Latest Updates
-
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கிறதா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
நியூமராலஜி படி இந்த தேதியில் பிறந்தவர்கள் கேதுவின் ஆசியால் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க பிறந்த தேதி என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நவம்பர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சாறு பிழிந்த எலுமிச்சை தோலை வீணாக்காதீங்க - இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க - ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பருப்பை கடையாம, ஒருவாட்டி ஹோட்டல் ஸ்டைல் பருப்பு கடையல் செய்யுங்க.. -
டாக்டர்கள் ஆப்ரேஷன் செய்யும் போது ஏன் நீலம் அல்லது பச்சை நிற உடை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
தொடர்ந்து 30 நாட்கள் தினமும் பூசணி விதைகளை சாப்பிட்டால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா? -
செட்டிநாடு முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - எடை புயல் வேகத்துல குறையும் -
6 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட தீவு - இந்த தீவில் என்ன அதிசயம் இருக்கு தெரியுமா? -
29 ஆண்டுகளுக்கு பின் மேஷம் செல்லும் சனிபகவான்: 2027-ல் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
Hair Care: தலைக்கு எண்ணெய் வைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க - இல்லனா முடி வீணாகிரும்
Hair Care: முடியை ஆரோக்கியமாக பராமரிப்பதிலும், முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் எண்ணெய்கள் முக்கியப்பங்கு வகிக்கிறது, குறிப்பாக தேங்காய் எண்ணெய் பரவலாக பயன்படுத்தப்படும் எண்ணெயாக உள்ளது. பலர் தங்கள் தலைமுடியை மென்மையாகவும் வறட்சியின்றியும் வைத்திருக்க எண்ணெய் தடவுகிறார்கள். ஆனால் எண்ணெய் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க எண்ணெய் தடவுவது மட்டும் போதாது. எவ்வளவு எண்ணெய் பயன்படுத்த வேண்டும், அதை எப்படித் தடவ வேண்டும் மற்றும் எண்ணெயை எவ்வளவு நேரம் தலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்பதும் அவசியமாகும். தவறான முறையில் எண்ணெயைப் பயன்படுத்தினால், உங்களுக்கு முடி ஆரோக்கியத்திலும், உச்சந்தலையிலும் பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதிகப்படியான எண்ணெயைப் பயன்படுத்துதல்
தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிக்க தலை முழுவதும் நனையும் அளவிற்கு அதிகப்படியான எண்ணெயைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதிக எண்ணெயை தலையில் வைப்பது உங்கள் முடியை மிகவும் பிசுபிசுப்பாக மாற்றிவிடும். அவ்வாறு மாறும்போது, அதைச் சுத்தம் செய்ய நீங்கள் அதிக அளவு ஷாம்பூவைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். எண்ணெய் பசையுள்ள உச்சந்தலை கொண்டவர்கள், பயன்படுத்தும் எண்ணெயின் அளவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
எண்ணெயை நீண்ட நேரம் அல்லது இரவு முழுவதும் தலையில் வைப்பது
பலரும் எண்ணெயை இரவு தலைக்கு வைத்து காலையில் குளிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். எண்ணெயை இரவு முழுவதும் தலையில் வைத்திருப்பதால் எப்போதும் சிறந்த பலன்கள் கிடைத்துவிடுவதில்லை, மாறாக இதனால் சிக்கல்களே அதிகரிக்கும். தலையில் நீண்ட நேரம் எண்ணெயை வைத்திருக்கும்போது, வியர்வை, தூசி மற்றும் அழுக்கு போன்றவை உங்கள் உச்சந்தலையில் எளிதாகப் படிந்துவிடக்கூடும். பொடுகுத் தொல்லை அல்லது உச்சந்தலை தொடர்பான சிக்கல்கள் உள்ளவர்கள், எண்ணெயை நீண்ட நேரம் தலையில் வைத்திருப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
எண்ணெய் தேய்க்கும் போது உச்சந்தலையில் பலமாக தேய்ப்பது
எண்ணெய் வைக்கும் போது உங்கள் நகங்களால் உச்சந்தலையைச் சுரண்டவோ அல்லது அதிக அழுத்தத்துடன் மசாஜ் செய்யவோ கூடாது. விரல் நுனிகளைப் பயன்படுத்தி மென்மையாக மசாஜ் செய்தாலே போதுமானது. பலமாகத் தேய்ப்பது உச்சந்தலையில் எரிச்சலை உண்டாக்கும், மேலும் முடி உடைவதற்கும் வழிவகுக்கும்.
முடி சிக்காக இருக்கும்போது எண்ணெய் வைப்பது
முடி சிக்காக இருக்கும் போது நேரடியாக எண்ணெய் தடவி, பலமாகத் தேய்த்தால், முடி உடைவது அதிகரிக்கும். எனவே, முதலில் முடியிலுள்ள சிக்கல்களை முழுவதும் சரி செய்து விட்டு, அதன் பிறகு தேவையான அளவு எண்ணெயைத் தடவ வேண்டும். மேலும், முடியைக் கையாளும்போது அதிக அழுத்தம் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
எண்ணெய் தடவினால் முடி உதிர்வு நின்றுவிடும் என்று நினைக்கக்கூடாது
தலைமுடியில் எண்ணெய் தடவுவது, முடிக்கு ஈரப்பதத்தையும் மென்மையையும் நிச்சயம் அளிக்கும். ஆனால், அதிகப்படியான முடி உதிர்வு, தலையில் வழுக்கை விழுந்த பகுதிகள் அல்லது தொடர்ந்து நீடிக்கும் உச்சந்தலை தொடர்பான பிரச்சினைகளுக்கு, வெறும் எண்ணெய் மட்டுமே தீர்வாகாது. முடி உதிர்வு தொடர்ந்து நீடித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.



Click it and Unblock the Notifications

