தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..

Sun Transit In Scorpio 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். சிம்ம ராசியின் அதிபதியான சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் தற்போது சூரியன் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி முடிந்து நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார்.

Sun Transit In Scorpio 2026 These Zodiac Signs Will See Massive Growth In Career After Diwali

சூரியன் இந்த விருச்சிக ராசியில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை இருந்து பின் தனுசு ராசிக்குள் நுழைவார். இந்த விருச்சிக ராசியில் சூரியன் நுழைவதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் கொடிகட்டி பறப்பார்கள். இப்போது சூரியன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காணப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். முக்கியமாக இவர்கள் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பை பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், நல்ல வேலை வாய்ப்புகளும் தேடி வரும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த சூரியன் பெயர்ச்சியானது மங்களகரமானதாக இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தால் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். இதன் மூலம் நிதி நிலை நன்றாக இருக்கும்.

மகரம்

மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பல ஆசைகள் நிறைவேறும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்து திடீரென்று எதிர்பாராத பணம் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, November 5, 2026, 23:47 [IST]
Desktop Bottom Promotion