Latest Updates
-
1/4 கிலோ கடலை மாவு இருந்தா, தீபாவளிக்கு 1 கிலோ சாப்ட்டான பூந்தி லட்டு செய்யலாம்.. எப்படின்னு பாருங்க.. -
நவம்பர் மாதம் இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப் போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு முன் இந்த பொருட்களை வீட்டில் இருந்து தூக்கிப் போடுங்க.. அப்ப தான் லட்சுமி தேவியின் அருள் கிட்டும்! -
November 2026 Tarot Predictions: உங்க பிறந்த தேதிப்படி நவம்பர் மாதம் எப்படி இருக்கும் தெரியுமா? -
ரோட்டுக்கடை சிக்கன் 65 மட்டும் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஊறுகாய் மற்றும் கருவாட்டை அதிகம் சாப்பிடுவது வயிற்றுப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? விளக்கும் டாக்டர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 100 நாட்களில் இந்த 5 ராசிக்காரங்க அசுர வளர்ச்சியை காண்பார்களாம்! -
எப்பவும் சிக்கனை ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
நவம்பர் 01, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - இல்லனா ஆபத்துதான் -
செவ்வாய் சிம்ம ராசிக்குள் செல்வதால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
நவம்பர் 06-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பண மழை கொட்டப்போகுது!
Venus Transit In Virgo On 06 November 2026: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல் செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், தற்போது தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் அக்டோபர் 03 ஆம் தேதி முதலாக துலாம் ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 06 ஆம் தேதி வக்ர நிலையில் கன்னி ராசியை அடையவுள்ளார்.

இந்த கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். இந்த ராசியில் சுமார் 17 நாட்கள் வரை இருப்பார். கன்னி ராசியில் சுக்கிரன் பயணிப்பதால், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை காணவுள்ளனர். இப்போது சுக்கிரன் வக்ர நிலையில் கன்னி ராசியை அடைவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வலுவடைவதால், பண பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். தேவையில்லாத செலவுகளைக் குறைப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். யாருடனாவது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தால், மனம் விட்டு பேசும் போது அது சரியாகும்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆளுமையில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். பேச்சுத்திறன் மேம்படும். வியாபாரத்தில் பழைய நட்புகளால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முக்கியமாக நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருப்பதோடு, படிப்படியாக மேம்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் பல மாற்றங்களை காண்பார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். செலவுக்கும், சேமிப்புக்கும் இடையே சமநிலையை பராமரிப்பீர்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். மனதில் உள்ள அழுத்தம் குறைந்து, மன அமைதியாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்பால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரைமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு குறையும். அதே சமயம் தேவையற்ற செலவுகளும் குறைந்து, நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




