Latest Updates
-
இந்தியாவின் 'அரிசித் தலைநகரம்' என்று அழைக்கப்படும் மாநிலம் எது தெரியுமா? தென்னிந்திய மாநிலம் எதுவும் இல்லையாம் -
இட்லி, தோசைக்கு ஏற்ற க்ரீன் கார சட்னி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நவம்பர் 02, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
நவம்பர் 06-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பண மழை கொட்டப்போகுது! -
1/4 கிலோ கடலை மாவு இருந்தா, தீபாவளிக்கு 1 கிலோ சாப்ட்டான பூந்தி லட்டு செய்யலாம்.. எப்படின்னு பாருங்க.. -
நவம்பர் மாதம் இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப் போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு முன் இந்த பொருட்களை வீட்டில் இருந்து தூக்கிப் போடுங்க.. அப்ப தான் லட்சுமி தேவியின் அருள் கிட்டும்! -
November 2026 Tarot Predictions: உங்க பிறந்த தேதிப்படி நவம்பர் மாதம் எப்படி இருக்கும் தெரியுமா? -
ரோட்டுக்கடை சிக்கன் 65 மட்டும் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஊறுகாய் மற்றும் கருவாட்டை அதிகம் சாப்பிடுவது வயிற்றுப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? விளக்கும் டாக்டர்!
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க வாயை கொஞ்சம் அடக்கி இருக்கணும்!
Mercury Transit In Swaathi Nakshatra On 03 November 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். மேலும் இவர் கிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றக்கூடியவர். அதுவும் இந்த புதன் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

தற்போது புதன் வக்ர நிலையில் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் நவம்பர் மாத தொடக்கத்தில் வக்ர நிலையில் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் இவர் நவம்பர் 03 ஆம் தேதி வக்ர நிலையில் சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் புதன் நவம்பர் 25 ஆம் தேதி வரை இருப்பார்.
இதன் விளைவாக சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வேலையில் பிரச்சனைகள், நிதி இழப்புகள், குடும்ப பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இப்போது புதன் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கடகம்
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு இக்காலம் சற்று சவாலானதாக இருக்கும். பண பரிவர்த்தனைகளின் போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது மற்றும் பணம் சில இடங்களில் சிக்கிக் கொள்ளக்கூடும். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் மதிப்பு, மரியாதையைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் சிதற வாய்ப்புள்ளது. இதனால் தேர்வுகளில் சிறப்பாக செயல்பட முடியாமல் போகலாம்.
துலாம்
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் இன்னும் தாமதமாகலாம். திட்டமிட்ட படி வேலைகள் முடியாமல் போவதால் ஏமாற்றமடையலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், எந்த ஒரு நிதி முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படக்கூடும்.
மகரம்
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. உயர் அதிகாரிகளுடன் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பணியிடம் பதற்றம் நிறைந்ததாக இருக்கும். வணிகர்கள் முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். அவசரமாக எடுக்கும் முடிவுகள் நிதி இழப்பை ஏற்படுத்தக்கூடும். குடும்ப வாழ்க்கையில் தவறான புரிதல்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பேச்சை இக்காலத்தில் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மனம் அமைதியாக இருக்க வேண்டுமானால், தேவையற்ற வாக்குவாதங்களை அறவே தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



