Latest Updates
-
1 கப் கோதுமை ரவையும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. -
அக்டோபர் 30, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சவால்களும், சாதனைகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
நவம்பர் 22-ல் சுக்கிரன் சொந்த ராசிக்குள் செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
நவம்பர் 03-ல் நடக்கும் புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
முழுமுதற் கடவுளான விநாயகருக்கு எலி எப்படி வாகனமாக மாறியது தெரியுமா? -
தீபாவளிக்கு 1 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இந்த ரிப்பன் பக்கோடா செய்யுங்க.. 10 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
Diwali 2026: இந்த தீபாவளிக்கு லட்சுமி தேவியின் ஆசியை பெற உதவும் எளிய வாஸ்து டிப்ஸ்கள் - மறக்காம செய்யுங்க -
Vastu Tips: வாஸ்துப்படி கடிகாரத்தை வீட்டின் எந்த திசையில் தொங்கவிட வேண்டும் தெரியுமா? -
தஞ்சாவூர் தவலை அடை ரெசிபி - இந்த மாதிரி டிபன் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஆசையா நிறைய சாப்பிடுவாங்க -
Hair Care: கருகருவென நீளமான முடி வேணுமா? அப்ப முட்டையை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க
29 ஆண்டுகளுக்கு பின் மேஷம் செல்லும் சனிபகவான்: 2027-ல் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
Saturn Transit In Aries 2027: ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியான சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். ஒரு ராசியில் நீண்ட காலமாக சனி பகவான் இருப்பதால், அவரது நிலையில் ஏற்படும் தாக்கம் மனித வாழ்க்கையில் ஆழமாக காணப்படும்.

தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மீன ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். இந்த ராசியில் 2026 ஆம் ஆண்டு முழுவதும் பயணிக்கவுள்ளார். அதோடு 2027 ஆம் ஆண்டின் ஜூன் 03 வரை இருந்து, பின் தனது நீச்ச ராசியான மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். சனி பகவான் இந்த மேஷ ராசிக்கு சுமார் 29 ஆண்டுகளுக்கு பின் நுழையவுள்ளார். இந்த ராசியில் அடுத்த 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார்.
இதற்கு முன் சனி பகவான் 1998 ஆம் ஆண்டு மேஷ ராசியில் பயணித்தார். நீச்ச ராசியில் சனி பகவான் பலவீனமாக இருப்பதாக கருதப்படுகிறது. ஏனெனில் சனிக்கும், செவ்வாய்க்கும் இடையே பகைமை உறவு உள்ளது. எனவே இக்காலத்தில் சனி பகவான் சற்று பலவீனமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக சில ராசிக்காரர்களின் பிடிவாதம் அதிகரிக்கும் அல்லது அவசர முடிவுகளை எடுக்க நேரிடும். இருந்தாலும், சனி பகவான் நேர்மையாகவும், விடாமுயற்சியுடனும் உழைப்பவர்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். இப்போது 2027 ஆம் ஆண்டில் மேஷ ராசிக்கு செல்லும் சனி பகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
கடகம்
2027-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பல நல்ல செய்திகளைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களின் நேர்மையும், ஒழுக்கமும் உயர் அதிகாரிகளை ஈர்க்கும். வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும்.
துலாம்
2027-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் புதிய முதலீடுகளை செய்தாலும், அதன் மூலம் நல்ல பலன்களைப் பெறக்கூடும். குறிப்பாக முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
மகரம்
2027-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் கஷ்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வரப்போகிறது. வேலையிலும், தொழிலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வழிகளில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். முக்கியமாக இந்த பெயர்ச்சியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கும்பம்
2027-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் கனவுகள் நனவாகலாம். எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட காலமாக சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். முக்கியமான முடிவுகளை நன்கு யோசித்து எடுத்து வெற்றி காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




