Latest Updates
-
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும் -
தீபாவளிக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரண களமா இருக்கப்போகுது.. -
உங்க குளிர்சாதனப் பெட்டியில் கூலிங் பிரச்சினை இருக்கா? அப்ப ஒரு பேப்பரை வைச்சு ஈஸியா இப்படி கண்டுபிடிங்க -
பாஸ்போர்ட் இல்லாமல் உலகின் எந்த நாட்டுக்கும் பயணிக்கும் அந்தஸ்து உள்ள சக்திவாய்ந்த 3 பேர் யார் தெரியுமா? -
2 கப் ஜவ்வரிசி இருந்தா.. தீபாவளிக்கு 10 நிமிஷத்துல ஸ்வீட், கார மிக்சர் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க.. -
3/4 கப் உளுந்து இருந்தா இந்த தால் மகாராணியை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
தீபாவளி பட்டாசு புகையால் கண் எரிச்சல், சரும அலர்ஜி, மூச்சுத்திணறலா? பாதுகாப்பாக இருக்க டாக்டர் கூறும் டிப்ஸ்! -
18 ஆண்டுகள் கழித்து மகரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. உங்க ராசி என்ன? -
செக் எழுதும்போது ஏன் தொகைக்கு பக்கத்தில் 'ONLY' என்று எழுதுகிறோம் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
ராகி ரவா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்!
Dhanteras 2026: தீபாவளி பண்டிகைக்கு முன் கொண்டாடப்படுவது தான் தந்தேராஸ். இந்நாளில் லட்சுமி தேவி மற்றும் குபேரனை வழிபடுவது செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைத் தருவதாக நம்பப்படுகிறது. முக்கியமாக இந்த புனிதமான நாளில் தங்கம், வெள்ளி, புதிய பொருட்களை வாங்குவது நல்ல அதிஷ்டத்தையும், செல்வத்தையும் தருவதாக பலரும் நம்புகின்றனர். அதுமட்டுமின்றி இந்நாளில் பரிசுகளை அல்லது தானங்களை செய்வார்கள்.

ஆனால் இந்நாளில் செய்யும் சில செயல்களிலும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தந்தேராஸ் அன்று சில பொருட்களை மற்றவர்களுக்குக் கொடுப்பது அல்லது தானமாக வழங்குவது நல்லதல்ல. இவ்வாறு செய்தால், அது வீட்டில் பண பிரச்சனைகளையும், கஷ்டத்தையும் கொண்டு வரும். அந்த வகையில் இந்த ஆண்டின் தந்தேராஸ் நவம்பர் 06 ஆம் தேதி வருகிறது. இந்த தந்தேராஸ் நாளில் எந்த மாதிரியான பொருட்களை மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடாது என்பது குறித்து இப்போது காண்போம்.
1. காலி பாத்திரங்கள் அல்லது காலி பர்ஸ்
தந்தேராஸ் நாளன்று பித்தளை, செம்பு, எஃகு போன்ற பாத்திரங்களை வாங்குவது நல்லது. ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். எப்போதும் காலி பாத்திரங்களை மற்றவர்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். வேண்டுமானால் அந்த பாத்திரத்தில் சிறிது அரிசி அல்லது ஏதாவது ஸ்வீட் வைத்து கொடுக்கலாம். அதுவும் பர்ஸை யாருக்காவது பரிசாக கொடுத்தால், அதை வெறும் பர்ஸாக கொடுக்காமல், அந்த பர்ஸில் 1 ரூபாய் அல்லது 5 ரூபாய் வைத்து கொடுங்கள். காலி பர்ஸ் அமங்களமானதாக கருதப்படுகிறது. எனவே இவற்றை தவிர்த்திடுங்கள்.
2. உப்பு கொடுக்கவோ அல்லது வாங்கவோ கூடாது
சமையலில் உப்பு இல்லையென்றால் எந்த உணவிற்கும் முழுமையான சுவை கிடைக்காது. அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத இந்த உப்புக்கு ஆன்மிக நம்பிக்கைகளிலும் தனி முக்கியத்துவம் உண்டு. குறிப்பாக, உப்பு மகாலட்சுமியுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே தந்தேராஸ் நாளில் யாருக்கும் உப்பு கொடுக்கக் கூடாது. அவ்வாறு கொடுத்தால், அது லட்சுமி தேவியை உங்கள் வீட்டில் இருந்து விரட்டுவதற்கு சமமாக கூறப்படுகிறது.
3. கருப்பு நிற பொருட்கள்
தன்தேராஸ் போன்ற மங்களகரமான நாட்களில் புதிய பொருட்களை வாங்குவதும், அன்பானவர்களுக்குப் பரிசளிப்பதும் வழக்கமாக உள்ளது. ஆனால், பரிசுப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும்போது அதன் நிறத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, கருப்பு நிறம் சில மங்களகரமான நிகழ்வுகளுக்குப் பொருத்தமற்றதாகக் கருதப்படுகிறது. எனவே, தந்தேராஸ் நாளில் மற்றவர்களுக்குக் கருப்பு நிற ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அல்லது வேறு பரிசுகளை வழங்குவதை எனவே எந்த ஒரு கருப்பு நிற பொருட்களையும் மற்றவர்களுக்கு வழங்குவதைத் தவிர்த்திடுங்கள்.
4. கூர்மையான பொருட்கள்
தந்தேராஸ் நாளில் கத்தி, கத்தரிக்கோல் மற்றும் பிற கூர்மையான பொருட்களை பரிசாக வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கூர்மையான பொருட்களைக் கொடுப்பது உறவுகளில் தூரத்தை உருவாக்குகிறது மற்றும் சண்டைகளுக்கு வழிவகுக்கிறது என்று கூறப்படுகிறது.
5. கண்ணாடி பொருட்கள்
ஜோதிடத்தில் கண்ணாடி ராகுவுடன் தொடர்புடையது. ராகு கஷ்டங்களையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் கிரகம். எனவே, தந்தேராஸில் கண்ணாடி ஜாடிகள், கண்ணாடிகள் அல்லது கண்ணாடி காட்சிப் பொருட்களை வாங்குவதையோ பரிசளிப்பதையோ தவிர்க்க வேண்டும்.
6. எண்ணெய் மற்றும் நெய்
எண்ணெய், நெய் போன்றவை சமையலுக்கு மட்டுமின்றி, பூஜைக்கு பயன்படுத்தப்படும் மங்களகரமான பொருளாகும். இந்த பொருட்களை தந்தேராஸ் நாளன்று வாங்குவதையோ அல்லது தானமாக கொடுப்பதையோ தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது செல்வ வளத்தைக் குறைப்பதாக என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
