Latest Updates
-
ரோட்டுக்கடை சிக்கன் 65 மட்டும் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஊறுகாய் மற்றும் கருவாட்டை அதிகம் சாப்பிடுவது வயிற்றுப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? விளக்கும் டாக்டர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 100 நாட்களில் இந்த 5 ராசிக்காரங்க அசுர வளர்ச்சியை காண்பார்களாம்! -
எப்பவும் சிக்கனை ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
நவம்பர் 01, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - இல்லனா ஆபத்துதான் -
செவ்வாய் சிம்ம ராசிக்குள் செல்வதால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கிலோ சிக்கன் வாங்குனா இந்த மாதிரி மங்களூர் ஸ்டைல் சிக்கன் சுக்கா செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
வாஸ்து படி உங்கள் வீட்டில் உள்ள சின்ன சின்ன தவறுகள் உங்களுக்கு ராகுவின் சாபத்தை பெற்றுத்தருமாம் - ஜாக்கிரதை -
இந்தியாவின் இந்த கிராமத்தில் திருமணம் என்ற உறவே கிடையாதாம் - லிவ்-இன் உறவு மட்டும்தானாம்- எங்க தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி மைசூர் ஸ்டைலில் முட்டை குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
November 2026 Tarot Predictions: உங்க பிறந்த தேதிப்படி நவம்பர் மாதம் எப்படி இருக்கும் தெரியுமா?
Tarot Card Reading November 2026 Predictions By Date Of Birth: ஒவ்வொரு மாதமும் நமக்குப் புதிய நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்துகிறது. நவம்பர் மாதமும் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? ஜோதிடம், எண் கணிதம் போன்றவற்றைப் போலவே, டாரோட் கார்டு கணிப்புகளும் பலரால் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகின்றன.

ஒருவரின் பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு இந்த மாதத்திற்கான டாரோட் கார்டைத் தேர்ந்தெடுத்து, அதன்மூலம் கிடைக்கும் பலன்களைத் தெரிந்துகொள்ளலாம். அந்த வகையில், டாரோட் கார்டூ ரீடரான ரக்ஷனா அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நவம்பர் மாதத்தில் ஒருவரது பிறந்த தேதியின் அடிப்படையில் எப்படி இருக்கும் என்பதை டாரோட் கார்டு மூலம் கணித்து பகிர்ந்துள்ளார். டாரோட் கணிப்புகள் நம்பிக்கை மற்றும் சுயபரிசீலனைக்கான வழிகாட்டுதல்களே தவிர, எதிர்காலத்தை உறுதியாகக் கணிக்கும் அறிவியல் முறையல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பிறந்த தேதி: 1, 10, 19, 28 - பாராட்டு & புதிய தொடக்கம்
நவம்பர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு புதிய பொறுப்புகளும் பாராட்டுகளும் கிடைக்கலாம். வேலை, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். குடும்பத்தினர் மற்றும் மேலதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
பிறந்த தேதி: 2, 11, 20, 29 - உறவுகள் & மகிழ்ச்சி
நவம்பர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு பிரச்சனையில் இருந்த உறவுகள் சீராகலாம். எதிர்பாராத குடும்ப ஆதரவால் ஒரு முக்கிய பிரச்சனை தீரலாம். தனிப்பட்ட விஷயங்களை எல்லோரிடமும் பகிர வேண்டாம்.
பிறந்த தேதி: 3, 12, 21, 30 - வெற்றி & வளர்ச்சி
நவம்பர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு வேலை அல்லது கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். உங்கள் திறமைக்குப் பாராட்டும் பணவரவும் அதிகரிக்கலாம். யோசிக்காமல் பணம் கடன் கொடுக்க வேண்டாம்.
பிறந்த தேதி: 4, 13, 22, 31 - தடைகள் நீங்கி முன்னேற்றம்
நவம்பர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாட்களாகத் தடைப்பட்ட வேலைகள் மீண்டும் தொடங்கலாம். தொழிலில் எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். முக்கிய ஆவணங்களைச் சரிபார்த்து கையெழுத்திடவும்.
பிறந்த தேதி: 5, 14, 23 - நல்ல செய்திகள் & வாய்ப்புகள்
நவம்பர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அழைப்பு மூலம் நல்ல செய்தி கிடைக்கலாம். பயணம் அல்லது புதிய தொடர்புகள் மூலம் வருமானம் அதிகரிக்கலாம். அவசர முடிவுகளையும் தேவையற்ற செலவுகளையும் தவிர்க்கவும்.
பிறந்த தேதி: 6, 15, 24 - அன்பு & செழிப்பு
நவம்பர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு காதல் அல்லது திருமண உறவில் இருந்த பிரச்சனைகள் குறையலாம். பரிசுகள், பண உதவி அல்லது குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கலாம். மற்றவர்களுக்காக அதிகமாகச் செலவு செய்ய வேண்டாம்.
பிறந்த தேதி: 7, 16, 25 - தெளிவு & புதிய மாற்றம்
நவம்பர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு குழப்பமாக இருந்த ஒரு விஷயத்தில் தெளிவு கிடைக்கலாம். புதிய திறமைகள் அல்லது ஆன்மீகப் புரிதல் உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டலாம். தவறான புரிதலால் அன்பானவர்களை விட்டு விலக வேண்டாம்.
பிறந்த தேதி: 8, 17, 26 - பணவரவு & உழைப்புக்கான பலன்
நவம்பர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கிடைக்கலாம். உங்கள் உழைப்பிற்குப் பாராட்டும் புதிய வாய்ப்புகளும் கிடைக்கலாம். ஆபத்தான முதலீடுகளையும் சொத்து தொடர்பான வாக்குவாதங்களையும் தவிர்க்கவும்.
பிறந்த தேதி: 9, 18, 27 - வெற்றி & தன்னம்பிக்கை
நவம்பர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு வேலைக்கான நேர்காணல் அல்லது முக்கிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கலாம். தள்ளிப்போட்ட வேலைகளை முடிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கலாம். கோபத்தில் பேசுவதையும் அவசரமாக முடிவெடுப்பதையும் தவிர்க்கவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
