Latest Updates
-
நியூமராலஜி படி இந்த தேதியில் பிறந்தவர்கள் கேதுவின் ஆசியால் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க பிறந்த தேதி என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நவம்பர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சாறு பிழிந்த எலுமிச்சை தோலை வீணாக்காதீங்க - இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க - ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பருப்பை கடையாம, ஒருவாட்டி ஹோட்டல் ஸ்டைல் பருப்பு கடையல் செய்யுங்க.. -
டாக்டர்கள் ஆப்ரேஷன் செய்யும் போது ஏன் நீலம் அல்லது பச்சை நிற உடை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
தொடர்ந்து 30 நாட்கள் தினமும் பூசணி விதைகளை சாப்பிட்டால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா? -
செட்டிநாடு முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - எடை புயல் வேகத்துல குறையும் -
6 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட தீவு - இந்த தீவில் என்ன அதிசயம் இருக்கு தெரியுமா? -
29 ஆண்டுகளுக்கு பின் மேஷம் செல்லும் சனிபகவான்: 2027-ல் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் கோதுமை ரவையும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க..
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கிறதா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க..
Skin Care Tips In Tamil: சரும அழகைக் கெடுக்கக்கூடிய பொதுவான ஒரு சரும பிரச்சனை தான் கரும்புள்ளிகள். இந்த கரும்புள்ளிகள் ஒருவருக்கு பல்வேறு காரணங்களால் வரலாம். அதில் முகப்பருக்கள் மறைந்த பிறகு ஏற்படும் தழும்புகள், அதிகப்படியான சூரிய ஒளி, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வயது அதிகரிப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த கரும்புள்ளிகளானது முகத்தின் இயற்கையான பொலிவைக் குறைத்து, சரும நிறத்தை சீரற்றதாக காட்டும்.

இப்படி சரும அழகை கெடுக்கும் கரும்புள்ளிகளைக் குறைக்க விலையுயர்ந்த அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வீட்டிலேயே கிடைக்கும் சில இயற்கையான பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளைத் தயாரித்து பயன்படுத்த நிறைய பேர் விரும்புகின்றனர்.
ஏனெனில் இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுக்கும் போது, அவை சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், மென்மையாகப் பராமரிக்கவும் உதவலாம். நீங்கள் கரும்புள்ளிகளைப் போக்கும் ஃபேஸ் பேக்குகளை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே சரும அழகை கெடுக்கும் கரும்புள்ளிகளைப் போக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. சந்தன ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடர், 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. காபி மற்றும் ஆக்டிவேட்டட் சார்கோல் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் ஆக்டிவேட்டட் சார்கோல் பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
4. பப்பாளி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த பப்பாளி கூழை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. பாதாம் மற்றும் பால் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பவுடரை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
