முருங்கைக்கீரை கோதுமை தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Murungaikeerai Gothumai Dosa With Peanut Chutney Recipe In Tamil: தினமும் ஒரே மாதிரி இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று ஹெல்த்தியான, அதே சமயம் சுவையான ஒரு காலை டிபனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோதுமை மாவும், முருங்கைக்கீரையும் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் முருங்கைக்கீரை கோதுமை தோசை செய்யுங்கள். இந்த தோசைக்கு வேர்க்கடலை சட்னி அருமையாக இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த டிபனை செய்தால், அடிக்கடி செய்வீர்கள். அந்த அளவில் ஈஸியாகவும், சத்தானதாகவும் இருக்கும்.

Murungaikeerai Gothumai Dosa With Peanut Chutney How To Make This Healthy Breakfast

உங்களுக்கு முருங்கைக்கீரை கோதுமை தோசையும், வேர்க்கடலை சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை கோதுமை தோசை, வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு - 1 1/2 கப்
* அரிசி மாவு - 1/2 கப்
* புளிப்பில்லாத தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

சட்னிக்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 1 கப்
* இஞ்சி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 4
* பொட்டுக்கடலை - 1 கப்
* பூண்டு - 3 பல்
* புளி - சிறிய துண்டு
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப

சட்னி தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

வதக்குவதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* பச்சை மிளகாய் - 2
* முருங்கைக்கீரை - 3 கப்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, புளிப்பில்லாத தயிர், 2 கப் தண்ணீர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கட்டிகளின்றி கலந்து, மூடி வைத்து 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் சட்னி வதக்குவதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், வேர்க்கடலை, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொட்டுக்கடலை, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்மும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் புளி மற்றும் சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* சட்னியை அரைத்த பின் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான வேர்க்கடலை சட்னி தயார்.
* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து முருங்கைக்கீரையை சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் 3-4 கரண்டி மாவை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து கலந்தால், தோசை மாவு தயார்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தயாரித்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி எடுத்தால், முருங்கைக்கீரை கோதுமை தோசை தயார்.

Image Courtesy: youtube@DindigulFoodCourt

[ of 5 - Users]
Story first published: Tuesday, November 3, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion