புதன்-சுக்கிரனால் உருவாக்கப்படும் லட்சுமி நாராயண யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?

தீபாவளி பண்டிகையானது கொண்டாட்டங்கள் நிறைந்தது மட்டுமல்ல ஆன்மீகரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜோதிடக் கணிப்புகளின்படி, 2026-ஆம் ஆண்டின் தந்தேராஸ் பண்டிகையானது சில ராசிகளில் பிறந்தவர்களுக்குச் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும். இந்த நாளில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் 'லட்சுமி நாராயண ராஜயோகம்' உருவாக வாய்ப்புள்ளது. இது தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

Mercury-Venus Conjunction Forms Lakshmi Narayan Rajayoga List of Lucky Zodiac Signs

ஜோதிடத்தில், கிரகங்களின் இளவரசரான புதன் அறிவு, தகவல் தொடர்பு, வணிகம் மற்றும் தர்க்கரீதியான சிந்தனையுடன் தொடர்புடையது. அதே சமயம் சுக்கிரன் செல்வம், ஆடம்பரம் மற்றும் அன்பு ஆகியவற்றின் அதிபாதியாக இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இணையும்போது, ​​அந்தச் சேர்க்கை 'லட்சுமி நாராயண யோகம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த யோகம் 2026-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதியன்று துலாம் ராசியில் உருவாகிறது. இதனால் கூடுதல் நன்மைகளை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு 'லட்சுமி நாராயண ராஜயோகம்' நிதி மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் சாதகமான முன்னேற்றங்களைக் கொண்டுவரும். முதலீடுகள் எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்கும், அதேசமயம் பணியில் இருப்பவர்கள் தங்கள் உழைப்பிற்கான அங்கீகாரத்தைப் பெறுவதுடன், புதிய பொறுப்புகளையும் பெறக்கூடும். புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் உருவாகலாம். பொருளாதாரநிலை கடந்த காலத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பும் பல விஷயங்களை அடைய முடியும். உங்களைப் பற்றி பலருக்கு இருந்த தவறான எண்ணங்கள் முடிவுக்கு வரும்.

திருமண வாழ்க்கையில் நெருக்கமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் அவர்களின் செயல்திறன் அதிகரிப்பதால், பல்வேறு சாதனைகளும், அங்கீகாரமும் தேடிவரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த 'லட்சுமி நாராயண ராஜயோகம்' நிகழும் காலத்தில் நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படலாம், அதே வேளையில் நீண்டகாலமாக முடங்கியிருந்த பணம் மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த அரிய சேர்க்கையால் தொழிலில் நிலையான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், இதனால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைப்பது சாத்தியமாகும். அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களும் பல நன்மைகளைப் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அவர்கள் நீண்ட காலமாக தேடிக்கொண்டிருந்த மன அமைதி கிடைக்கும். அவர்களின் நீண்ட கால லட்சியங்கள் இப்போது நிறைவேறும். மற்றவர்களின் மீதிருந்த மனக்கசப்புகள் முடிவுக்கு வருவதால் அவர்கள் குடும்பத்தில் அமைதி திரும்பும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த காலத்தில் அவர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த விருப்பங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது. வேலையில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். அதேபோல், வேலை மாற்றத்தைத் திட்டமிடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது நிறைவடையும். உங்கள் வேலையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை அடைய இந்த காலகட்டம் உங்களுக்கு உதவும்.

இந்த காலம் உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள், மேலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்வார்கள். வணிகத்தைப் பொறுத்தவரை, பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் லாபம் ஈட்ட இது சிறந்த காலகட்டமாக இருக்கும். மொத்தத்தில் இது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே சிறப்பான பலன்களை அளிக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, November 6, 2026, 17:57 [IST]
Desktop Bottom Promotion