Latest Updates
-
சாறு பிழிந்த எலுமிச்சை தோலை வீணாக்காதீங்க - இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க - ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பருப்பை கடையாம, ஒருவாட்டி ஹோட்டல் ஸ்டைல் பருப்பு கடையல் செய்யுங்க.. -
டாக்டர்கள் ஆப்ரேஷன் செய்யும் போது ஏன் நீலம் அல்லது பச்சை நிற உடை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
தொடர்ந்து 30 நாட்கள் தினமும் பூசணி விதைகளை சாப்பிட்டால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா? -
செட்டிநாடு முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - எடை புயல் வேகத்துல குறையும் -
6 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட தீவு - இந்த தீவில் என்ன அதிசயம் இருக்கு தெரியுமா? -
29 ஆண்டுகளுக்கு பின் மேஷம் செல்லும் சனிபகவான்: 2027-ல் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் கோதுமை ரவையும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. -
அக்டோபர் 30, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சவால்களும், சாதனைகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
நவம்பர் 22-ல் சுக்கிரன் சொந்த ராசிக்குள் செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நவம்பர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
November 2026 Monthly Numerology Predictions In Tamil: ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு உள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.

2026 ஆம் ஆண்டின் 11 ஆவது மாதமான நவம்பர் மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி 2026 நவம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
எண் 1
1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதத்தில் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இம்மாதத்தில் உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்வீர்கள். இது உங்கள் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த மாதத்தில் எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்திடும் முன் கவனமாக படிக்க வேண்டும். முக்கியமாக இம்மாதத்தில் உங்களின் வசதிகளும், ஆடம்பரங்களும் அதிகரிக்கும்.
எண் 2
2, 11, 20 அல்லது 29 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதம் வாழ்க்கையில் சில நேர்மறையான பலன்களைக் கொண்டு வரும். உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். இருந்தாலும் இந்த மாதத்தில் யோசிக்காமல் செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் உங்களின் சிறப்பான செயல்திறன் காரணமாக புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.
எண் 3
3, 13, 21 அல்லது 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதத்தில் வாழ்வில் நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரலாம். இம்மாதத்தில் புதிய நட்புகள் கிடைக்கும். இது தொழில் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும் மற்றும் இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
எண் 4
4, 13, 22 அல்லது 31 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நவம்பர் மாதத்தில் பணியிடத்தில் நல்ல வெற்றியுடன், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். இம்மாதத்தில் ஒரு பெரிய நிதி தொடர்பான முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட காலமாக ஏதாவது புதிய தொழில் அல்லது புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ள நினைத்தால், இம்மாதம் ஏற்றதாக இருக்கும்.
எண் 5
5, 14 அல்லது 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதம் ஒரு புதிய தொடக்கத்தை கொண்டு வரும். பழைய நண்பரை இம்மாதத்தில் சந்திக்கலாம். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். இம்மாதத்தில் முன்னேற எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
எண் 6
6, 15 அல்லது 24 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நவம்பர் மாதத்தில் புதிய வாய்ப்புக்களை பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். இம்மாதத்தில் முன்னேற்ற பாதை திறக்கும். மேலும் உங்களின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள்.
எண் 7
7, 16 அல்லது 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இம்மாதத்தில் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். ஆனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவசரப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இம்மாதத்தில் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
எண் 8
8, 17 அல்லது 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நவம்பர் மாதத்தில் தங்கள் வாழ்வில் இருந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். செல்வாக்குமிக்கவர்களின் ஆதரவு இம்மாதத்தில் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், கோபத்துடன் செயல்படாமல் பொறுமையாக யோசித்து செயல்படுங்கள்.
எண் 9
9, 18 அல்லது 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இம்மாதத்தில் புதிய நட்புகள் கிடைக்கும். மேலும் உங்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
