எம தீபத்தை எப்போது ஏற்ற வேண்டும்? எந்த இடத்தில் மற்றும் திசையில் ஏற்றி வைக்க வேண்டும்?

Yama Deepam 2026: இந்தியாவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று தான் தீபாவளி. இந்த தீபாவளி பண்டிகையானது பட்டாசுகள், பலகாரங்கள் மற்றும் புத்தாடையுடன் மட்டுமின்றி, குடும்பத்தினரின் நல்ல ஆயுள், செல்வ செழிப்பு, வளமான வாழ்க்கையைத் தரும் பண்டிகை ஆகும். இந்த தீபாவளி பண்டிகை இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு நாள் முதல் 5 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. அதில் தீபாவளி பண்டிகையின் முதல் நாள் கொண்டாடப்படுவது தான் தந்தேராஸ் என்னும் தன திரயோதசி. இந்நாளில் எமதர்ம ராஜாவுக்காக எமதீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ளது.

Yam Deepam 2026 When Is Yama Deepam Date Time Significance And How To Light Diya

அந்த வகையில் தந்தேராஸ் என்னும் எம தீபம் ஏற்றி வழிபடும் நாள் நவம்பர் 06 ஆம் தேதி வருகிறது. இந்த தந்தேராஸ் நாளன்று எந்த நேரத்தில் எம தீபம் ஏற்ற வேண்டும்? எந்த திசையில் மற்றும் எந்த இடத்தில் எம தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்? எம தீபம் ஏற்றுவதற்கான சரியான முறை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து இப்போது விரிவாக காண்போம்.

எம தீபம் 2026 தேதி மற்றும் நேரம்

எம தீபம் 2026 தேதி : நவம்பர் 06, வெள்ளிக்கிழமை

திரயோதசி திதி துவக்கம் : நவம்பர் 06 காலை 11.59 மணி முதல்

திரயோதசி திதி முடிவு : நவம்பர் 07 காலை 11.44 மணி வரை

எம தீபம் ஏற்ற நல்ல நேரம் : மாலை 05.30 முதல் 06.30 வரை

எம தீபத்தில் எந்த திசையில் மற்றும் எந்த இடத்தில் ஏற்ற வேண்டும்?

நம்பிக்கைகளின் படி, எம தீபத்தில் வீட்டின் பிரதான நுழைவாயிலில் தெற்கு திசையை நோக்கி எம தீபம் ஏற்ற வேண்டும். ஏனெனில் தெற்கு திசையானது எமராஜாவுக்கு உரிய திசையாக கருதப்படுகிறது. எனவே இந்நாளில் எம தீபம் ஏற்றுவது நல்லதாக கருதப்படுகிறது.

எம தீபத்தை ஏற்றும் முறை

* எமதீபம் ஏற்றும் முன் வீட்டையும், தீபம் வைக்கும் இடத்தையும் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு மண் விளக்கை எடுத்து, அதில் பஞ்சு திரியையும், கடுகு எண்ணெயையும் பயன்படுத்தி நிரப்ப வேண்டும்.
* அதன் பின் அதை தெற்கு திசையை நோக்கி வைத்து, குலதெய்வம், இஷ்ட தெய்வத்தை மனதான வழிபாடு செய்து, குடும்ப உறுப்பினர்கள் நல்ல ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியம் மற்றும் அமைதியை வேண்டி எமதர்மனை வழிபாடு செய்யுங்கள்.

எம தீபம் ஏற்றுவதால் பெறும் நன்மைகள்

தந்தேராஸ் நாளன்று எம தர்மனுக்கு எம தீபம் ஏற்றுவது அகால மரண பயத்தில் இருந்து விடுவிக்கும். அதுவும் இந்நாளில் எதமர்னை நினைத்து விளக்கேற்றினால், அது யமதர்மனை சந்தோஷமடையச் செய்து, குடும்பத்திற்கு அவரது ஆசியை பெற்று தரும். சிலருக்கு அகால மரண பயம் அல்லது விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற பயம் இருக்கும். ஆனால் எம தீபத்தை ஏற்றுவதன் மூலம் அந்த பயம் நீங்கும். முக்கியமாக குடும்பத்தில் அகால மரணம் அடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எம தீபம் ஏற்றப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, November 6, 2026, 17:09 [IST]
Desktop Bottom Promotion