138 நாட்கள் கழித்து வக்ர நிவர்த்தி அடையும் சனிபகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது!

Saturn Direct In Pisces 2026: ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். ஏனெனில் இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் சனி பகவான், அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணிப்பார். அந்த வகையில் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இப்படி சனி வக்ர கதியில் இருக்கும் போது பலவீனமாக இருப்பதோடு, அவற்றால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் தாமதம் ஏற்படும்.

Saturn Direct In Pisces 2026 These Zodiac Signs Will Be Lucky

இந்நிலையில் இந்த சனி பகவான் டிசம்பர் மாதத்தில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். சுமார் 138 நாட்கள் வக்ர நிலையில் இருந்த சனி பகவான் டிசம்பர் 11 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இப்படி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதுவும் சில ராசிக்காரர்கள் இந்த சனி பகவானின் ஆசியால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது சனி வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மகரம்

மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு டிசம்பர் முதல் வாழ்க்கையில் பெரிய அளவில் நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இதுவரை சந்தித்து வந்த பணப் பிரச்சனைகள் குறைந்து, நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத அளவில் நிதி நன்மைகள் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பல புதிய வழிகளில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இதுவரை தேவையற்ற செலவுகளை அதிகம் சந்தித்து வந்தால், டிசம்பர் முதல் செலவுகள் கட்டுப்பட்டு நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

துலாம்

துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் தேடி வரும். செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். இதன் மூலம் சமூகத்தில் நல்ல உயரத்தை அடைவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, November 2, 2026, 18:06 [IST]
Desktop Bottom Promotion