குரு-செவ்வாய் சிம்ம ராசியில் இணைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?

ஜோதிடத்தில் கிரகங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. அதேசமயம் கிரகங்களின் சேர்க்கை ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 16 அன்று சிம்ம ராசியில் செவ்வாய் மற்றும் குருபகவான் என்ற இரண்டு சக்திவாய்ந்த கிரகங்கள் ஒன்றிணைந்து 'குரு-மங்கள யோகம்' எனும் அபூர்வ நிகழ்வு உருவாகிறது.

Jupiter-Mars Conjunction Forms Guru Mangala Yoga List of Lucky Zodiac Signs

ஜோதிடக் கணிப்புகளின்படி, கிரகங்களின் இந்தச் சேர்க்கையானது சில ராசிக்காரர்களுக்குத் தொழில், வணிகம் மற்றும் நிதி சார்ந்த புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடும். இது அவர்களுக்குத் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம், வருமான உயர்வு மற்றும் பணியிடத்தில் கூடுதல் அங்கீகாரம் ஆகியவற்றைப் பெற்றுத் தரக்கூடும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு மங்கள யோகம் சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த யோகத்தால் வேலை தேடுபவர்கள் இறுதியாக அவர்களுக்கு ஏற்ற வேலையைக் கண்டறியலாம், அதே நேரத்தில் வியாபாரிகள் தங்கள் வாழ்க்கையில் நிதி ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கலாம். உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால், இந்த காலகட்டத்தில் நிதி சிக்கல்கள் முடிவுக்கு வரும்.

வேலையை மாற்ற நினைப்பவர்கள் இந்த காலகட்டத்தில் பொருத்தமான மாற்று வேலையைக் கண்டறியலாம். வணிக உரிமையாளர்கள் தங்கள் வணிக வளர்ச்சிக்கு உதவும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். ஒட்டுமொத்தமாக, இந்த யோகம் கடக ராசிக்காரர்களுக்கு வேலை சாதனைகள், பண ஆதாயங்கள் மற்றும் வணிக முன்னேற்றம் உள்ளிட்ட சிறந்த வாய்ப்புகளை அளிக்கப் போகிறது.

சிம்மம்

குரு மங்கள யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் சிறப்பான நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப் போகிறார்கள். இந்த யோகத்தால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் நற்பலன்கள் கிடைக்கப்போகிறது. உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றால் நிறைந்திருக்கும். இந்த யோகத்தால் உங்களின் நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்படப்போகிறது. இந்த யோகத்தால் உங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாடு உங்கள் கைகளில் இருக்கும்.

இந்த காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் உங்கள் வாழ்க்கையில் உற்சாகமான சூழல் நிலவும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதே நேரத்தில், வணிகத்தில் இருமடங்கு லாபத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் தலைமைத்துவ திறன்கள் வாழ்க்கையில் பெரிய சாதனைகளுக்கு வழிவகுக்கும். புதிய திட்டங்களைத் தொடங்க இது மிகவும் பொருத்தமான நேரமாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் முன்னேற்றங்களையும், வாய்ப்புகளையும் பெறப்போகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள், மேலும் அவர்களின் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கும். இதனால் அவர்கள் வாழ்க்கையில் நிலவி வந்த பல்வேறு பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரலாம். இந்த நட்சத்திர மாற்றத்தால், சிம்ம ராசிக்காரர்கள் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரலாம்.

திருமண வாழ்க்கையில், அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் திட்டங்கள் அனைத்தும் இப்போது துல்லியமாக செயல்படும், மேலும் வெளிப்படையான தொடர்பு மூலம் குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். இந்த கிரக சேர்க்கை வெளிநாட்டுப் பயணம் அல்லது உயர்கல்வி தொடர்பான திட்டங்களை வலுப்படுத்துகிறது. நீண்ட பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் திருப்தியாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, October 30, 2026, 23:30 [IST]
Desktop Bottom Promotion