தீபாவளிக்கு முன் இந்த பொருட்களை வீட்டில் இருந்து தூக்கிப் போடுங்க.. அப்ப தான் லட்சுமி தேவியின் அருள் கிட்டும்!

Diwali 2026 Vastu Tips: தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், விளக்குகள் என வீடெங்கும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்திருக்கும். செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படும் மகாலட்சுமியை வரவேற்கும் வகையில், இந்தப் பண்டிகையின் போது பலரும் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்து அழகுபடுத்துவார்கள். அதோடு லட்சுமி தேவியின் ஆசியைப் பெற லட்சுமி பூஜையையும் செய்வார்கள்.

Diwali 2026 Vastu Tips Remove These Things From Your Home Before Diwali To Invite Goddess Lakshmi

அப்படி தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்வது வெறும் தூய்மைக்காக மட்டுமின்றி, வீட்டில் நேர்மறை ஆற்றலும், செல்வ வளரும் பெருகுவதற்கான செயலாகவும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக வீட்டில் உடைந்த பொருட்கள், பழைய தேவையற்ற பொருட்கள் போன்றவற்றை சேர்த்து வைத்தால், அது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

இப்படி எதிர்மறை ஆற்றல் அதிகம் இருந்தால், அந்த வீட்டிற்குள் லட்சுமி தேவி குடியேறமாட்டாள். இதன் விளைவாக அந்த வீட்டில் பணப் பிரச்சனைகளும், கஷ்டங்களும் அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. எனவே உங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவியின் ஆசி கிடைக்க வேண்டுமானால், தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்யும் போது பின்வரும் பொருட்கள் வீட்டில் இருந்தால் அவற்றை உடனே அகற்றிவிடுங்கள்.

1. உடைந்த சிலைகள் மற்றும் படங்கள்

உங்கள் வீட்டின் பூஜை அறையில் உள்ள சாமி சிலைகள் அல்லது படங்கள் உடைந்த நிலையில் இருந்தால், அவற்றை உடனே அகற்றுங்கள். ஏனெனில் இப்படியான உடைந்த சிலைகள் பூஜை அறையில் இருந்தால், அது எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டின் தெய்வீகத்தன்மையை சீர்குலைத்துவிடும். எனவே தீபாவளிக்கு முன் இப்படியான உடைந்த சாமி சிலைகளை ஓடும் ஆற்றறில் விடுங்கள் அல்லது அரச மரத்தடியில் வைத்துவிடுங்கள்.

2. பழைய மற்றும் கிழிந்த காலணிகள்

வீட்டில் பயன்படுத்தாத பழைய காலணிகள் அல்லது சேதமடைந்த காலணிகள் இருந்தால், அவற்றை உடனே அப்புறப்படுத்திவிட வேண்டும். ஏனெனில் வாஸ்துப்படி இவை குடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சியை பாதிக்கும் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். எனவே இப்படியான காலணிகள் வீட்டில் இருந்தால் தீபாவளிக்கு முன் உடனே அப்புறப்படுத்துங்கள்.

3. உடைந்த பாத்திரங்கள்

வீட்டின் சமையலறையில் பயன்படுத்தும் பாத்திரங்களில் விரிசல் இருந்தாலோ அல்லது வளைந்து நெளிந்து இருந்தாலோ, அவற்றை தூக்கி எறிந்துவிட லேண்டும். ஏனென்றால் இப்படியான பொருட்கள் வீட்டில் வாஸ்து குறைபாட்டை ஏற்படுத்தும். இதன் விளைவாக வீட்டில் பண பிரச்சனைகள் அதிகரிக்கும். எனவே இவற்றை உடனே அகற்ற வேண்டும்.

4. உடைந்த அல்லது பழுதடைந்த கடிகாரங்கள்

வீட்டில் ஓடாத அல்லது பழுதடைந்த கடிகாரங்கள் இருந்தால், அவை துரதிர்ஷ்டத்தை ஈர்த்து, வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். எனவே தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்யும் போது, இப்படியான கடிகாரம் வீட்டில் இருந்தால், அவற்றை உடனே அப்புறப்படுத்துங்கள் அல்லது உடனே சரிசெய்யுங்கள். இல்லாவிட்டால், அது குடும்பத்தில் உள்ளோரின் முன்னேற்றத்தை தடுக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Sunday, November 1, 2026, 19:56 [IST]
Desktop Bottom Promotion