தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க..

Diwali 2026 Skin Care Tips In Tamil: தீபாவளி நாளில் எந்த அளவிற்கு பட்டாசுகளும் புத்தாடைகளும் முக்கியமோ, அதே அளவிற்கு முகப்பொலிவும் முக்கியம். இதனால் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பே பலர் அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல், ஃபேஸ் பேக் போன்ற சருமப் பராமரிப்பு சிகிச்சைகளைச் செய்து கொள்வார்கள். ஆனால் இப்படி ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து தான் முகப் பொலிவை மேம்படுத்த வேண்டும் என்பதில்லை.

Diwali 2026 Skin Care 5 Traditional Ubtan Face Packs For Fair Skin

நம் வீட்டில் உள்ள மஞ்சள், கடலை மாவு, சந்தனம், தயிர், பால் போன்ற பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தாலே, பார்லர் சென்று ஃபேஷியல் செய்தது போன்ற முகப்பொலிவை பெறலாம். இந்த தீபாவளிக்கு சருமப் பராமரிப்பிற்காகப் பெரிய தொகையைச் செலவிடாமல், எளிய வழியில் சரும அழகை மேம்படுத்த நினைக்கிறீர்களா? அப்படியானால், தீபாவளிக்கு முன்பு சருமத்திற்கு புத்துணர்ச்சியும் பொலிவான தோற்றமும் அளிக்க உதவும் 5 ஃபேஸ் பேக்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. கடலை மாவு மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

2. சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்துக் கொண்டு, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

3. முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியை எடுத்துக் கொண்டு, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்றது. வறண்ட அல்லது சென்சிடிவ் சருமத்தினர் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும்.

4. பால் மற்றும் க்ரீம் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் க்ரீம், 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

5. அரிசி மாவு மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். ஆனால் அதிகமாக அழுத்தி தேய்த்துவிட வேண்டாம். இல்லாவிட்டால் சருமத்தில் எரிச்சல் ஏற்படலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, November 5, 2026, 21:46 [IST]
Desktop Bottom Promotion