Latest Updates
-
டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டும் உள்ளது? வேறு நிறத்தில் டயர் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
வக்ர சுக்கிரன் இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகிறார்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முருங்கைக்கீரை கோதுமை தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 03, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்கப்போகுதாம் -
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிலையில் நட்சத்திரத்தை மாற்றுவதால் கோடிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தீபாவளிக்கு மொறுமொறுன்னு பேக்கரி ஸ்டைல் தட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
உத்தர பிரதேச ஸ்டைல் தஹ்ரி புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் ராஜவாழ்க்கை வாழ்வார்களாம்.. உங்க பிறந்த தேதி என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப டாக்ஸிக்கான காதலன், காதலியாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரணமா? வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்!
Stomach Cancer Awareness Month 2026: மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் வயிற்று புற்றுநோய் ஐந்தாவது இடத்தை வகிக்கிறது. இந்த புற்றுநோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை: வயது மூப்பு, புகைப்பிடிக்கும் பழக்கம், அதிகமாக மது அருந்துவது, ஹெலிகோபாக்டர் பைலோரி (h pylori infection) என்ற பாக்டீரியா தொற்று, நீண்ட காலமாக இருக்கும் அல்சர் (Chronic gastritis), அதிக காரமான உணவுகளை சாப்பிடுவது, துரித உணவுகள், மேலும் அதிக உப்பு மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வது ஆகியவற்றை சொல்லலாம்.

இந்த வயிற்று புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் வயிற்றுப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த மாதத்தை முன்னிட்டு வயிற்றுப் புற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிகள் குறித்து சேலம் காவேரி மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணர் டாக்டர் ஏ. நந்தகுமார் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, "வயிற்று புற்றுநோய் ஜப்பான், சவுத் கொரியா போன்ற நாடுகளில் அதிக அளவில் ஏற்படுகிறது. ஏனெனில் இங்கு புகைக்கப்பட்ட மீன், கோழி போன்ற அசைவ உணவுகளை மக்கள் அன்றாடம் அதிகமாக உண்பதே இதற்க்கு காரணம். புகையினால் தயாரிக்கப்படும் தந்தூரி உணவுப் பொருட்களும் இதில் அடங்கும்.
இத்தகைய உணவுகள் வயிற்றின் உட்புற படலத்தையும் மியூகோசா என்னும் சவ்வுப்படலத்தையும் பாதிக்கும். இவ்வுணவுகளில் நைட்ரோசமைன்கள் என்ற புற்றுநோயை உண்டாக்கும் ஒருவகை இரசாயன சேர்மங்கள் இருக்கின்றன. அவை வயிற்றுப் புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைகின்றன. எனவே நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்." என்று டாக்டர் கூறினார்.
வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள்
"வயிற்றுப் புற்றுநோய் ஏற்பட்ட ஆரம்ப நிலைகளில் உணவு கொஞ்சமாக சாப்பிட்ட பின்னாலும் வயிறு நிறைந்த மாதிரி இருக்கும். சாப்பிட்ட பிறகும் வயிறு உப்பி இருப்பது போல் அவர்கள் உணர்வார்கள். அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். நெஞ்சசெரிச்சல், அடிக்கடி எதுக்களித்தல் வரும் வாய்ப்புகள் அதிகம்.
பொதுவாக இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் பெரும்பாலானோர் தங்களுக்கு அல்சர் வந்திருக்கலாம் என்று நினைத்து, அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சிலர் அல்சர் மாத்திரைகளை தாங்களே மருந்து கடைகளில் வாங்கி எடுத்துக் கொள்கிறார்கள்.
இதனால் நோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்படாமல் அது அடுத்த கட்டத்திற்கு வளர்கிறது. முற்றிய நிலையில் நோயாளிக்கு நெஞ்செரிச்சல் மிக அதிகமாக இருக்கும். அவர்களால் சுத்தமாக சாப்பிடவே முடியாது. பசியும் சுத்தமாக இருக்காது. இதனால் உடல் எடை அதிகமாக குறைந்துவிடும்.
இதுதவிர அவர்களது மலத்தில் இரத்த திட்டுக்கள் காணப்படும். சில சமயம் மலம் கருப்பு நிறத்தில் வெளியேறும். அதற்கடுத்து வயிற்றுப் புற்றுநோய் கல்லீரல் போன்ற பிற உறுப்புகளுக்கு பரவும் போது, வயிறு முழுவதும் நீர் கோர்த்துக் கொள்ள தொடங்கும். இதற்கு அசைட்டிஸ் (ascites) என்று பெயர். அதே போல் கல்லீரல் பாதிக்கப்படும் போது மஞ்சள் காமாலை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
இங்கு குறிப்பிட்டுள்ள ஆரம்பகால மற்றும் நோய் முற்றிய கால அறிகுறிகள் எல்லாமே வயிற்று புற்றுநோய் ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் தான் என்று கண்டிப்பாக சொல்ல முடியாது. ஆனால் ஆரம்ப காலத்திலேயே இத்தகைய அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உடனேயே புற்றுநோய் இருக்கிறதா என்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
மருத்துவமனைகளில் சி.டி ஸ்கேன் அல்லது எண்டோஸ்கோபி பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம். தேவைப்பட்டால் பயாப்சி பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும். இதனால் வந்திருக்கும் நோய் வயிற்று புற்றுநோயா இல்லையா என்பதை உறுதி செய்துகொள்ளலாம். ஆரம்ப காலத்தில் கண்டறியப்படும் வயிற்று புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும். பயப்படவே தேவையில்லை." என்று டாக்டர் கூறினார்.
தடுக்கும் முறைகளும் வாழ்க்கைமுறை மாற்றங்களும்:
"வயிற்றுப் புற்றுநோய் வராமல் தடுக்க நம் அன்றாட உணவு முறையில் சில எளிய மாற்றங்களைச் செய்வது அவசியம்.
* பதப்படுத்தப்பட்ட, அளவுக்கு அதிகமான உப்பு மற்றும் வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, தினமும் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* குறிப்பாக வைட்டமின் 'சி' மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த பழங்கள் வயிற்றின் மியூகோசா படலத்தைப் பாதுகாத்து, புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கின்றன.
* பாக்டீரியா தொற்றை தவிர்க்க சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான உணவை உட்கொள்வது மிக முக்கியம்.
* புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை முற்றிலும் கைவிடுவதும், உடல் எடையைச் சீராகப் பராமரிப்பதும் புற்றுநோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும்." என்று டாக்டர் கூறினார்.
நவீன சிகிச்சை முறைகள்
"இன்றைய நவீன மருத்துவ உலகில் வயிற்றுப் புற்றுநோயைக் குணப்படுத்தப் பல்வேறு நவீன சிகிச்சைகள் உள்ளன. புற்றுநோயின் நிலை மற்றும் கட்டத்தைப் பொறுத்து அறுவை சிகிச்சை, வேதிச்சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, மற்றும் நோயெதிர்ப்புச் சிகிச்சை போன்ற மேம்பட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
புற்றுநோய் என்ற சொல் கேட்டவுடனே பயப்படாமல், நம்பிக்கையுடன் மருத்துவ சிகிச்சை பெறுவது மிக முக்கியம். குடும்பத்தினரின் அன்பும், சரியான உணவுக் கட்டுப்பாடும், மருத்துவரின் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுவதும் நோயாளிகளை விரைவாகக் குணமடையச் செய்யும்.
எந்த செரிமானப் பிரச்சனைகளும் தொடர்ச்சியாக நீடித்தால் சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து, உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே நமது ஆரோக்கியத்திற்குச் சிறந்தது. விழிப்புணர்வே மிகச்சிறந்த முதற்கட்டப் பாதுகாப்பாகும்!" என்று டாக்டர் கூறினார்.
வயிற்றுப் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்கள் ஹெச். பைலோரி (H. pylori) தொற்று, உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது, புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் குடும்ப வரலாறு ஆகியவை ஆகும்.
வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளில் வயிற்று வலி, அஜீரணம், பசியின்மை, நெஞ்செரிச்சல், எடை இழப்பு, குமட்டல் மற்றும் கருப்பு மலம் ஆகியவை அடங்கும்.
வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்க ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள், உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்திடுங்கள், புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள், ஹெச். பைலோரி (H. pylori) தொற்றுக்கு சிகிச்சை பெறுங்கள் மற்றும் வழக்கமான பரிசோதனைகளைச் செய்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications


