Latest Updates
-
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்! -
வாஸ்து படி உங்களோட தங்க நகைகளை வீட்டின் திசையில் மட்டும் வைக்காதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியும்! -
கேது கடக ராசிக்குள் நுழைவதால் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா?
Diwali 2026 Budhaditya Rajyog: ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் தீபாவளி சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் இந்த தீபாவளி நாளில் பஞ்சமகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றான புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகமானது கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் மற்றும் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனின் சேர்க்கையால் உருவாகக்கூடியது. ஜோதிடத்தில் இந்த ராஜயோகமானது புத்திசாலித்தனம், மரியாதை, தொழில், நிதி முன்னேற்றம் ஆகியவற்றை தரக்கூடியது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் சிறப்பான பலன்களை பெறவுள்ளனர். குறிப்பாக வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள், நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடைதல் மற்றும் நிதி நிலையில் முன்னேற்றம் போன்றவை ஏற்படலாம். இப்போது தீபாவளியில் உருவாகியிருக்கும் புதாதித்ய ராஜயோகத்தால் நல்ல நிதி ஆதாயங்களையும், அதிர்ஷ்டத்தையும் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. அதோடு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எந்த ஒரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், கவனமாக சிந்தித்து எடுக்க வேண்டும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடின உழைப்புக்கான பலன் கிடைகும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். குடும்பத்தினரின் முழு ஆதவு கிடைக்கும். முக்கியமாக வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களை பெறுவார்கள். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். புத்திசாலித்தனம் மற்றும் முடிவெடுக்கும் திறன் உங்களின் நிதி நிலையை எதிர்பாராத அளவில் வலுப்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
