Latest Updates
-
இந்தியாவின் 'பால் நகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
2 தக்காளியும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த சட்னியை செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
அக்டோபர் 31, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
நவம்பரில் சிம்ம ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
குரு-செவ்வாய் சிம்ம ராசியில் இணைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வாஸ்துப்படி வீட்டு வாசலில் இந்த 5 செடிகளை வாங்கி வையுங்க.. வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும்! -
மீந்து போன சப்பாத்தியை வைச்சு இந்த மாதிரி உப்பு செய்யுங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
தீபாவளிக்கு கஷ்டப்பட்டு மாவு அரைக்காம இப்படி பட்டர் முறுக்கு செய்யுங்க.. 1 மாசம் வரை வெச்சு சாப்பிடலாம்! -
Hair Care: தலைக்கு எண்ணெய் வைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க - இல்லனா முடி வீணாகிரும் -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கிறதா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க..
பாவக்காய் வாங்குனா இந்தஉருளைக்கிழங்கோட சேர்த்து சுக்கா பண்ணுங்க - கசப்பே இல்லாம செமையா இருக்கும்
Pavakkai Urulaikilangu Sukka Recipe in Tamil: வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் பாகற்காய் என்றாலே ஓடிவிடுவார்களா? அப்படிப்பட்டவர்களை பாகற்காயை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் பாகற்காயை நீங்கள் வழக்கமாக செய்வது போன்று குழம்பாகவோ, பொரியலாகவோ செய்யாமல், உருளைக்கிழங்கு சேர்த்து சுக்கா செய்து கொடுங்கள். இந்த பாகற்காய் உருளை சுக்கா கசப்பு இல்லாமல் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

எல்லோருக்கும் பிடித்த காயான உருளைக்கிழங்கை பிடிக்காத காயான பாகற்காயுடன் சேர்த்து சமைக்கும் போது அவற்றின் சுவை சமநிலைப்படுத்தப்படுகிறது. இந்த பாகற்காய் உருளை சுக்கா சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். ஒருமுறை இந்த மாதிரி பாகற்காய் சுக்காவை செய்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி இந்த பாகற்காய் உருளை சுக்காவை செய்யுமாறு சொல்வார்கள்.
உங்களுக்கு பாகற்காய் உருளை சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாகற்காய் உருளை சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பாகற்காய் - 3 (பெரியது)
- வெங்காயம் - 2
- தக்காளி - 2
- உருளைக்கிழங்கு - 1 (பெரியது)
- மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- கரம் மசாலா - ½ டீ ஸ்பூன்
- எலுமிச்சை பழம் - ½
- தேங்காய் - ¼ மூடி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - 1 கொத்து
- பச்சை மிளகாய் - 2 கீறியது
செய்முறை:
- வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து மேற்பரப்பில் இருக்கும் கருப்பு நிற புஞ்சையை நீக்க நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- நன்கு பழுத்த தக்காளியை சுத்தமாக கழுவி அதன் பச்சை நிற காம்பு பகுதியை நீக்கி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.
- எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து விதைகளை நீக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை கழுவி காம்புகளை நீக்கி விட்டு இரண்டாக கீறி கொள்ளவும்.
- தேங்காயை துருவி எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கை மண் இல்லாமல் கழுவி, தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- பாகற்காயை கழுவி விட்டு, அப்படியே வட்ட வடிவில் துண்டுகளாக நறுக்கி, நடுப்பகுதியில் இருக்கும் விதைகளை நீக்கவும்.
- நறுக்கிய பாகற்காய் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பிழிந்து வைத்த எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து, குறைந்தது அரை மணி நேரமாவது ஊற விடவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும். பின் ஊற வைத்த பாகற்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும். பின் சீரகம் சேர்த்து பொரிய தொடங்கியதும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அதனுடன் கீறி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- அதனுடன் நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து நன்கு குழைந்து வேகும் வரை வதக்கவும். பின் நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து, வேக தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, கடாயை மூடி, மிதமான தீயில் வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்ததும், வதக்கி எடுத்து வைத்த பாகற்காயை சேர்த்து நன்கு கிளறவும்.
- கடைசியாக துருவி வைத்த தேங்காயை சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைத்தால் காரசாரமான பாகற்காய் உருளைக்கிழங்கு ஃப்ரை ரெடி!
- இந்த பாகற்காய் உருளைக்கிழங்கு ஃப்ரை சாதம் அல்லது ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
