார். விநாயகர் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார். கஜமுகாசுரனை வீழ்த்த வெறும் உடல் வலிமை மட்டும் போதாது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. இந்தப் போருக்கு அறிவுக்கூர்மை, கருணை மற்றும் அந்த அரக்கனுக்குக் கிடைத்த வரத்தை முறியடிக்கும் வகையில் சிந்திக்கும் திறன் ஆகியவை தேவைப்பட்டன.
ஞானத்திற்கும், அகங்காரத்திற்குமான யுத்தம்
கஜமுகாசுரனும், விநாயகரும் போருக்கு தயாராகினர். தனக்குக் கிடைத்த வரத்தின் வலிமையால் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டிருந்த கஜமுகாசுரன், விநாயகரை மிகவும் அலட்சியமாக எதிர்கொண்டான். விநாயகர் தனது கோடாரி மற்றும் உடைந்த தந்தம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டு தாக்க, அசுரனோ தனது அசுர பலத்தையும், அகங்காரத்தையும் கொண்டு எதிர்த்தான். விநாயகரின் தாக்குதல்கள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் வீணாயின. ஆனால், அந்த அசுரன் ஒரு பெரும் தவறைச் செய்தான். தப்பித்து மறைந்துகொள்ளும் முயற்சியில், அவன் தன்னை ஒரு சுண்டெலியாக மாற்றிக்கொண்டான். அந்தச் சிறிய உருவத்தைக் கண்டு யாரும் தன்னை கவனிக்க மாட்டார்கள் என்று அவன் நம்பினான். ஆனால், விநாயகர் அவனை பார்த்து விட்டார். அந்தச் சுண்டெலியை நசுக்கவோ அல்லது தாக்கவோ செய்யாமல், விநாயகர் புன்னகைத்தபடி முன்னேறி, மெதுவாக அதன் முதுகின் மீது ஏறி அமர்ந்துகொண்டார்.
அரக்கனிலிருந்து பக்தனாக மாற்றம்
விநாயகர் தனது எடையை அதிகரிக்க அதிகரிக்க, அந்த எலியால் அதைத் தாங்க முடியவில்லை. அது வலி தாங்க முடியாமல் துடித்துப்போய் பணிந்தது. வலிமைமிக்க அரக்கனாக இருந்தவன், இப்போது மிகச்சிறிய உருவத்திற்குச் சுருங்கி, தனது அகங்காரத்தின் பயனற்ற தன்மையை உணர்ந்துகொண்டான். விநாயகர் தனது தந்தத்தை அந்த அரக்கன் மீது வீச, அதனால் அவன் நிரந்தரமாக எலியின் உருவத்தைப் பெற்றான் என்று கூறப்படுகிறது.
அரக்கனின் சரணடைதலைக் கண்டு நெகிழ்ந்த விநாயகர், அவனுக்குத் தண்டனை வழங்குவதற்குப் பதிலாக கருணை காட்டுகிறார். அவர் அந்த அரக்கனைத் தனது வாகனமாக மாற்றிக்கொண்டு, அவனுக்கு 'மூஷிகன்' என்று பெயரிட்டார். அன்று முதல், ஒரு காலத்தில் மூன்று உலகையும் ஆட்டிப்படைத்த அந்த அசுரன், விநாயகருக்கு நம்பிக்கைக்குரிய தோழனாக மாறினார். இன்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிலைகளிலும் திருவிழாக்களிலும் மூஷிகனைக் காணமுடியும்.
ஆன்மீக அர்த்தம்
கஜமுகாசுரனின் அகங்காரம் என்பது ஒருவரின் மிகைப்படுத்தப்பட்ட 'நான்' என்ற உணர்வைக் குறிக்கிறது. எவ்வளவு வலிமை வாய்ந்தவனாக இருந்தாலும், பணிவாலும் ஞானத்தாலும் இந்த அகங்காரத்தை வீழ்த்த முடியும் என்பதை இது உணர்த்துகிறது. எலி என்பது மனித விருப்பங்களைக் குறிக்கிறது, இவை சிறியவைதான், ஆனால் விடாப்பிடியானவை. எப்போதும் ஒருவரின் அமைதியையும் தெளிவையும் அரித்துக்கொண்டே இருப்பவை. விநாயகர் எலியின் மீது அமர்ந்திருப்பது, அந்த விருப்பங்களின் மீது அவர் கொண்டுள்ள கட்டுப்பாட்டைக் காட்டுகிறது. ஞானம் என்பது விருப்பங்களை அழிப்பதல்ல, மாறாக அவற்றைச் சரியான திசையில் செலுத்தி, கட்டுக்குள் வைத்திருப்பதே என்பதை இது உணர்த்துகிறது.



Click it and Unblock the Notifications

