Latest Updates
-
தீபாவளி அன்று பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப தக்காளி வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
எந்த காய்கறியும் தேவைப்படாத இந்த பாயாவை ஒருதடவை செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்ட்டகாசமா இருக்கும் -
Diwali 2026: தீபாவளி அன்று ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்? அவற்றை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும்? -
உலகம் முழுக்க 108 ஏன் மிகவும் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
வாஸ்து படி வீட்டை பெருக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செய்யாதீங்க - இல்லனா வீட்டு அதிர்ஷ்டமே போயிரும் -
தீபாவளியில் உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
அவரைக்காயை எப்பவும் பொரியல் செய்யாம.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
15 பல் பூண்டு இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் பூண்டு பப்புவை செய்யுங்க - சாதத்தில் ஊற்றி சாப்பிட அமிர்தமா இருக்கும -
அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரணமா? வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்!
Skin Care: முகப்பரு இல்லாத கண்ணாடி மாதிரி சருமம் வேண்டுமா? அப்ப இந்த தானியங்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க
Skin Care: முகத்தில் ஏற்படும் பருக்களை கட்டுப்படுத்த என விலையுயர்ந்த அழகு பொருட்கள் மற்றும் க்ரீம்களை வாங்கி, உங்கள் மாத சம்பளத்தின் ஒரு பகுதியை காலி செய்கிறீர்களா? அப்படி செய்வது நீங்கள் மட்டும் அல்ல. மிக விரைவில் சரியாகிவிடும் என பல க்ரீம்கள், ஏன் சிலர் பற்பசையை கூட பயன்படுத்துகிறார்கள். இந்த க்ரீம்கள் சருமத்தின் மேல் ஒரு அடுக்காக படிந்து வியர்வை சுரப்பிகளின் வேலையை தடுக்கின்றன. மேலும், இவற்றில் இருக்கும் ரசாயனங்களும் சருமத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

ஆனால் இதற்கான நிரந்தர தீர்வு சில நேரங்களில் நம் வீட்டு சமையல் அறையிலேயே உள்ளது. அவை தான் நம் முன்னோர்கள் உணவாக எடுத்து கொண்ட சிறுதானியங்கள். இவற்றை நாம் கால போக்கில் மறந்திருந்த சமயத்தில், மருத்துவர்களும் உணவு நல ஆலோசகர்களும் அவற்றை இப்போது மக்களின் உணவுமுறையில் சேர்க்க முயற்சித்து வருகிறார்கள்.
இந்த சிறுதானியங்கள் உடல் எடையை குறைக்க, செரிமானப் பிரச்சினையை சரி செய்ய, மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க மட்டுமின்றி, அவ்வப்பொழுது முகத்தில் ஏற்படும் பரு அல்லது நாள்பட்ட எக்ஸிமா போன்ற சரும பிரச்சனைகளுக்கும் ஏற்ற தீர்வாக இருக்கின்றன.
அனைவருக்கும் ஒரே மாதிரியான பிரச்சனையால் முகப்பரு ஏற்படுவதில்லை. உங்களுக்கு எதனால் ஏற்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்றார் போல் சிறு தானியங்களை தேர்வு செய்ய வேண்டும்.
கம்பு
முகப்பருவை தடுக்க கூடிய ஒரு சிறந்த சிறுதானியம் கம்பு. உங்கள் முகத்தில் சிவந்து வீக்கத்துடன் இருக்க கூடிய பருக்கள் ஏற்பட்டால், கம்பை உங்கள் உணவில் சேர்ப்பது நல்ல மாற்றத்தை தரும். கம்பில் துத்தநாகம் அதிக அளவில் நிறைந்துள்ளது. பெரும்பாலான சருமப் பராமரிப்புப் பொருட்களில் சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்த துத்தநாகம் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது.
நாம் இதை உணவாக எடுத்து கொள்ளும் பொழுது, நம் சருமத்தில் தேவைக்கு அதிகமாக சுரக்கும் எண்ணெயின் அளவை கட்டுப்படுத்துகிறது. இது உடலில் ஏற்படும் காயங்களை விரைவில் குணமாக்குவதிலும் முக்கிய பங்கு வகின்றன. துத்தநாகம் நிறைந்த இந்த கம்பை உணவில் சேர்த்து கொள்வது, சருமத்தின் உட்புறத்தில் இருந்து செயல்பட்டு, பருக்களை குறைத்து சருமத்தின் பொலிவிற்கு உதவுகின்றன.
சோளம்
இது 'ஹைட்ரேஷன் ஹீரோ' என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகவே வறண்ட சருமம் என்பது பலவீனமான பாதுகாப்பற்ற எளிதில் அழற்சி அல்லது சரும பிரச்சனைகள் ஏற்படக் கூடிய ஒன்றாக இருக்கும். இதற்கான தீர்வாகத் தான் இங்கு சோளம் இருக்கிறது. சோளத்தில் அதிக அளவில் பி வைட்டமின்கள் மற்றும் சிலிக்கா நிறைந்திருக்குகிறது.
இதனால் இது சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சருமம் ஹைட்ரேஷனாக இருக்கும் போது, அது சரும அழற்சிக்கு எதிரான அரணாக செயல்படும். இதனால் சருமத்தில் வெளிப்புறத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் சரும பிரச்சனைகளை தொடங்கும் முன்பே கட்டுப்படுத்தி விடுகின்றன.
தினை
தினை அரிசி நகர வாழ்வியல் முறையால் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கு எதிரான ஒரு கவசமாக செயல்படுகிறது. மாசு நிறைந்த, நாம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நகர வாழ்க்கை, சரியான சரும பராமரிப்பின்றி முகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக சருமம் பொலிவிழந்து காணப்படுவது, அவ்வப்பொழுது ஏற்படும் எரிச்சல், அல்லது சென்சிடிவிட்டிக்கு சிறந்த தீர்வாக தினை அரிசி இருக்கிறது.
சரும பொலிவிற்காக பயன்படுத்தும் சீரம்களில் 'நியாசினமைடு' என்னும் பொருள் செயற்கையாக சேர்க்கப்படும். ஆனால் தினை அரிசியில் நியாசின் இயற்கையாகவே நிறைந்திருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் இ அதிக அளவில் காணப்படுகிறது. இது சருமத்தின் அடுக்கை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. சருமத்தில் ஏற்படும் சிவந்த தன்மையை குறைத்து சரி செய்து சருமத்தின் நிறத்தை சீராக்குவதில் இதில் நிறைந்திருக்கும் நியாசின் உதவுவதோடு, அன்றாட வாழ்வில் ஏற்படும் மாசு மற்றும் புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்கிறது.
கேழ்வரகு
இது முழுமையான சரும பிரச்சனை சீரமைப்புத் தொகுப்பாக கருதப்படுகிறது. நாள்பட்ட அழற்சி பிரச்சனைகளான எக்ஸிமா அல்லது சொரியாசிஸ் போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு, ஒரு மிகச் சிறந்த உணவாக ராகி விளங்குகிறது. இதில் இருக்கும் அமினோ அமிலங்கள் மற்றும் பாலிஃபீனால்களே இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன.
அதிலும் குறிப்பாக குறிப்பாக மெத்தியோனைன் மற்றும் லைசின் போன்றவை அதிக அளவில் நிறைந்திருப்பதால், இது சருமத்தின் உள்கட்டுமானத்தில் ஆரோக்கியமான செல்களை சேதப்படுத்தும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதோடு, புதிய கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கின்றன. இதனால் பருக்களால் சேதமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட சருமத்தையும், மற்ற சில சரும பிரச்சனைகளையும் நாளடைவில் குணப்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications

