தீபாவளிக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரண களமா இருக்கப்போகுது..

Mars Jupiter Ketu Conjunction Forms Trigrahi Yog In Leo: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றியும், மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தும் யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் சமீபத்தில் தான் சிம்ம ராசிக்குள் நுழைந்தார். அப்போது அந்த ராசியில் ஏற்கனவே கேது பயணித்து வந்ததால், சிம்ம ராசியில் கேது மற்றும் குருவின் சேர்க்கை நிகழ்ந்தது.

Mars Jupiter Ketu Conjunction Forms Trigrahi Yog In Leo These Zodiac Signs Should Be Careful After Diwali

இந்நிலையில் தீபாவளிக்கு பின் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் நவம்பர் 12 ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசிக்குள் நுழைவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் கேது, குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதுவும் டிசம்பர் 05 ஆம் தேதி வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் டிசம்பர் 05 அன்று கேது கடக ராசிக்குள் நுழைவுள்ளார். இப்போது சிம்ம ராசியில் குரு, கேது, செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

கடகம்

கடக ராசியின் 2 ஆவது வீட்டில் குரு, கேது, செவ்வாய் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வீட்டில் பதற்றம் அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும். உங்களின் திட்டங்களை மாற்ற வேண்டியிருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்து முயற்சித்தால், தாமதத்தையோ, தடைகளையோ சந்திக்க நேரிடும். எனவே பொறுமையாக இருப்பதோடு, அவசரப்படுவதை தவிர்க்க வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டில் குரு, கேது, செவ்வாய் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். அகங்காரம் உங்களுக்கு தீங்கை விளைவிக்கும். சிலர் விபத்துக்களை சிக்கவோ அல்லது காயம் ஏற்படவோ வாய்ப்புள்ளது. எந்த ஒரு முதலீடுகளையும் புத்திசாலித்தனமாக செய்யுங்கள். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு, கேது, செவ்வாய் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாவதால், இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் கவனக்குறைவாலும், கவனச்சிதறலாலும் சிக்கல்களை சந்திக்க நேரிடும். அவசரப்படாமல் எதையும் பொறுமையாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும். அரசு தொடர்பான வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்

மீன ராசியின் 6 ஆவது வீட்டில் குரு, கேது, செவ்வாய் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. அதுவும் இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாம் கட்டம் நடக்கிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலையுடன் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மிகுந்த உடல் சோர்வை சந்திப்பீர்கள். ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தால், அவற்றை புறக்கணிக்காதீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, November 5, 2026, 18:05 [IST]
Desktop Bottom Promotion