Latest Updates
-
உலகம் முழுக்க 108 ஏன் மிகவும் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
வாஸ்து படி வீட்டை பெருக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செய்யாதீங்க - இல்லனா வீட்டு அதிர்ஷ்டமே போயிரும் -
தீபாவளியில் உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
அவரைக்காயை எப்பவும் பொரியல் செய்யாம.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
15 பல் பூண்டு இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் பூண்டு பப்புவை செய்யுங்க - சாதத்தில் ஊற்றி சாப்பிட அமிர்தமா இருக்கும -
அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரணமா? வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டும் உள்ளது? வேறு நிறத்தில் டயர் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
வக்ர சுக்கிரன் இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகிறார்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முருங்கைக்கீரை கோதுமை தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Diwali 2026: தீபாவளி அன்று ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்? அவற்றை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும்?
Diwali 2026: இந்தியா கலாச்சாரம் நிறைந்த நாடு. இந்நாட்டில் ஏராளமான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான பண்டிகை என்றால், அது தீபாவளி பண்டிகையாகவே இருக்கும். இந்த தீபாவளி பண்டிகையானது தென்னிந்தியாவில் ஒரு நாள் கொண்டாடப்பட்டாலும், வட இந்தியாவில் 5 நாட்கள் கொண்டாடப்படுகின்றன.
அதில் தீபாவளி பண்டிகையின் முதல் நாள் தான் தந்தேராஸ் என்னும் தனத்திரயோதசி நாளாகும். இது 2026 நவம்பர் 06 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் லட்சுமி தேவிக்கும், குபேரருக்கும் பூஜைகள் செய்யப்படும். இரண்டாவது நாள் தான் நரக சதுர்த்தசி. இது 2026 நவம்பர் 07 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் தான் நரகாசுரனை கிருஷ்ணர் கொன்றதாக புராணங்கள் கூறுகின்றன.

மூன்றாவது நாள் தான் பெரிய தீபாவளி கொண்டாடப்படுகிறது. இது 2026 நவம்பர் 08 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் லட்சுமி பூஜை செய்யப்படுகிறது. மேலும் இந்நாளில் தான் ராவணனை கொன்ற பின் ராமர் அயோத்திக்கு வந்ததாக கூறப்படுகிறது. நான்காவது நாள் தான் கோவர்த்தன பூஜை. இது 2026 நவம்பர் 09 ஆம் தேதி வருகிறது. கடைசியாக ஐந்தாவது நாளில் கொண்டாடப்படுவது தான் பாய் தூஜ். இது 2026 நவம்பர் 10 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான உறவை கொண்டாடும் வகையில் பூஜைகள் செய்யப்படுகின்றன.
முக்கியமாக தீபாவளி பண்டிகை அன்று மக்கள் செய்யும் முக்கியமான சடங்குகளில் ஒன்று அகல்விளக்கு/தீபம் ஏற்றுவதாகும். வீட்டில் இருளை அகற்றி ஒளிபரப்பும் வகையில் தீபங்களால் வீட்டையே அழகாக அலங்கரிப்பார்கள். இதனால் இந்த தீபாவளி பண்டிகையை தீப ஒளித் திருநாள் என்றும் அழைப்பர். இந்து புராணங்களின் படி, தீபாவளி பண்டிகையின் முதல் நாளான தந்தேராஸ் மற்றும் தீபாவளி நாளில் வீட்டில் உள்ளோரின் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பான வாழ்க்கைக்காக 13 விளக்குகள் ஏற்றப்பட வேண்டும் என கூறப்படுகிறது.
அதில் முதலாவதாக, வீட்டிற்கு வெளியே குப்பை அகற்றும் இடத்தில் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். இது குடும்ப உறுப்பினர்களின் அகால மரணத்திலிருந்து பாதுகாக்கிறது.
இரண்டாவது அகல் விளக்கை நெய் ஊற்றி வீட்டின் பூஜை அறையில் ஏற்றி வைக்க வேண்டும். இது வீட்டில் நேர்மறை ஆற்றலை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
மூன்றாவது அகல் விளக்கை செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் முன் ஏற்றி வைக்க வேண்டும். இது செல்வ செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் தருவதாக கூறப்படுகிறது.
நான்காவது அகல் விளக்கை துளசி செடியின் முன் ஏற்றி வைக்க வேண்டும். இது குடும்பத்தில் அமைதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுவதோடு, நன்கு சுபீட்சம் அடைவதற்கான வழிமுறைகள் பிறக்கும்.
ஐந்தாவது அகல் விளக்கை வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே ஏற்றி வைக்க வேண்டும். இது வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை அகற்றி, நேர்மறை ஆற்றலை நிரம்பியிருக்க செய்யும்.
ஆறாவது அகல் விளக்கை கடுகு எண்ணெய் பயன்படுத்தி அரச மரத்தடியில் ஏற்றி வைக்க வேண்டும். இது வாழ்வில் உள்ள நிதி பிரச்சனைகளைப் போக்கி, வாழ்விற்கு தேவையான சகல வளங்களையும் தருவதோடு, செல்வம் மற்றும் எதிர்மறை சக்திகளை தடுக்க உதவும்.
ஏழாவது அகல் விளக்கை வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கோவிலில் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
எட்டாவது அகல் விளக்கை வீட்டில் குப்பை சேர்க்கும் இடத்தில் ஏற்ற வேண்டும். இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றும்.
ஒன்பதாவது அகல் விளக்கை வீட்டின் கழிவறைக்கு வெளியே ஏற்றி வைக்க வேண்டும். இது வீட்டில் நேர்மறை ஆற்றலை ஈர்க்கவும், வாழ்வில் செழிப்பை கொண்டு வரவும் உதவுவதாக கூறப்படுகிறது.
பத்தாவது அகல் விளக்கை வீட்டின் மொட்டை மாடியில் ஏற்றி வைக்க வேண்டும். இது குடும்பத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
பதினொன்றாவது அகல் விளக்கை வீட்டில் உள்ள எந்த ஜன்னலில் வேண்டுமானாலும் ஏற்றி வைக்கலாம். இது வீட்டில் உள்ள தீய சக்திகளை எதிர்த்துப் போராடி நல்ல சக்திகளைப் பரப்புவதாக கூறப்படுகிறது.
பன்னிரண்டாவது அகல் விளக்கை வீட்டின் மேல் தளத்தில் ஏற்றி வைக்க வேண்டும். இது வீட்டில் உள்ளோரின் நல்வாழ்விற்கு வழிகாட்டுவதாக கூறப்படுகிறது.
பதிமூன்றாவது அகல் விளக்கை வீட்டில் உள்ள சந்து பகுதியில் வைக்க வேண்டும். இதன் மூலம் வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சனைகள் நீங்குவதாக கூறப்படுகிறது.
எனவே இந்த தீபாவளி நாளில் பாரம்பரிய முறைப்படி 13 அகல் விளக்குகளை ஏற்றி சகல நன்மைகளையும் பெறுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
