Latest Updates
-
எப்பவும் சிக்கனை ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
நவம்பர் 01, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - இல்லனா ஆபத்துதான் -
செவ்வாய் சிம்ம ராசிக்குள் செல்வதால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கிலோ சிக்கன் வாங்குனா இந்த மாதிரி மங்களூர் ஸ்டைல் சிக்கன் சுக்கா செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
வாஸ்து படி உங்கள் வீட்டில் உள்ள சின்ன சின்ன தவறுகள் உங்களுக்கு ராகுவின் சாபத்தை பெற்றுத்தருமாம் - ஜாக்கிரதை -
இந்தியாவின் இந்த கிராமத்தில் திருமணம் என்ற உறவே கிடையாதாம் - லிவ்-இன் உறவு மட்டும்தானாம்- எங்க தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி மைசூர் ஸ்டைலில் முட்டை குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
வார ராசிபலன் (01 November 2026-07 November 2026)- இந்த வாரம் உங்க ராசி எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
பாவக்காய் வாங்குனா இந்தஉருளைக்கிழங்கோட சேர்த்து சுக்கா பண்ணுங்க - கசப்பே இல்லாம செமையா இருக்கும் -
இந்தியாவின் 'பால் நகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
சனி பகவான் ஆசியால் அடுத்த 100 நாட்களில் இந்த 5 ராசிக்காரங்க அசுர வளர்ச்சியை காண்பார்களாம்!
Saturn In Uthirattathi Nakshatra 2026: நவகிரகங்களில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். அதுவும் இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பதால், சனி பகவானின் நிலை ஒருவரது வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். அதோடு அக்டோபர் மாதத்தில் தான் ரேவதி நட்சத்திரத்தில் இருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைந்து பயணித்து வருகிறார்.

இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை இருப்பார். சனி பகவானின் இந்த நிலையானது வாழ்வில் பிரச்சனைகளை அதிகரித்தாலும், சில ராசிக்காரர்கள் சனி பகவானால் அளவற்ற செல்வத்தை பெற்று செழிப்பான வாழ்க்கையை வாழவுள்ளனர். இப்போது சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருப்பதால் அடுத்த 100 நாட்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெற்று, வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனி பகவானின் நிலையால் ரிஷப ராசிக்காரர்களின் வேலைகளில் இதுவரை இருந்த தடைகள் விலகும். வேலையில் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். இருப்பினும் தைரியமாக இருந்து, கடினமாக உழைத்தால், எதிர்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறலாம்.
மிதுனம்
சனி பகவானின் நிலையால் மிதுன ராசிக்காரர்களின் மன அழுத்தம் மற்றும் மன குழப்பம் குறியும். தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணம் தொடர்பாக எந்த ஒரு பெரிய முடிவை எடுக்கும் முன்பும், கவனமாக சிந்திக்க வேண்டும். வேலை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
துலாம்
சனி பகவானின் நிலையால் அடுத்த 100 நாட்கள் துலாம் ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. அதோடு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மகரம்
சனி பகவானின் நிலையினால் மகர ராசிக்காரர்களுக்கு அடுத்த 100 நாட்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வலுவடையும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
கும்பம்
சனி பகவானின் நிலையின் காரணமாக கும்ப ராசிக்காரர்களின் பிரச்சனைகள் குறையும். நீண்ட காலமாக கஷ்டப்படுத்தி வந்த விஷயங்கள் படிப்படியாக குறையும். வேலையை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். ஏழரை சனியின் கடைசி கட்டம் என்பதால், சில பாதிப்புகள் ஏற்படும். சற்று பொறுமையாக இருந்தால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


