Latest Updates
-
நவம்பர் 03-ல் நடக்கும் புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
முழுமுதற் கடவுளான விநாயகருக்கு எலி எப்படி வாகனமாக மாறியது தெரியுமா? -
தீபாவளிக்கு 1 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இந்த ரிப்பன் பக்கோடா செய்யுங்க.. 10 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
Diwali 2026: இந்த தீபாவளிக்கு லட்சுமி தேவியின் ஆசியை பெற உதவும் எளிய வாஸ்து டிப்ஸ்கள் - மறக்காம செய்யுங்க -
Vastu Tips: வாஸ்துப்படி கடிகாரத்தை வீட்டின் எந்த திசையில் தொங்கவிட வேண்டும் தெரியுமா? -
தஞ்சாவூர் தவலை அடை ரெசிபி - இந்த மாதிரி டிபன் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஆசையா நிறைய சாப்பிடுவாங்க -
Hair Care: கருகருவென நீளமான முடி வேணுமா? அப்ப முட்டையை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
வெயிலால் கருமையான முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப செம்பருத்தி பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
வர நவம்பர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவா?
நவம்பர் 22-ல் சுக்கிரன் சொந்த ராசிக்குள் செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், உறவுகள் மற்றும் அழகு ஆகியவற்றின் அதிபதியாகக் கருதப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நிலையை வைத்து அவர்களின் தொழில் வாய்ப்புகள், வணிகம், நிதி நிலை மற்றும் உறவுகள் குறித்த பலன்கள் கணிக்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதியன்று சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழைகிறார். துலாம் ராசியின் அதிபதியாக சுக்கிரன் என்பதால், இந்த ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் பிரவேசிப்பது, சில ராசிக்காரர்களுக்குத் தொழில் மற்றும் நிதி நிலையில் சாதகமான வாய்ப்புகளை வழங்கக்கூடும். அவர்கள் வேலை, வணிகம், வருமானம் மற்றும் புதிய வாய்ப்புகள் தொடர்பான முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு, துலாம் ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் சட்டகக்கனான பலன்களை அளிக்கப்போகிறது. அலுவலகத்தில் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் விரைவான மற்றும் சிறந்த பலன்களைத் தர வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிக லாபத்தை அடைவார்கள். கடனாகக் கொடுக்கப்பட்ட பணம் திரும்ப கிடைக்கும். தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
மேலும் அவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில், கடக ராசிக்காரர்களின் பேச்சு வசீகரமானதாக மாறும். மற்றவர்களின் கவனத்தையும் அன்பையும் எளிதில் ஈர்ப்பார்கள். திருமண வாழ்க்கையில் தம்பதிகளிடையே அன்பும், நெருக்கமும் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு, சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் நிதி, சேமிப்பு மற்றும் குடும்ப விவகாரங்களுடன் தொடர்புடையது. இந்த ராசி மாற்றத்தால் தொழில் முன்னேற்றங்களுக்கு பல வாய்ப்புகள் தேடிவரும், மேலும் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களை எதிர்பார்க்கலாம். அவர்கள் கடனாகக் கொடுத்த பணம் இப்போது திரும்ப கிடைக்கலாம், இது அவர்களின் நிதி நிலைமையை வலுப்படுத்தலாம். அவர்களின் உடல்நலம் சீராக இருக்கும், மேலும் புதிய செயல்களில் உற்சாகத்துடன் பங்கேற்கலாம்.
அவர்களின் திருமண வாழ்க்கையில் இப்போது அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். வெளிப்படையான பேச்சுக்களின் மூலம் அவர்கள் துணையுடன் இருந்த கடந்த கால பிரச்சனைகளை சரிசெய்யலாம். சில குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளன, மேலும் அவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இருந்து வந்த பிரச்சனைகளை சரிசெய்யலாம். இந்த காலத்தில் அவர்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றியைப் பெறும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு துலாம் ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பது தொழில் மற்றும் வேலையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைக் கொடுக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் சிறப்பான நன்மைகளை பெறப்போகிறார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை இந்தக் காலகட்டத்தில் முடிக்க முடியும். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
வியாபாரிகள் கடின உழைப்பு மற்றும் முயற்சியால், அவர்களின் தொழிலை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லலாம். இந்த காலகட்டத்தில் மகர ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடலாம். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன, மேலும் இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

