தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..

Posted By:

Diwali Special Mutton Kuzhambu Recipe In Tamil: தீபாவளி நாளன்று அதிகாலையில் மட்டனை வாங்கி வந்து வீடே மணக்கும் அளவில் குழம்பு செய்து, இட்லி வேலை வைத்து சாப்பிடும் வழக்கம் பெரும்பாலான வீடுகளில் இருக்கும். உங்கள் வீட்டிலும் அப்படியொரு வழக்கம் உள்ளதா? அப்படியானால் தீபாவளிக்கு மட்டன் குழம்பை வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், சற்று வித்தியாசமாக மசாலா அரைத்து தேங்காய் பால் ஊற்றிமட்டன் குழம்பு செய்யுங்கள்.

Diwali Special Recipes How To Make Mutton Kuzhambu

உங்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தீபாவளி ஸ்பெஷல் மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* மட்டன் - 1 கிலோ
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

குழம்பு தாளிப்பதற்கு...

* கடலை எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 2
* கல்பாசி - சிறிது
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* ஊற வைத்த மட்டன்
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த மசாலா
* கெட்டியான தேங்காய் பால் - 150 மிலி
* கொத்தமல்லி - சிறிது

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி
* தக்காளி - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 1
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் மட்டனை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர் சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, கல்பாசி, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்த மட்டனை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பட்டை, கிராம்பு, மிளகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* மட்டனை 5 நிமிடம் வேக வைத்த பின், மீண்டும் கிளறி விட்டு, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த மசாலா சேர்த்து கிளறி, கெட்டியான தேங்காய் பால் ஊற்றி, சிறிது கொத்தமல்லியைத் தூவி நன்கு கிளறி, தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 6-7 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து குழம்பை கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் கொத்தமல்லியை சேர்த்து 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான தீபாவளி மட்டன் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 5, 2026, 23:10 [IST]
Desktop Bottom Promotion