பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க..

DIY Lip Mask In Tamil: முக அழகு என்று வரும் போது, அதில் உதடுகளின் அழகு முக்கிய பங்கை வகிக்கிறது. சொல்லப்போனால் நல்ல மென்மையான உதடுகள் முகத்திற்கு கூடுதல் அழகை தரும். ஆனால் காலநிலை மாற்றம், போதுமான நீர் அருந்தாமல் இருப்பது, அடிக்கடி எச்சிலைக் கொண்டு உதடுகளை ஈரமாக்குவது மற்றும் போதுமான பராமரிப்பு கொடுக்காமல் இருப்பது போன்றவற்றால் உதடுகளில் வறட்சியோ, வெடிப்புக்களோ ஏற்படலாம். இந்நிலையில் உதடுகளில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க விலை உயர்ந்த உதடு பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.

Top 5 DIY Lip Mask Recipes To Get Soft Lips

ஆனால் இப்படி விலை உயர்ந்த பொருட்களால் தான் உதடுகளில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கி, உதடுகளை அழகாக வைத்துக் கொள்ள முடியும் என்பதில்லை. வீட்டில் உள்ள சில இயற்கை பொருட்களைக் கொண்டு உதடுகளுக்கு பராமரிப்பு கொடுத்து வந்தாலே உதடுகளை அழகாக வைத்துக் கொள்ளலாம். கீழே உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும் சில நேச்சுரல் லிப் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினசரி பயன்படுத்தி வந்தாலே உதடுகளை அழகாக வைத்துக் கொள்ள முடியும்.

1. கற்றாழை ஜெல் மாஸ்க்

* இந்த லிப் மாஸ்க்கிற்கு நற்பதமான கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, இரவு தூங்கும் முன் உதடுகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் உதடுகளை துடைத்துவிட வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் போது பயன்படுத்தும் போது, உதடுகள் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.

2. தேங்காய் எண்ணெய் + தேன் மாஸ்க்

* இந்த லிப் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை உதடுகளில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

3. பீட்ரூட் மாஸ்க்

* இந்த லிப் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொண்டு, அத்துடன் சில துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை உதடுகளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் உதடுகளை கழுவ வேண்டும்.

4. ரோஜாப்பூ + பால் மாஸ்க்

* இந்த லிப் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 4-5 ரோஜாப்பூ இதழ்களை 1 டேபிள் ஸ்பூன் பாலில் 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் அதை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, உதடுகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் உதடுகளை கழுவ வேண்டும்.

5. மஞ்சள் + தயிர் லிப் மாஸ்க்

* இந்த லிப் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 சிட்டிகை மஞ்சளை தூளை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டீஸ்பூன் தயிரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை உதடுகளில் தடவி 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் ஈரத் துணியால் உதடுகளை துடைத்து எடுக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, November 4, 2026, 22:57 [IST]
Desktop Bottom Promotion