டாக்டர்கள் ஆப்ரேஷன் செய்யும் போது ஏன் நீலம் அல்லது பச்சை நிற உடை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா?

உலகம் முழுவதும் அனைத்து மருத்துவர்களும் வெள்ளை நிற கோட் அணிகிறார்கள். ஆனால் மருத்துவமனைகளிலோ அல்லது நர்சிங் ஹோம்களிலோ, அறுவை சிகிச்சை அறைக்குள் நுழையும் போது அதே மருத்துவர்கள் எப்போதும் நீல அல்லது பச்சை நிறத்திலான அறுவை சிகிச்சை உடைகளை அணிந்திருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

Why Doctors Always Wear Green or Blue Gowns During Surgery

ஆனால் மருத்துவர்கள் ஏன் அவர்கள் மற்ற நிறங்களைத் தேர்ந்தெடுக்காமல், குறிப்பாக பச்சை அல்லது நீல நிறங்களை மட்டும் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? அறுவை சிகிச்சை அறையில் மருத்துவர்கள் ஏன் பச்சை அல்லது நீல நிற உடைகளை மட்டுமே அணிகிறார்கள் என்பதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அறுவை சிகிச்சை அறை உடைக்கான காரணம்

மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அறையில் நீல அல்லது பச்சை நிற உடைகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பின்னால் காரணம் இல்லாமல் இல்லை. மருத்துவத் துறையில் நிபுணர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் சரியான லாஜிக் மற்றும் அறிவியல் காரணம் உள்ளது. அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் நீல அல்லது பச்சை நிற உடைகளை மட்டுமே அணிவதற்குக் காரணமான முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிறங்கள் கண் அழுத்தத்தைக் குறைக்கும்

ஒவ்வொரு அறுவை சிகிச்சை அறையிலும் பல பிரகாசமான விளக்குகள் இருக்கும். அறுவை சிகிச்சையின் போது, ​​உடலின் ஒவ்வொரு பகுதியையும், மிகச்சிறிய உறுப்புகளைக் கூட மருத்துவர்கள் தெளிவாக இந்த விளக்குகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இவ்வளவு பிரகாசமான ஒளியில், குறிப்பாக நீண்ட நேரம் அறுவை சிகிச்சை செய்யும்போது, ​​மருத்துவர்களின் கண்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படலாம். பச்சை மற்றும் நீல நிறங்கள் கண்களுக்கு இதமான உணர்வைத் தரக்கூடியவை. எனவே, அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் பிரகாசமான விளக்குகளிலிருந்து தங்கள் பார்வையைத் திருப்பி, தாங்கள் அணிந்திருக்கும் உடைகளைப் பார்க்கும்போது, ​​இந்த நிறங்கள் அவர்களின் கண் அழுத்தத்தைக் குறைக்கின்றன.

கண் சோர்வைக் குறைக்கும்

ஒருவர் நீண்ட நேரம் ஒரே நிறத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, கண் சோர்வை ஏற்படுத்தக்கூடும் என்று அறிவியல் கூறுகிறது. அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்களுக்கும் இது போன்ற நிலைதான் ஏற்படுகிறது. அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் நோயாளிகளின் உடலில் உள்ள சிவப்பு நிற இரத்தத்தையே நீண்ட நேரம் உற்று நோக்க வேண்டியிருப்பதால், அவர்களுக்கு ஒருவித சோர்வு ஏற்படுகிறது. இது afterimage effect என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சோர்வினால் மருத்துவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. இது நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆனால், சிவப்பு நிறத்திற்கு நேர் எதிரான நிறங்களான பச்சை மற்றும் நீல நிறங்களைப் பார்க்கும்போது, ​​மருத்துவர்களின் கண் சோர்வு குறைந்து, அறுவை சிகிச்சையில் அவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட முடியும்.

பார்வைத்திறனை மேம்படுத்துகிறது

அறுவை சிகிச்சையின் போது அணியும் உடைகளின் நீல மற்றும் பச்சை நிறங்கள், மருத்துவர்களின் கண்களுக்கு ஏற்படும் சோர்வைக் குறைப்பது மட்டுமின்றி, மனித உடலின் ஒவ்வொரு நுணுக்கமான பகுதியையும் மிகத் தெளிவாகக் காண அவர்களுக்கு உதவுகின்றன. மருத்துவர்களால் உடலுறுப்புகளை தெளிவாகப் பார்க்க முடியும் போது, ​​அறுவை சிகிச்சையின் போது பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இயல்பாகவே குறைகிறது.

நோயாளிகளின் பதற்றத்தைக் குறைக்கும்

பெரும்பாலான நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக அறைக்குள் நுழையும்போதே பதற்றமாகவும், நடுக்கத்துடனும் உணர்கிறார்கள். பச்சை மற்றும் நீல நிறங்கள் மனதிற்கு அமைதியைத் தரக்கூடியவை. எனவே, அறுவை சிகிச்சை நிபுணர்கள் நீல அல்லது பச்சை நிற உடைகளை அணிந்து அறைக்குள் வருவதைக் காணும்போது, ​​அந்த நிறங்கள் நோயாளிகளின் பதற்றத்தைக் குறைத்து, அவர்களை அமைதியாகவும் நிம்மதியாகவும் உணர வைக்கின்றன. மருத்துவர்கள் மட்டுமல்லாமல், அவர்கள் அணியும் நீல அல்லது பச்சை நிற உடைகளும் நோயாளிகள் மீது ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அறுவை சிகிச்சை அறையில் மருத்துவர்கள் நீல அல்லது பச்சை நிற அறுவை சிகிச்சை உடைகளை அணிவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

Story first published: Friday, October 30, 2026, 14:55 [IST]
Desktop Bottom Promotion