Latest Updates
-
சனிபகவானின் வக்ர இயக்கம் முடிவுக்கு வருவதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
Skin Care: முகப்பரு இல்லாத கண்ணாடி மாதிரி சருமம் வேண்டுமா? அப்ப இந்த தானியங்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க -
தீபாவளி அன்று பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப தக்காளி வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
எந்த காய்கறியும் தேவைப்படாத இந்த பாயாவை ஒருதடவை செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்ட்டகாசமா இருக்கும் -
Diwali 2026: தீபாவளி அன்று ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்? அவற்றை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும்? -
உலகம் முழுக்க 108 ஏன் மிகவும் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
வாஸ்து படி வீட்டை பெருக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செய்யாதீங்க - இல்லனா வீட்டு அதிர்ஷ்டமே போயிரும் -
தீபாவளியில் உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
அவரைக்காயை எப்பவும் பொரியல் செய்யாம.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்..
1/2 கப் ரவை இருந்தா போதும்.. தீபாவளிக்கு சூப்பரான ஸ்வீட் செய்யலாம்.. என்னன்னு பாருங்க..
Diwali Special Rava Jamun Recipe In Tamil: தீபாவளிக்கு உங்கள் வீட்டில் பலவிதமான பலகாரங்களை செய்வீர்களா? இந்த வருட தீபாவளிக்கு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான ஸ்வீட் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு குலாப் ஜாமூன் என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் இந்த ஆண்டு தீபாவளிக்கு 1/2 கப் ரவை இருந்தால், அவற்றைக் கொண்டு நல்ல ஜூஸியான ரவா ஜாமூன் செய்து கொடுங்கள். இந்த ஜாமூன் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த ரவா ஜாமூனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா ஜாமூன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* ரவை - 1/2 கப்
* ஏலக்காய் - 1
பிற பொருட்கள்..
* பால் - 1 கப்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* அரைத்த ரவை
* நெய் - 1 டீஸ்பூன்
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
சர்க்கரை பாகுவிற்கு..
* சர்க்கரை - 1 கப்
* தண்ணீர் - 1 கப்
* ஏலக்காய் - 3
* ரோஸ் எசன்ஸ் - 3 துளிகள்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1/2 கப் ரவை மற்றும் 1 ஏலக்காயை சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காயை
சேர்த்து, 2-3 நிமிடம் வறுத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் பாலை ஊற்றி, பால்
கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வறுத்த தேங்காய் மற்றும் அரைத்த ரவையை
சேர்த்து, குறைவான தீயில் வைத்து நன்கு அழுத்தி விட்டு கட்டிகளின்றி
கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறி விட்டு இறக்கி, மூடி
வைத்து 5 நிமிடம் கை பொறுக்கும் சூட்டிற்கு வரும் வரை குளிர வைக்க
வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் 1 சிட்டிகை ஆப்ப சோடாவை
சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* ஒருவேளை மாவு வறண்டு போயிருப்பதாக இருந்தால், கைகளில் நீரை தொட்டுக்
கொண்டு, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பின் பிசைந்த மாவை ஜாமூன் போன்று குட்டி குட்டி உருண்டைகளாக
உருட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப்
சர்க்கரை மற்றும் 1 கப் நீரை ஊற்றி, சர்க்கரை கரைந்து பிசுபிசுவென்ற
பதத்திற்கு வந்ததும், அதில் 3 ஏலக்காயை தட்டிப் போட்டு, ரோஸ் எசன்ஸ்
ஊற்றி கிளறி இறக்கி, மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வைத்து எண்ணெய் சூடானதும், அதில்
உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, சூடாக இருக்கும்
சர்க்கரை பாகுவில் சேர்க்க வேண்டும். இதேப் போல் அனைத்து
உருண்டைகளையும் எண்ணெயில் பொரித்து எடுத்து, சர்க்கரை பாகுவில்
சேர்த்து கிளறி, மூடி வைத்து 1 மணிநேரம் ஊற வைத்தால், சுவையான மற்றும்
ஜூஸியான ரவா ஜாமூன் தயார்.



Click it and Unblock the Notifications
