Latest Updates
-
நவம்பர் 01, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - இல்லனா ஆபத்துதான் -
செவ்வாய் சிம்ம ராசிக்குள் செல்வதால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கிலோ சிக்கன் வாங்குனா இந்த மாதிரி மங்களூர் ஸ்டைல் சிக்கன் சுக்கா செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
வாஸ்து படி உங்கள் வீட்டில் உள்ள சின்ன சின்ன தவறுகள் உங்களுக்கு ராகுவின் சாபத்தை பெற்றுத்தருமாம் - ஜாக்கிரதை -
இந்தியாவின் இந்த கிராமத்தில் திருமணம் என்ற உறவே கிடையாதாம் - லிவ்-இன் உறவு மட்டும்தானாம்- எங்க தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி மைசூர் ஸ்டைலில் முட்டை குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
வார ராசிபலன் (01 November 2026-07 November 2026)- இந்த வாரம் உங்க ராசி எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
பாவக்காய் வாங்குனா இந்தஉருளைக்கிழங்கோட சேர்த்து சுக்கா பண்ணுங்க - கசப்பே இல்லாம செமையா இருக்கும் -
இந்தியாவின் 'பால் நகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
2 தக்காளியும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த சட்னியை செய்யுங்க.. ருசி அள்ளும்..
எப்பவும் சிக்கனை ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்..
Ellu Chicken Gravy Recipe In Tamil: இந்த வார உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய போகிறீர்களா? எப்பவும் ஒரே சுவையில் சிக்கனை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சிக்கனை சமைத்து ருசிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் எள்ளு சிக்கன் கிரேவியை செய்து சாப்பிடுங்கள். இந்த சிக்கன் கிரேவி புதுமையான சுவையில் இருக்கும். அதுவும் இந்த கிரேவி சப்பாத்தி, பூரி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு இந்த எள்ளு சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எள்ளு சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 3/4 கிலோ
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 5
* ஏலக்காய் - 2
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* ஊற வைத்த சிக்கன்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த எள்ளு விழுது
* கொத்தமல்லி - சிறிது
வறுத்து அரைப்பதற்கு...
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கருப்பு எள்ளு - 5 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் சிக்கனை கழுவி எடுத்துக் கொண்டு,
அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து நன்கு பிரட்டி மூடி வைத்து, 3 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி
விட்டு, 1 கப் நீரை ஊற்றி கிளறி மூடி வைத்து மிதமான தீயில் 10 நிமிடம்
வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் மிளகு,
கறிவேப்பிலை சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கருப்பு எள்ளு விதைகளை சேர்த்து நல்ல மணம் வரும்
வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து முதலில் பொடித்து,
பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் அரைத்த எள்ளு விழுதை சேர்த்து
கிளறி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து நன்கு கலந்து
மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி
கிளறி இறக்கினால், சுவையான எள்ளு சிக்கன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
