Latest Updates
-
தீபாவளிக்கு முன் இந்த பொருட்களை வீட்டில் இருந்து தூக்கிப் போடுங்க.. அப்ப தான் லட்சுமி தேவியின் அருள் கிட்டும்! -
November 2026 Tarot Predictions: உங்க பிறந்த தேதிப்படி நவம்பர் மாதம் எப்படி இருக்கும் தெரியுமா? -
ரோட்டுக்கடை சிக்கன் 65 மட்டும் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஊறுகாய் மற்றும் கருவாட்டை அதிகம் சாப்பிடுவது வயிற்றுப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? விளக்கும் டாக்டர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 100 நாட்களில் இந்த 5 ராசிக்காரங்க அசுர வளர்ச்சியை காண்பார்களாம்! -
எப்பவும் சிக்கனை ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
நவம்பர் 01, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - இல்லனா ஆபத்துதான் -
செவ்வாய் சிம்ம ராசிக்குள் செல்வதால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கிலோ சிக்கன் வாங்குனா இந்த மாதிரி மங்களூர் ஸ்டைல் சிக்கன் சுக்கா செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
வாஸ்து படி உங்கள் வீட்டில் உள்ள சின்ன சின்ன தவறுகள் உங்களுக்கு ராகுவின் சாபத்தை பெற்றுத்தருமாம் - ஜாக்கிரதை
நவம்பர் மாதம் இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப் போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
November 2026 Career Horoscope: 2026 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் நுழைந்துவிட்டோம். ஜோதிடத்தின் படி, இந்த நவம்பர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். ஏனென்றால் இந்த மாதத்தில் புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன் போன்ற பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. முக்கியமாக இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே சிம்ம ராசியில் குரு மற்றும் கேது சேர்க்கை நிகழ்கிறது.

அத்துடன் கிரகங்களின் தளபதியான செவ்வாயும் சிம்ம ராசியில் நுழைந்து, குரு, கேதுவுடன் சேர்ந்து திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இப்படியான கிரகங்களின் நிலைகளால் 5 ராசிக்காரர்கள் தங்களின் தொழில் வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கலாம். இப்போது நவம்பர் மாத கிரக நிலைகளால் தொழில் ரீதியாக நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு பெரிய அளவில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். பணப்பற்றாக்குறை தீரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். அதுவும் பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் பணப்பற்றாக்குறையும் தீரும். வங்கி இருப்பு அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் தொழில் உச்சத்தில் இருக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். தொழிலில் மேற்கொள்ளும் புதிய திட்டங்களானது நல்ல பலனைத் தரும். மொத்தத்தில் தொழில் ரீதியான பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. கடன் பிரச்சனைகள் தீரும். முக்கியமாக இம்மாதத்தில் பெரிய பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணத்தைப் பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதாக இருக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இம்மாதத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வருமானம் அதிகரிப்பதால், பணப்பிரச்சனைகள் தீரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
