Latest Updates
-
செக் எழுதும்போது ஏன் தொகைக்கு பக்கத்தில் 'ONLY' என்று எழுதுகிறோம் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
ராகி ரவா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 05, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வெற்றிகளை குவிக்கப் போறாங்களாம் -
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
18 ஆண்டுகள் கழித்து மகரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. உங்க ராசி என்ன?
Rahu Transit 2026 In Capricorn After 18 Years: ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. கிரகங்களில் ராகுவிற்கு என்று தனி ராசி எதுவும் இல்லை. இப்படிப்பட்ட ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார் மற்றும் இவர் எப்போதும் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிக்கக்கூடியவர். ஒரு ராசியில் நீண்ட காலமாக பயணிப்பதால் ராகுவின் நிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். தற்போது ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த ராகு 18 மாதங்கள் கழித்து டிசம்பர் மாதத்தில் ராசியை மாற்றவுள்ளார். இந்த பெயர்ச்சியின் போது ராகு மகர ராசிக்குள் நுழையவுள்ளார்.

ராகு மகர ராசிக்குள் சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் செல்கிறார். இந்த ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் நல்ல மாற்றத்தை காணவுள்ளனர். குறிப்பாக தொழிலில் நல்ல வளர்ச்சியையும், நிறைய லாபத்தையும் பெறுவார்கள். இப்போது 18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகுவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
ராகு பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இந்த பெயர்ச்சிக்கு பின் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய நட்புகளால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலைமை மேம்படும்.
தனுசு
ராகு பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். திடீரென்று நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலருக்கு வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும், முதலீடு தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
ராகு பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்கள் ராகுவால் சில நல்ல செய்திகளைப் பெறலாம். நீண்ட காலமாக கைக்கு வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



